Wednesday 9 September 2009

உனக்கென இருக்கும் உடல்

உயிரை உடலுக்குள் எங்கு
வைத்து இருக்கிறாய்
இந்த உடல் வளர வளர
உயிர் சுருங்கிக் கொண்டே வருமோ
உடல் வளரும் முன்னே
சுருங்கிப் போன
உயிர்களும் உண்டே இங்கு!

வெளியில் விடுதலையுடன் இருந்த
உயிரையா உடலுக்குள் வைத்தாய்
வெளிச் செல்ல வேண்டுமென்றா
தினமும் போராடுகிறது
இருக்குமிடம் அறியாத எனக்கு
அதன் போராட்டம் புரிவதில்லை!

ஆதியும் அந்தமும் இல்லாத
உயிரினை எங்ஙனம் படைத்தாய்
உறுப்புகள் உடல் பிரிகையில்
உயிரும் துணை சென்று வருமோ
உன்னை உணர்ந்திட
உடல் தேடி வருவதேன்!

உயிருக்கு உன்னை உணர வைக்கும்
ஒரு வழி காட்டியது இவ்வுடல்
புதைக்கவோ எரிக்கவோ வேண்டாம்
மீண்டும் அதே உயிர்
உணர்தல் தொலைத்து உடல்
தேடி வரலாம் பாதுகாத்து வையுங்கள்.

7 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

க.பாலாசி said...

//வெளியில் விடுதலையுடன் இருந்த
உயிரையா உடலுக்குள் வைத்தாய்
வெளிச் செல்ல வேண்டுமென்றா
தினமும் போராடுகிறது
இருக்குமிடம் அறியாத எனக்கு
அதன் போராட்டம் புரிவதில்லை!//

நல்லாருக்கு அன்பரே...இந்த வரிகள்...

மிகவும் ரசனையான வரிகள் உங்கள் கவிதையில்...

வாழ்த்துக்கள் அன்பரே...

vasu balaji said...

வித்தியாசமான சிந்தனை. நல்லாருக்கு.

Radhakrishnan said...

அனைவருக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

//அதன் போராட்டம் புரிவதில்லை!//

அதனால் தான் நானெல்லாம் ரொம்ப யோசிப்பதில்லை. :)

Radhakrishnan said...

ஹா ஹா! இதற்கெல்லாம் யோசனை எதுவும் அவசியமில்லை. மிக்க நன்றி சின்ன அம்மிணி அவர்களே.

Sivamjothi said...

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும்.
குருவை நேரில் சந்தியுங்கள்,
உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய்
இருக்கும் கர்ம வினைகளை தவம் செய்து அழியுங்கள்.
மேலும் அறிய இங்கே சொடுக்கவும்