Wednesday 2 September 2009

எல்லாம் தெரிந்தது போல்

எல்லாம் தெரிந்ததுபோல் இருக்கிறது
மது அருந்தும் பழக்கத்தால்
கல்லீரல் கரைபட்டு போகும்
இதயம் இடியென துடிக்கும்
புகை பிடித்து பார்ப்பதால்
நுரையீரல் விரைத்து நோகும்
உதடு மட்டுமின்றி
ரத்தம் கூட தன் நிறம் மாற்றும்
அளவுக்கும் நேரத்திருக்கும்
உட்படாத உணவு
அடிவயிறை அரித்து பார்க்கும்
கவனமின்றி போயின்
கலை இழந்த கண்களும்
வழுவிழந்த பல்லும் எலும்பும் மிச்சம்
தண்ணீர் இல்லா சிறுநீரகம்
பிணைய கைதியாய்
நல் எண்ணம் இல்லையேல்
மூளை முரண்டு பிடிக்கும்
மனம் மரத்து போகும்
உண்மை ஒழுக்கம் இல்லா வாழ்க்கை
கற்பில்லாத காதல்
உயிரை உருக்குலைய செய்யும்
ஏனோ எல்லோர்க்கும்
எல்லாம் தெரிந்தது போல்
மட்டுமே இருக்கிறது.

ஆசைப்படு அவதிப்படாதே
ஆசை துன்பம் தருமெனில்
துயரபடாமல் உயரம் ஏது?
கர்வப்படு கருணை இழக்காதே
பொறாமைப்படு பொசுங்கிப் போகாதே
இரக்கபடு இழந்து நிற்காதே
கோபப்படு கொன்று விடாதே
காதலிக்க கற்று கொள்
கரைந்து போகாதே
சாந்தமாக இரு செத்து போகாதே
ஏனோ எல்லோர்க்கும்
எல்லாம் தெரிந்தது போல்
மட்டுமே இருக்கிறது
எவையும்
செயல்படுத்த முடியாமல்
புதைந்துபோய் கிடக்கிறது.

8 comments:

Vidhoosh said...

//ஏனொ எல்லொர்க்கும்
எல்லாம் தெரிந்தது போல்
மட்டுமே இருக்கிறது //

well said and very beautifully said sir,
vidhya

தினேஷ் said...

எல்லாம் தெரிந்தது போல்
மட்டுமே இருக்கிறது
எவையும்
செயல்படுத்த முடியாமல்
புதைந்துபோய் கிடக்கிறது.


பிராமதம்...

Thekkikattan|தெகா said...

:-) எல்லாமே தெரிந்தது போல் ...

Radhakrishnan said...

1. மிக்க நன்றி வித்யா அவர்களே.

2. மிக்க நன்றி சூரியன் அவர்களே.

3. மிக்க நன்றி தெகா அவர்களே.

ப்ரியமுடன் வசந்த் said...

//நல் எண்ணம் இல்லையேல்
மூளை முரண்டு பிடிக்கும்
மனம் மரத்து போகும்
உண்மை ஒழுக்கம் இல்லா வாழ்க்கை//

உண்மைதான்..

ரொம்ப நல்லா வந்துருக்கு கவிதை

Radhakrishnan said...

மிக்க நன்றி வசந்த் அவர்களே.

Shakthiprabha (Prabha Sridhar) said...

//எல்லாம் தெரிந்தது போல்
மட்டுமே இருக்கிறது
எவையும்
செயல்படுத்த முடியாமல்
புதைந்துபோய் கிடக்கிறது.//

Simply WOW

venkat said...

ஆசைப்படு அவதிப்படாதே