Thursday 10 September 2009

காதல்

உன்மேல் எனது ஈர்ப்பு
உயிரின் பாதுகாப்பு
தொட்டதற்கெல்லாம் குற்றம்
தொலையாது மனம் சுற்றும்
விட்டுவிட்டு போக நினைக்கையில்
கால்களுக்கும் மனம் இருக்கும்
வாசல் கடக்காது
கட்டுப்பட்டே நிற்கும்!

என்ன கொணர்ந்தேன் என
கைகளைப் பார்த்துக்கொண்டே
இதயத்தில் நுழைவாய்
அன்புதனை விடவா
பொருள் பெரிதென்றால்
பொருள்தான் பெண்ணின் அழகு
பொருள்படச் சொல்வாய்
புரிந்தவனாக நான் இல்லை!

காதலை மனதில் பூட்டிக் கொண்டால்
கண்கள் எப்படி சொல்லிக் காட்டும்
ஊடலின் வலி என்னுள் விதைத்து
பூட்டினை உடைப்பாய் கட்டியே அணைத்து
விழிகளில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகள்
விருப்பமில்லாத விளக்கங்கள் சொல்லி வழியும்
பொருளில் இல்லை காதல் என்பதை
உனது புன்னகைச் சொல்லிக் கிறங்கும்

எனது ஆயுள் உன்னில் அடங்கும்
பிள்ளைப்பேறினால் உலகம் இருக்கத் தொடரும்
கைகள் இணைத்து நடந்தே செல்கையில்
ஒருவருக்கொருவர் முதுமையில் முதுகில் சாய்கையில்
எப்படி வாழ்ந்தோம் என எண்ணியே
முகத்தோடு முகம் ஒட்டுகையில்
இறைவனாக நாம் இயங்க வைத்த
காதலை கணக்கிட்டு சொல்லவும் கூடுமா?
உன்மேல் எனது ஈர்ப்பு
நமது உயிரின் பாதுகாப்பு!

(நம்பிக்கை குழுமம் நடத்திய போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கவிதை)

7 comments:

Vidhoosh said...

சார், ஒரு நிமிஷம் அப்படியே உரைந்து போய் மீண்டும் கவிதை படிக்கிறேன். மீண்டும் உறைகிறேன்.

அருமை சார்.

--வித்யா

குடந்தை அன்புமணி said...

//எப்படி வாழ்ந்தோம் என எண்ணியே
முகத்தோடு முகம் ஒட்டுகையில்
இறைவனாக நாம் இயங்க வைத்த
காதலை கணக்கிட்டு சொல்லவும் கூடுமா? //

ரசித்த வரிகள்...
அருமையாக சொல்லியிருக்கீங்க... வாழ்த்துகள்... பரிசு பெற்றதற்கும்...

vasu balaji said...

நல்லாருக்கே! சபாசு.

நையாண்டி நைனா said...

அருமை அருமை....

(அடுத்து எதிர் கவிதை வட்டத்துக்குள்ளே உங்களையும் கொண்டு வந்து வச்சிர வேண்டியது தான்)

க.பாலாசி said...

//முதுமையில் முதுகில் சாய்கையில்
எப்படி வாழ்ந்தோம் என எண்ணியே
முகத்தோடு முகம் ஒட்டுகையில்
இறைவனாக நாம் இயங்க வைத்த
காதலை கணக்கிட்டு சொல்லவும் கூடுமா? //

அருமையான வரிகள் அன்பரே....

கவிதை முழுதும் அருமை...முதல் பரிசு கிடைத்ததில் ஆச்சரியமில்லை....

கலகலப்ரியா said...

ரொம்ப சிறப்பாக இருக்குங்க.. வாழ்த்துக்கள்..

Radhakrishnan said...

அனைவருக்கும் மிக்க நன்றி.

சிறப்பு பரிசுதான் கிடைத்தது, முதல் பரிசு கிடைக்கவில்லை.

எதிர்கவிதைனு சொல்லி எல்லாருமே நேர்கவிதைதான் எழுதுறீங்க!அதாவது அதே அர்த்ததோட வேற கருப்பொருள். எதிர்கவிதை நீங்க எப்படி எழுதறீங்கனு இனிமேதான் பார்க்கனும்.