Saturday 16 October 2010

சிந்து சமவெளி - திரைப்படம்

ஒழுக்கத்துடன் வாழ்வதுதான் சிறந்த நாகரிகம். ஆஹா, எத்தனை அட்டகாசமான வாக்கியம்.

எது எது எல்லாம் ஒழுக்கம்? இந்த ஒழுக்கம் என்பதற்கான வரையறை எது? எவரேனும் தெரிந்தால் பட்டியல் இடுங்கள். அந்த பட்டியலை படித்து தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது.

அது இருக்கட்டும், இந்த படத்துக்கு வருவோம்.  ஒழுக்கத்தை வலியுறுத்துவதற்கு ஒழுங்கீனத்தை அல்லவா காட்ட வேண்டி இருக்கிறது!

ஒழுக்கத்தை பற்றி சொல்ல ஒழுக்கத்தின் வலிமையை அல்லவா படமாக்கி இருக்க வேண்டும். ஒழுக்கம் தவறி போன விசயம் சொன்ன சிந்து சமவெளி! இந்த படத்தை எழுதுவதன் மூலம் ஒழுக்கம் தவறி போன எனது எழுத்து.

இந்த திரைப்படம் சகித்து கொள்ள முடியாத மன வலிதனை தந்து சென்றது. இது ஒரு ரஷ்ய நாவலின் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாகவும் நூறு சதவிகிதம் கற்பனை அல்ல என சொல்லும்போதே உலகில் இத்தகைய கொடுமைகள் பரவலாக நடந்து கொண்டிருப்பதை நமக்கு காட்டுவதற்குதான் என புரிந்து கொள்ள முடிகிறது. மருமகள்-மாமன் உறவு கொச்சைபடுத்தபட்டு இருக்கிறது என்பதை விட உடல் இச்சைக்கு அடிமையாகி போன இரண்டு மனிதர்களின் அலங்கோல வாழ்வு தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. காமம் மட்டுமா ஒழுக்கம், ஒழுங்கீனத்தை சுட்டி காட்டும்  கருவி?

ஊர் உலகில் அரசால் புரசலாக நடக்கும் விசயங்களை அப்பட்டமாக படத்தில் காட்டும்போது இயக்குநர்களின் தைரியம் வெகுவாக பாராட்டபடுகிறது. உதாரணமாக பருத்தி வீரன் படத்தை சொல்லலாம். ஒரு கிராமத்தை அப்படியே கொண்டு வந்ததாக சொல்லி கொண்டார்கள். அதுவும் ஒழுக்கம் கெட்ட விசயத்தை சொன்ன ஒரு படம் தான்.

இப்பொழுது ஊர் உலகில் நடக்கிறது என்பதற்காக முழு நிர்வாண படங்களை எடுத்தால் எதற்கு அதற்கு தடை விதிக்க வேண்டும்? அது ஒழுங்கீனங்களை தானே சுட்டி காட்டுகிறது! என்ன வரையறை வைத்து கொண்டு எப்படி வாழ்க்கை அமைகிறது? விசித்திர எண்ணம். வக்கிர எண்ணம். வித்தியாச உலகம்.

இது மட்டுமல்ல. இலக்கியங்கள், காவியங்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்ட விசயங்களின் அடிப்படையில் தான் பிரபலமாகி இருக்கிறது. காலம் காலமாக நாம் செய்து கொண்டு வரும் தவறு இதுதான். தவறு செய்யாத மனிதனே இருக்க முடியாது என்கிற கோட்பாடுதனை வைத்து கொண்டு தவறு செய்யும்போதெல்லாம், தவறி போகும் போதெல்லாம் நான் மட்டுமா செய்கிறேன், இந்த உலகில் எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள் தெரியுமா என சப்பை கட்டு கட்டும் மனிதர்கள் மிகவும் அதிகமாகவே இருக்கிறார்கள், தென்படுகிறார்கள்.

படம் தொடங்குகிறது. சிறிது நேரத்திற்கெல்லாம் கதையை யூகித்து கொள்ள முடிகிறது. எப்படி யூகம் செய்ய முடிந்தது. இதைத்தான் பல படங்களில் சின்ன சின்ன காட்சிகளாக வைப்பார்கள். ஆனால் இதுவே முழு படமாகி வந்து இருக்கிறது.

தங்கள் பாதையில், கொள்கையில் இருந்து தவறி போனபின்னர், தவறியே வாழ்பவர்கள்  அவ்வாறு வாழும் போது குற்ற உணர்வுடன் வாழ்ந்து இருந்தால் மட்டுமே அதை தவறு என உணர்வார்கள். இல்லையெனில் மீண்டும் மீண்டும் தவறு புரிந்து கொண்டேதான் இருப்பார்கள். தவறுகளுக்கு இடையில் சிறிய இடைவெளிகள் இருக்கலாம். இதனால்தான் தவறு செய்பவர்களை மொத்தமாக அழித்துவிட வேண்டும், அல்லது அவர்களாகவே அழித்து கொள்ள வேண்டும். இதில் கருணை, தாட்சண்யம் எல்லாம் பார்த்து கொண்டிருக்க கூடாது. தப்பு  என தெரிந்து செய்பவர்கள்தான் இவ்வுலகில் அதிகம் இருக்கிறார்கள்.

இந்த இரண்டு விசயத்தை படத்தில் வைத்து இருக்கிறார்கள். கதையில் வரும் மருமகள் பாத்திரம் குற்ற உணர்வுடன் இருந்தாரா என கண்டு கொள்ள இயலவில்லை. அந்த மருமகள் பாத்திரம் ஒரு கதையினை படித்த போது தனது தவறு என எப்படி தெளிந்து கொள்ள முடிகிறது என்பதுதான் பல மனிதர்கள் செய்யும் சராசரி தவறு. பிறர் சுட்டிக்காட்டும்போது தவறாக தெரியாத விசயம் தவறு என தெரிகிறதா? அல்லது இப்படி வாழ்ந்துவிட்டோமே என வேதனை உயிரை பிடுங்கி எரிகிறதா? பலருடைய வாழ்க்கையில் எதுவுமே நடக்காத மாதிரிதான் செல்கிறது.

தொடரும் பரிதாபங்கள். தொடரும் கொலைகள். படித்தவர், படிக்காதவர், அறிவில் சிறந்தவர் என அனைவரும் தடுமாறும் இந்த காமம் அத்தனை கொடுமையானதா! ஆமாம் என்றுதான் இலக்கியங்கள், பலரது வாழ்க்கை, பலரது படைப்புகள் சொல்லி செல்கின்றன.

ஒழுக்க கேடான விசயங்களில் இருந்து தப்பித்து வாழ தெரிந்தால் நாகரிகம் மிகவும் சிறப்பு உடையதாக இருக்கும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.

எது எதுவெல்லாம் ஒழுக்கம்? பட்டியலை படிக்க ஆசையாகத்தான் இருக்கிறது.

நன்றி சாமி.

8 comments:

R. Gopi said...

இந்தப் படம் நான் பார்க்கவில்லை. ஆனால் இது குறித்து நான் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது பார்க்கவும்.

http://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_7091.html

Radhakrishnan said...

மிக்க நன்றி கோபி. இதோ படித்து விடுகிறேன்.

Unknown said...

//ஒழுக்கத்தை பற்றி சொல்ல ஒழுக்கத்தின் வலிமையை அல்லவா படமாக்கி இருக்க வேண்டும். ஒழுக்கம் தவறி போன விசயம் சொன்ன சிந்து சமவெளி! இந்த படத்தை எழுதுவதன் மூலம் ஒழுக்கம் தவறி போன எனது எழுத்து/// அருமை..

இந்த படத்தை பார்க்க முடிவெடுத்தற்காகவே உங்களைப் பாராட்டலாம்.. ஏனிந்த தற்கொலை முயற்சி?

எஸ்.கே said...

இது போன்று எடுப்பவர்கள் சொல்லிக்கொள்வதென்னவோ சமூக சீர்தீர்த்தருத்திற்காக என்றுதான்! ஆனால் காண்பிப்பது!?

வருண் said...

***இப்பொழுது ஊர் உலகில் நடக்கிறது என்பதற்காக முழு நிர்வாண படங்களை எடுத்தால் எதற்கு அதற்கு தடை விதிக்க வேண்டும்?***

The so called liberals are two kinds!

* One kind is half-baked.

* The other kind is that my life got screwed up and nobody can do anything about it. It is not my fault it got screwed up. So, as long as I live I do my best to screw up the society!

I dont know which category saamy belongs to. Probably the second one.

Anyway, nice review, V R! :)

Radhakrishnan said...

மிக்க நன்றி பாரத். படத்தின் பெயரை பார்த்து சரித்திர படமாக இருக்கும் என நினைத்து விட்டேன்.

மிகவும் சரியாக சொன்னீர்கள் எஸ்.கெ. மிக்க நன்றி.

அதுவும் சரிதான். மிக்க நன்றி வருண்.

Unknown said...

///ஒழுக்கத்துடன் வாழ்வதுதான் சிறந்த நாகரிகம்///
apa panbaadunu solluvangaley adhu enna.?
panbaadukum naagarigadhukum enna vithiyasam?

Radhakrishnan said...

ஹா ஹா பிள்ளைவால்.

ஒழுக்கம் என்றால் எது என நான் ஒரு கேள்வி எழுப்பி இருக்க, பண்பாடு என்றால் என்ன என கேள்வி வேறு கேட்டதோடு பண்பாடுக்கும் நாகரிகத்துக்கும் வித்தியாசம் என்ன என கேட்டு விட்டீர்கள். விரைவில் ஒரு முழு கட்டுரையே எழுதி விடலாம். :) மிக்க நன்றி.