Thursday 11 March 2010

இயற்கை பேராபத்து



குளத்தோரம் மீன் பிடிக்க 
போகச் சொன்னா 
எங்க போய் உட்கார்ந்திருக்க 

கிணத்துல குதிச்சி 
நீந்த சொன்னா 
எங்க போய் உட்கார்ந்திருக்க 

மலையில் போய் 
செடி கொண்டு வரச் சொன்னா 
எங்க போய் உட்கார்ந்திருக்க 

உயிர் விளிம்புல 
உட்கார்ந்துகிட்டு என்னத்த 
உத்து நீயும் பார்க்கிற 

உயர ஏறி வந்ததுமே 
கீழ இருக்கிறது 
ஒன்னா தெரியுதோ 

ஒரு எலும்பும் மிஞ்சாது 
உடனே வீட்டுக்கு வா 
உட்கார்ந்து சாப்பிடு 
உன்னை இனிமே 
எங்கும் போகச் சொல்லலை!

6 comments:

தமிழ் உதயம் said...

பிள்ளை பாசம்மா...


உன்னை இனிமே
எங்கும் போகச் சொல்லலை!


உயிரோடு இருக்க வேண்டுமே....பிள்ளை

மதுரை சரவணன் said...

அருமை. நல்ல கவிதை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அம்மாவின் அன்புக்கு நிகரேது?..

Chitra said...

புகைப்படமும் கவிதையும் அருமை.

vidivelli said...

படத்திற்கேற்ற கற்பனைக் கவிதை............
நல்லாயிருக்குங்க.........

Radhakrishnan said...

மிக்க நன்றி தமிழ் உதயம், சரவணன், ஸ்டார்ஜன், சித்ரா, விடிவெள்ளி.