Monday 14 September 2009

தேவதை வந்தாள் வரம் தர தவித்தாள்

ஜெஸ்வந்தி அவர்கள் தேவதையை வந்து அழைத்துச் செல்லுமாறு அழைப்பு விடுத்தார்கள். நானும் சென்று தேவதையை அழைத்து வந்துவிட்டேன். எனக்கு தேவதையிடம் பத்து வரங்கள் கேட்க விருப்பமில்லை. ஒரே வரம் கேட்கலாம் என நினைத்து

''தேவதையே உன்னைப் போல் பிறருக்கு வரங்கள் அருளும் பாக்கியம் எனக்கு கிட்ட வேண்டும்'' என சொன்னேன்.

என்ன நினைத்தாளோ, தேவதை எங்கு போனாள் எனத் தெரியவில்லை!

எவரையும் வந்து அழைத்துச் செல்ல என்னிடம் அந்த தேவதை இப்போது இல்லை, மிகவும் வருந்துகிறேன்.











6 comments:

கிரி said...

:-))))

கலகலப்ரியா said...

இதுதான்.. பார்த்த பொருளை எல்லாம் விரலை வச்சு தங்கமாக்கினா... தங்கம் வேண்டாம்.. விரல் வேண்டும்னு கேட்ட மாதிரி இல்ல இருக்கு... ஏன் சார்.. தேவதையே வந்திடிச்சாம்.. அப்புறம் என்ன பேராசைடா சாமி...

Radhakrishnan said...

மிக்க நன்றி கிரி மற்றும் கலகலப்ரியா அவர்களே.

ஹா ஹா, விரல், தங்கம் ரசித்தேன். பேராசை பெரு நஷ்டம் ஆகிவிட்டது. :(

நமக்கு ஒரு போட்டி உருவாகிவிடக் கூடாது எனும் எண்ணத்தில் கூட தேவதை ஓடியிருக்கலாம் அல்லவா? நான் தேவதையின் வேலைப்பளுவினை குறைக்க எண்ணினேன், என்னை தேவதை தவறாக புரிந்து கொண்டு மறைந்துவிட்டார்.

அந்த தேவதை உங்களைத் தேடி வந்தாலும் வந்திருக்கலாம் கலகலப்ரியா, விட்டுவிடாதீர்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ரசித்தேன். தேவதையிடம் உங்களுக்கு நம்பிக்கை இல்லை நண்பரே

Radhakrishnan said...

எல்லாருமே நன்றாக இருந்திட வேண்டுமென எல்லாருமே வேண்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள். எல்லாமுமே நன்றாக இருந்திட்டால் எதுவுமே சுவாரஸ்யமாக இருக்காது எனவும் சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே எனவும், தேவதைகள், கடவுளர்கள், எல்லாம் பார்த்துக் கொள்வார்கள் என நம்பிக்கைகளை விதைத்த வண்ணம் இருக்கிறார்கள்.காலங்காலமாக இதைத்தான் நானும் கற்றேன், கற்றுத் தந்து கொண்டிருக்கிறேன். ஆனால் தவறு பண்ணுகிறோமோ என மனம் அல்லாடுகிறது.

எனது தேவைகள் என்னவெனத் தெரியாத கடவுளோ, தேவதையோ நிச்சயம் இருக்க முடியாது. இருப்பினும் நான் மன்றாடிக் கேட்டாலும், கேட்காமல் போனாலும், எனது தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் எதுவும் அவர்களுக்குக் கிடையாது.

எனது கடமையை சரிவர நான் செய்தாலன்றி, எனக்கு எந்த தேவதையும் துணையாய் வரப்போவதில்லை என்பது மட்டுமே நான் அறிந்து கொண்ட சத்தியம்.

வரம் கொடு என கேட்பதைக் காட்டிலும், வரம் கொடுக்கும் நிலையில் நானிருந்தால் கொடுத்த வரத்தை நிறைவேற்றுவதில் நிச்சயம் அக்கறை செலுத்துவேன். அதன் காரணமாகவே அந்த வரம் கேட்டேன். இதில் எனக்கு தேவதையிடம் நம்பிக்கை இல்லை என்றெல்லாம் எதுவுமில்லை.

வெறும் கனவுகளிலும், கற்பனைகளிலும், விளையாட்டுச் சிந்தனைகளிலும் சஞ்சாரம் செய்து தொலைகின்ற காலம்தனை வாய் மூடி மெளனியாய் கண்கள் கலங்கிடப் பார்த்துத் துடிக்கிறேன்.

மீண்டும் தேவதையை நோக்கி கேட்கிறேன். ''தேவதையே உன்னைப் போல் பிறருக்கு வரங்கள் அளிக்கும் பாக்கியம் எனக்கு கிட்ட வேண்டும்'' பிறருக்கு என்றுதான் கேட்டேன், எனக்கென்று எதுவும் இல்லை.

மிக்க நன்றி ஜெஸ்வந்தி அவர்களே.

Kavinaya said...

நல்ல வரம்தான் கேட்டிருக்கீங்க :))