Monday 30 January 2012

முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள்

ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. 
ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். 

எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இல்லை. 

முஸ்லீம் என்றால் இறைவனிடம் தம்மை ஒப்புவிப்பவர் என அரபிக் மொழியில் பொருள்படும் என சொல்லப்படுகிறது. ஆஹா, எத்தனை ஆனந்தமான சொல். 

ஆனால் முஸ்லீம் என்றால் உலகில் வெறுப்புக்கு உள்ளாகும் நபர்கள் என்பது முஸ்லீம் என்ற பெயர் கொண்டு சிலர் செயல்படும் நடவடிக்கைகள் தான். ஆனால் எந்த மனிதர்தான் அடவாடித்தனமாக செயல்படவில்லை? தனது கொள்கைகளை நிலை நிறுத்த எல்லோருமே அடாவடியாக செயல்படத்தான் வேண்டி இருக்கிறது. 

தமிழை பழித்தால் தாய் தடுத்தாலும் விடேன் எனும்போது ஒரு ஆவல் பிறக்கிறது. அதே போல எமது இறைவனை, எமது புனித நூலை பழித்தால் விடேன் என முஸ்லீம்கள் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என புரியவில்லை. 

முஸ்லீம்கள் சகிப்புத்தன்மை அற்றவர்கள் எனும் ஒரு பொதுவான எண்ணம் நிலவுகிறது. எதற்கு ஐயா சகித்து கொண்டு போக வேண்டும்? எதை சகித்து கொண்டு போக வேண்டும்? திருக்குர்ஆன் பற்றி உங்களால் சகித்து கொண்டிருக்க இயலாத நிலையில் அவர்கள் எதற்கு அதற்கான எதிர்ப்பை சகித்து கொண்டிருக்க வேண்டும்?

பரிணாம கொள்கையை எதிர்க்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு ஆத்திகர்கள் மேல் அதாவது முஸ்லீம்கள் மேல் அதிகமாகவே சொல்லப்படுவது உண்டு. எதற்கு பரிணாம கொள்கையை எதிர்க்க கூடாது? ஏதேனும் சட்டம் இருக்கிறதா? பரிணாம கொள்கையை முற்றிலும் ஏற்று கொள்ள இயலாது. இதுவரை கண்டெடுக்கப்பட்ட விசயங்களை நிறையவே ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. 

பில்லியன் ஆண்டுகள் முன்னாள் ஒன்றுமே இல்லை என அறிவியல் சொல்லும், அதை மட்டும் ஆஹா, ஓஹோ என கேட்டுக் கொள்வோம். ஆனால் . அதை எதிர்த்து ஒருவரும் கருத்து சொல்ல மாட்டோம். அற்புதமான பகுத்தறிவு. அறிவியல் பில்லியன் ஆண்டுகள் முன்னாள் எந்த இயற்பியல் விதிகளும் இல்லை என்கிறது, என்ன பைத்தியகாரத்தனம், என்னதொரு மூட நம்பிக்கை என எவருமே சிந்தித்துப் பார்ப்பதில்லை. நாம் அனைவருமே நமது வாழும் காலங்களில் ஏமாற்றப்பட்டு கொண்டே இருக்கிறோம், அல்லது ஏமாறுவதற்கு ஆயத்தமாகவே இருக்கிறோம். 

இந்த ஆத்திகர்கள், நாத்திகர்கள்.  இந்த பதம் தனை எவர் கண்டுபிடித்தது என்று தெரியவில்லை. ஆத்தி, நாத்தி. என்ன கொடுமையான தமிழ் இது. ஆத்தி சொல்வதை மாத்தி சொல்வது நாத்தி. நாத்தி சொல்வதை மாத்தி சொல்வது ஆத்தி. அடி ஆத்தி, என்னதொரு விளக்கம். 

ஆதிகர்கள் என்பதுதான் ஆத்திகர்கள் என மருவிற்று. ஆதி என்றால் முதலானவை. முதல் முதலில் உலகில் தோன்றியவைகள் எல்லாம் ஆதிகர்கள். ஆதியும் அந்தமும் இல்லாத சோதி இறைவன் என குறிப்பிடப்படுகிறது. இப்படி ஆதி இல்லாத இறைவனை கேள்விக்குறியுடன் பார்க்கும் உலகம், ஆதி இல்லை என சொல்லும் அறிவியலையும் கேள்விக்குறியுடன் பார்க்கட்டும்.

இஸ்லாம், கிறிஸ்துவம்தனை தன்னுள் உள்ளடக்கியது என்கிறார்கள். இஸ்லாம், கிறிஸ்துவம் என எல்லாவற்றையும் இந்துமதம் தன்னுள் உள்ளடக்கியது என்கிறார்கள். 

இவை எல்லாவற்றையும் அறிந்து கொள்ள உதவும் அறிவியல் அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ள துடிக்கிறது. 

இதெல்லாம் இருக்கட்டும், உலகில் பஞ்சங்களும் , திருடுகளும், கொள்ளைகளும் குறையவா போகிறது, உலகம் சுபிட்சம் பெற்று சிறப்புடன் இருக்கவா போகிறது. 

எது எப்படியோ...

நமது நோக்கம் எல்லாம் உலகம் செழிக்க போராடுவதில் இருக்கட்டும். உலகம் இப்படியே இருக்கிறது என்பதை சகித்து கொள்வதை ஒருபோதும் நாம் அனுமதிக்க வேண்டாம். 

74 comments:

VANJOOR said...

Dear Mr. Radhakrishnan,

எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இல்லை.

Thanks With Regards

Vanjoor

Unknown said...

Thanks bro!

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே
இதுவரைக்கும் நான் கேள்விப்படாத ஒன்றை கூறி இருக்கிறீர்கள்.என்ன சொல்ல வருகிறீர்கள் இந்த வரியில் என்று தெளிவாக கூறினால் நலம்.

//அறிவியல் பில்லியன் ஆண்டுகள் முன்னாள் எந்த இயற்பியல் விதிகளும் இல்லை என்கிறது, என்ன பைத்தியகாரத்தனம்//


அதாவது ஒரு(1) பில்லியன் ஆண்டுகளுக்கு முன் எந்த இயற்பியல் விதிகளுமே இல்லை என்று கூற வருகிறீர்களா?

சார்வாகன் said...

Dear brother asthika as well as nasthika are sanskrit words.
*************
A) Astika Atheism:

The Sanskrit term Astika ("pious, orthodox") is sometimes translated as "theist" and Nastika as "atheist". Sanskrit asti means "there is", and Astika per Panini 4.2.60 is derived from the verb, meaning "one who says 'asti', one who believes in the existence God). When used as a technical term in Hindu philosophy the term Astika refers to belief in the Vedas, not belief in the existence of God.However, though not accepted universally; Astika is sometimes translated as "theist" and Nastika as "atheist", assuming the rejection of Vedas to be synonymous to the rejection of God.

There are six schools of thought within Hinduism addressed as the Shat (Astik) Darshana (darshana meaning "viewpoint."). Within the Astika schools of Hindu philosophy, the Samkhya (Kapila's system) and the early Mimamsa school did not accept a God in their respective systems.Thus early Mimamsa not only did not accept God but said that human action itself was enough to create the necessary circumstances for the enjoyment of its fruits.
*************
B) Nastika Atheism:

In Hindu philosophy, three schools of thought are commonly referred to as Nastika: Jainism, Buddhism and Carvaka for rejecting the doctrine of Vedas. In this usage, Nastika refers to the non-belief of Vedas rather than non-belief of God. However, all these schools also rejected a notion of a creationist god and so the word Nastika became strongly associated with them.

Carvaka, an atheistic school of Indian philosophy, traces its origins to 600 BCE, while some claim earlier references to such positions.It was a hedonistic school of thought, advocating that there is no afterlife. Carvaka philosophy appears to have died out some time after 1400 CE.

Anonymous said...

காஃபிர் ராதாகிருஷ்ணன் அவர்களே,

//பில்லியன் ஆண்டுகள் முன்னாள் ஒன்றுமே இல்லை என அறிவியல் சொல்லும், அதை மட்டும் ஆஹா, ஓஹோ என கேட்டுக் கொள்வோம். ஆனால் . அதை எதிர்த்து ஒருவரும் கருத்து சொல்ல மாட்டோம். //

அதானே? அல்குரானில் உலகம் தட்டை என்று கூறுகிறது. இந்த காபிர் மடையர்கள் உலகம் உருண்டை என்று கூறுகிறார்கள். அது எங்களது மத உணர்வுகளை பாதிக்கிறதா இல்லையா? பிறகு இந்த மாதிரி விஷயங்களை சகித்துகொள்ள வேண்டும் என்று கேட்டால் எப்படி? அதனால்தான் இப்போது ஈமானந்தாரிகளான எங்கள் மதமல்ல மார்க்க சகோக்கள் நைஜீரியாவில் உலகம் உருண்டை என்று சொல்லும் நசரியாக்களை குண்டு வைத்து தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உலகம் தட்டை என்று சொல்லிவிட்டு, எல்லாரும் முஸ்லீமாக மாறி ஷரியாவை ஏற்றுகொண்டு விட்டால் நைஜீரிய ஈமான்ந்தாரிகள் ஏன் குண்டுகளை போடப்போகிறார்கள்? இந்த லட்சணத்தில் முஸ்லீம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்று உளறல் பேச்சு வேறு.

UNMAIKAL said...

RADHAKRISHNAN SIR

KINDLY IGNORE THE COMMENT FROM "Ibnu Skair" WHOS IS AN ANTI-MUSLIM AND IS HIDING UNDER THE NAME OF MUSLIM.

HE ALWAYS PUBLISH MALICIOUS ARTICLES ABOUT ISLAM AND MUSLIMS AND COMMENT MALICIOUSLY WHENEVER THE OPPORTUNITY ARISES.

Ibnu Shakir's COMMENTS AND ARTICLES DO NOT REFLECT THAT OF ANY MUSLIM AT ALL.

வேகநரி said...

//KINDLY IGNORE THE COMMENT FROM "Ibnu Skair" WHOS IS AN ANTI-MUSLIM //

இது முஸ்லிம்களின் வழக்கமான Shia- Sunni பிரச்சனை.
ஒரு முஸ்லிம் வந்து இன்னொரு முஸ்லிமமை புறக்கணி என்று கேட்பதற்கு இது இன்றும் முஸ்லிம் மத பிரசார தளமில்லையே!

உலகம் சுபிட்சம் பெற்று சிறப்புடன் இருக்கவேண்டும்.1400 ஆண்டுக்கு பின்னோக்கி உலகம் பயணிப்பதை அனுமதிக்க கூடாது.

Radhakrishnan said...

நன்றி வாஞ்சூர்

நன்றி ஜாபர் கான்

நன்றி சார்வாகன். பதினைந்து பில்லியன் ஆண்டுகள் முன்னர் என சொல்கிறார்கள். அந்த பதினைந்து பில்லியன் ஆண்டுகள் தொடங்கிய அந்த மில்லி வினாடிக்கு முன்னர் நேரம் இல்லை, காலம் இல்லை, நிறை இல்லை, குறை இல்லை என ஏதேதோ சொல்கிறார்கள். எனக்கு நிச்சயமாக புரியவில்லை, எனது அறிவிற்கு இதெல்லாம் பிடிபடுவது இல்லை. எனது அறியாமையின் வெளிப்பாடு என்பதை மட்டுமே இப்போதைக்கு ஒப்புக் கொள்கிறேன்.

ஆஸ்திகம், நாஸ்திகம் பற்றிய அருமையான விளக்கங்களுக்கு மிக்க நன்றி சார்வாகன். மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

ஹா ஹா! அட கடவுளே. பெயருக்கு முன்னாள் பட்டம்... நன்றி இப்னு சாகிர்.

புரிந்து கொள்ள முடிகிறது, நன்றி உண்மைகள்.

நன்றி நண்பரே.

farook said...

thequickfox said...
//1400 ஆண்டுக்கு பின்னோக்கி உலகம் பயணிப்பதை அனுமதிக்க கூடாது.// குள்ள நரி உளை விட்டிருச்சு.

Radhakrishnan said...

அது சரி

கோவி.கண்ணன் said...

அடுத்தப் பதிவு காஃபீர்கள் எல்லாம் நாத்திகர்களா ?
என்று வருமா ?

:)

நீச்சல்காரன் said...

//அறிவியல் பில்லியன் ஆண்டுகள் முன்னாள் எந்த இயற்பியல் விதிகளும் இல்லை என்கிறது, //ஐயா அறிவியல் அப்படி சொல்லவில்லை. இல்லாமல் இருக்கலாம் என்று கொட்பாடுதான் வழங்குகிறது.
It's a theory not a Definition

கோவி.கண்ணன் said...

வழக்கமாக இஸ்லாமிய புகழ்பாடும் சொந்தப் பதிவுகளில் ஓட்டுக் கும்மி அடித்து மகுடம் ஏற்றுபவர்களின் வாக்குகளை இங்கே காணுமே, ஒருவேளை அந்தப் பெருமையும்(?) அவர்களால் எழுதப்படும் பதிவுகளுக்குத்தான் சேர வேண்டும் என்று நினைக்கிறார்களோ....!
:)

Anonymous said...

வாரீர் வாரீர்
பாரீர் பாரீர்
ஜோராக ஒரே ஒரு முறை நடந்த
நம்ம தவ்ஹீத் அண்ணனும் ஜெர்ரி அண்ணாச்சிகளும் போட்ட குஸ்தி

போயே போச்சு. போயிந்தே.

சிராஜ் said...

/* வழக்கமாக இஸ்லாமிய புகழ்பாடும் சொந்தப் பதிவுகளில் ஓட்டுக் கும்மி அடித்து மகுடம் ஏற்றுபவர்களின் வாக்குகளை இங்கே காணுமே, ஒருவேளை அந்தப் பெருமையும்(?) அவர்களால் எழுதப்படும் பதிவுகளுக்குத்தான் சேர வேண்டும் என்று நினைக்கிறார்களோ....! */

பதிவுல முஸ்லிம்கல்னு இருந்தா நாங்க வந்து கும்மி அடிக்கிரமோ இல்லையோ, நீங்களும் உங்கள் கோஷ்டியும் கண்டிப்பா வந்து கும்மி அடிப்பீங்க. அதுக்கு இந்த போஸ்ட் ஒரு சாட்சி.
வோட்டு தானே??? 7 வோட்டாக்கி தமிழ் மணத்தில இடது பக்கம் கொண்டு வந்திட்டா போச்சு.

சிராஜ் said...

/* முஸ்லீம்கள் சகிப்புத்தன்மை அற்றவர்கள் எனும் ஒரு பொதுவான எண்ணம் நிலவுகிறது. எதற்கு ஐயா சகித்து கொண்டு போக வேண்டும்? எதை சகித்து கொண்டு போக வேண்டும்? திருக்குர்ஆன் பற்றி உங்களால் சகித்து கொண்டிருக்க இயலாத நிலையில் அவர்கள் எதற்கு அதற்கான எதிர்ப்பை சகித்து கொண்டிருக்க வேண்டும்? */

நல்ல கேள்வியா இருக்கே. நீங்கள் நினைப்பது போல் இல்லை சகோ. கோவி கண்ணன் மாதிரி ஆளுங்களுக்கு சகிப்பு தன்மை என்னன்னா. முஸ்லிம்கள் தன் மதத்தை முன்னிருத்தக்கூடாது.
யாரையும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது. நாத்திகவாதி ஏதும் சொன்னா அப்படியே கேட்டுகிட்டு போய்டணும். இதுதான்.

சிராஜ் said...

அவருக்கு பக்கத்தில இருக்கிற சீனா காரன் பன்னி கறி சாப்பிடரானா, நாங்களும் சாப்பிடனும். அவன் புத்தாண்டு கொண்டாட்ரானா நாங்களும் கொண்டாடனும். புத்தாண்டு கொண்டாட்டம் பைத்தியக்கார தனம் அப்படின்லாம் தோன்றாது.

சிராஜ் said...

அவன் கொண்டாட்னா நாம ஏன் கொண்டாடனும். தெரியாது, ஆனா கொண்டாடனும். போங்கயா நீங்களும் உங்க நடுநிலைமையும்.

சிராஜ் said...

மலாய்க்காரன் சீனா காரனோட இணைந்து புத்தாண்டு கொண்டாடுவார்களாம். அதனால் இந்திய முஸ்லிம்களாகிய நாங்களும் எல்லா பண்டிகைகளையும் இணைந்து கொண்டாடனுமாம். சரி கொண்டாடுவோம். மலாய்க்காரன் முஸ்லிம், நீங்களும் முஸ்லீமா மாறிடுங்களேன் கோவி.

புதிய கோணங்கி ! said...

ஆராயும் நோக்கம் எதுவும் இல்லாத அரை குறை பதிவு

புதிய கோணங்கி ! said...

//ஆத்தி, நாத்தி. என்ன கொடுமையான தமிழ் இது. ஆத்தி சொல்வதை மாத்தி சொல்வது நாத்தி. நாத்தி சொல்வதை மாத்தி சொல்வது ஆத்தி. அடி ஆத்தி, என்னதொரு விளக்கம். //

ஆஹா என்னவொரு விளக்கம்
காஞ்சனா படத்தில பேய் பிடித்ததால் தன்னை மிரட்டும் மகனிடம், 'ஜிங் ஜிங் ஜிங்'ன்னு கோவை சரளா சொல்வாரே அது போலவே இருக்கு :)

புதிய கோணங்கி ! said...

// புத்தாண்டு கொண்டாட்டம் பைத்தியக்கார தனம் அப்படின்லாம் தோன்றாது.//

பக்ரீத், ரம்ஜான் கொண்டாட்டம் எல்லாம் புத்திசாலி தனமோ

புதிய கோணங்கி ! said...

//சிராஜ் said...
அவன் கொண்டாட்னா நாம ஏன் கொண்டாடனும். தெரியாது, ஆனா கொண்டாடனும். போங்கயா நீங்களும் உங்க நடுநிலைமையும்.//
அதானே, அரபு செஞ்சான்னா நாம செய்யலாம். அரபு கொண்டாடினா நாம கொண்டாடலாம் அத வுட்டுட்டு லூஸு மாதிரி..... ;))

சிராஜ் said...

பதிவ லிஸ்டுக்கு கொண்டு வந்தாச்சு சகோ கோவி. ஆசை தீர்ந்ததா???

சிராஜ் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி புதிய கோணங்கி...மீண்டும் வருக....

சிராஜ் said...

சகோ புதிய கோணங்கி,

/* ஆராயும் நோக்கம் எதுவும் இல்லாத அரை குறை பதிவு */

அப்படியா... ரொம்ப சந்தோசம். ஆராயும் நோக்கம் இல்லாததா தேடி பிடிச்சு பின்னூட்டம் போடறீங்க. நாத்திகம் சம்பந்தமா ஒரு பதிவு ரொம்ப நேரமா மகுடத்தில நின்னுகிட்டு இருக்கு. அங்க ஆளையே காணோம்???? அங்க போங்க பிரதர்... சகோ அஹமது ஆசிக் உங்களத்தான் ரொம்ப நேரமா தேடிகிட்டு இருக்கார்.

http://www.ethirkkural.com/2012/01/600.html

சிராஜ் said...

தொடர்ச்சி...

ஆசிக் ஏதோ ஒரே ஒரு ஆதாரம் கொடுத்தா போதும்னு அறிவுப்பூர்வமா பேசிகிட்டு இருக்கார். அங்க போய் அந்த ஆதாரத்த தூக்கி போடுங்க பாஸ்.

சிராஜ் said...

/*********** ஆசிக் said ...
பதிவோட மைய கருத்தை நல்லா உள்வாங்கிக்குங்க. கேம்ப்ரியன் காலத்தில் விலங்குகள் முதல் முதலாக படிமங்களில் காணப்படுகின்றன. அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் இந்த விலங்குகள் பரிணமித்து கொண்டிருந்த ஒரு சுவடும் இல்லை. இதை சொல்லிவிட்டு, அவர்கள் 'விலங்குகளின் கருக்கள்' என்று இதுநாள்வரை எண்ணிக்கொண்டிருந்தவை தவறு என்று நிரூபிக்கப்பட்டிருப்பதையும் சயின்ஸ் ஆய்விதலின் மேற்கோளோடு காட்டிருகின்ரேன்.

இப்போ, இந்த பதிவை நீங்க எப்படித்தெரியுமா மறுக்கனும்?

"நீங்க கேம்ப்ரியன் காலத்திற்கு முன்னால இந்த விலங்குகள் பரிணமித்து கொண்டிருக்கவில்லை என்று சொல்றீங்க. இதோ பாருங்க, இந்த விலங்கு பரிணமித்து கொண்டிருந்த ஆதாரம்" அப்படின்னு எடுத்து போடணும். அதிகம் வேணாம் ஒரே ஒரு கேம்ப்ரியன் கால விலங்கோட பரிணமித்து கொண்டிருந்த ஆதாரங்கள கொடுங்க போதும்.

*****************/

Radhakrishnan said...

நன்றி கோவியாரே. நிச்சயமாக அப்படி ஓர் பதிவு எழுதும் எண்ணம் எல்லாம் இதுவரைக்கும் இல்லை. இனி எப்படியோ? ஆனால் இந்த பதிவு பல நாட்களாக மனதில் இருந்து கொண்டே இருந்தது. எழுதுவதா, வேண்டாமா எனும் யோசனையில் இருந்தேன். ஒன்றை பற்றி எழுத நினைத்துவிட்டால் அதை என்றாவது எழுதி விடும் வழக்கம் இருப்பதால் இந்த பதிவு அவ்வாறே எழுதப்பட்டது. முதல் சிந்தனை தலைப்பு, அடுத்த சிந்தனை தலைப்பை ஒட்டிய விசயங்கள்.

ம்ஹூம். இதுவரை மகுடம் சூட்டிக் கொண்டதில்லை, எப்போதும் மகுடம் சூட்டப்போவதும் இல்லை. எனது பதிவு தரமிக்கதுதானா என்பது குறித்து நிறையவே சிந்தித்து இருக்கிறேன். நீங்களே கண்டு இருக்கலாம், எனது எழுத்து மிக மிக சாதாரணமானவையே. நன்றி கோவியாரே. அன்பு எனும் பாதை மிகவும் அற்புதமானது என்பதை தாங்கள் அறிவீர்கள்.

Radhakrishnan said...

நன்றி நீச்சல்கார நண்பரே. புரிந்து கொள்ள முடிகிறது. தியரி என்றால் அறிவியலில் அதை நிரூபிக்க வேண்டும். தியரி என எல்லாராலும் எதை வேண்டுமெனினும் சொல்ல முடியாது. பல தியரிகள் மறுக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறிவீர்கள். தற்போது இந்த விசயத்தை தியரி என என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை என்பது குறித்து நிறையவே சிந்தித்து கொண்டிருக்கிறேன். ஏனெனில் அறிவியலில் மறுப்பதற்கு கூட நிறைய ஆதாரம் வேண்டும். இதனால் தான் இதை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு தவறோ, சரியோ இறைவன் என்கிற ஒரு அற்புதத்தில் அமைதி அடைகிறோம். அறிவியல் பல விசயங்களில் மிகவும் உறுதியாக இருக்க முடியாது, ஏனெனில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன எனலாமோ?

Radhakrishnan said...

நன்றி சிராஜ் நண்பரே. அன்பு எனும் பாதை மிகவும் அற்புதமானது என்பதை தாங்கள் அறிவீர்கள். கோவியார் அவரது சிந்தனைகளுக்கு அவரே பொறுப்பு ஏற்கிறார். தாங்கள் தங்களது சிந்தனைகளுக்கு பொறுப்பு ஏற்கிறீர்கள். ஒரு பதிவின் சாராம்சம் என்பது மிகவும் கடினத்துடன் புரிந்து கொள்ளப்படுமானால் அல்லது புரிந்து கொள்ள முடியாத தன்மை உடையதானால் அந்த பதிவு சொல்ல வந்த பாதையில் இருந்து நழுவுகிறது என பொருள்படும்.

தாங்களும், கோவியாரும் இவ்வாறு எழுதுவதற்கு நானும் ஒரு காரணன் என்பதால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

Radhakrishnan said...

நன்றி புதிய கோணங்கி நண்பரே. இறைவன் எனும் அற்புதம் தனில் ஆராய்ச்சி அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். நான் இதுவரை எழுதியது எதுவுமே முழுமை அடையவில்லை என்பது தெளிவு, ஏனெனில் நான் கற்றது மிக மிக குறைவு. மேலும் கற்று கொள்ளும் ஆவலில் இருக்கிறேன். ஹா ஹா! காஞ்சனா! ஹூம். ஆழ்நிலை, உள்நிலை மன வெளிப்பாடு எப்போது வெளிப்படும் என தெரியாது. சகிப்புத்தன்மை எல்லாரிடமும் இருக்க வேண்டும் என்பதில்லைதான்!

ஒருவர் சொல்வதை நேரடியாக மறுத்து சொல்வது விவாதம். ஒருவர் சொல்வதை அவர் வழியில் சென்று மறுத்து சொல்வது கலந்துரையாடல். எதை தேர்ந்தெடுப்பது என்பது அவரவர் செயலில் உள்ளது.

Radhakrishnan said...

அட, ஏழு வாக்குகள் என சொன்ன வாக்குப்படி செய்து விட்டீர்கள் சிராஜ். பேசாமல் நான் அரசியல் கட்சி தொடங்கி உங்களை கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கிவிடலாம் போல் இருக்கிறதே. நன்றி. :)
ஆசிக் அவர்களின் பதிவினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. ஒரே ஒரு வாக்கியத்தில் அவரது கேள்விகளுக்கு பதில் இருக்கிறது. அதை அவரது தளத்தில் நிச்சயம் எழுதுகிறேன்.

Radhakrishnan said...

கருத்துகள் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

VANJOOR said...

அன்பிற்குரிய திரு. ராதாகிருஷ்ணன் அவர்களே

தாங்களுடைய பெருந்தன்மையை பளிச்சிட்டுவிட்டீர்கள்.

தாங்கள் இந்த பதிவை ஒட்டி யாரிடமும் மன்னிப்பு கேட்க எந்த சூழ்நிலையும் இல்லை என்பது எனது அபிப்பிராயம்.

இஸ்லாமியர், மூஸ்லீம்கள் பற்றி காழ்ப்புணர்வுடன் பதிவிட்டு கருத்திட்டு என்ன சாதித்திருக்கிறார்கள்? சாதிக்கப்போகிறார்கள்?

அவர்களின் உள்ளமே அவர்களை சுடட்டும்.

இஸ்லாமிய பதிவர்கள் தாங்களுடைய மார்க்கத்தை பற்றி எந்தெந்தவாறு எழுதுகிறார்களோ அதெல்லாம் யார் யாருக்கோ பொறாமை , ஆற்றாமை தீயை உருவாக்கிவிட்டால் அதற்கு யார் என்ன செய்ய முடியும்.

இப்படி காழ்ப்புணர்வுகளுடன் புழம்பி அங்கலாய்ப்பவர்கள் அவர்களுடைய மார்க்கத்தை , கொள்கைகளை இஸ்லாத்தை முஸ்லீகளை உரசாதவாறு எழுதலாமே? , கருத்திடலாமே? என்ன தடை?

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?

திட்டவட்டமாக "எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இல்லை."

முஸ்லீகளுக்கு எந்த சாயத்தையும் யாரும் எப்படியும் பூசட்டும்.

அல்குரான்

“ 109:1. (நபியே!) நீர் சொல்வீராக: நிராகரிப்போர்களே !

109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.

109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.

109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.

109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.


.

சிராஜ் said...

சகோ ராதா கிருஷ்ணன்,

/* தாங்களும், கோவியாரும் இவ்வாறு எழுதுவதற்கு நானும் ஒரு காரணன் என்பதால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் */

நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நீங்கள் மா பாதகம் எதையும் செய்து விடவில்லை. சகோ கோவியும் உங்களிடம் அதை எதிர் பார்க்க மாட்டார் என்றே நம்புகிறேன்.

suvanappiriyan said...

நடுநிலையோடு எழுதப்பட்ட பதிவு திரு ராதாகிருஷ்ணன். ஆனால் வழக்கமாக கோவிக் கண்ணனுக்கு இது பிடிக்காது.

Radhakrishnan said...

நன்றி சிராஜ்.

நன்றி சுவனப்பிரியன்.

வால்பையன் said...

தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என சொல்லும் ஒருவரை காட்டுங்கள் பார்க்க ஆவலாய் இருக்கிறது!

நீ பத்தினியான்னு என்னை கேக்காதிங்க!
தமிழ் எனக்கு தெரிந்த மொழி
தொடர்பு மொழி
எளிமையான மொழி அவ்வளவே!

மற்றபடி மொழி என்பது தொடர்பு சாதனம் தான் பணம் போல,

பணம் கொடுத்து ஒன்றை வாங்குகிறோம். அதே போல் தமிழில் என் கருத்தை கூறி அவர் கருத்தை வாங்குகிறேன்.

ரூபாய் தான் பெரிசு, ரியால் சிறுசுன்னு சண்டை எப்போ ஆரம்பிக்கும்!? :))

வால்பையன் said...

சுவனப்பிரியனுக்கு இது நடுநிலையா தெரியுது!

குரானில் இருக்கும் காபீர்களை கொன்றால் தப்பில்லை என்ற வசனத்தை எடுங்கள் என்றால் நாங்கள் விளிப்புக்கு போயிருவோம்!

ஆமாம் ராதாகிருஷ்ணன் நடுவால நின்னுகிட்டு என்ன பண்றார்!?

எனக்கென்னவோ மகாபாரத போக்கர் நியாபகம் வருது!

:))

வால்பையன் said...

அடுத்தப் பதிவு காஃபீர்கள் எல்லாம் நாத்திகர்களா ?
என்று வருமா ?//

ரெண்டும் வேற வேறயா கோவி!?

இபிலீஸ் நேற்று என் கனவில் வந்து அல்லாவால் என்னை ஒண்ணூமே பண்ண முடியலையே, என்னால் நல்லதொரு உலகை படைக்க முடியாது என நீ நம்புகிறாயா என கேட்கிறான்?

நீ தான் சாத்தான் ஆயிற்றே என்றேன்!

நீ நீயாக வாழ்வதற்கு சுதந்திரம் தந்தவன் நான் அப்படியானால் என் பெயர் சாத்தானா என்கிறான்!

(கற்பனைக்காக மட்டுமே, சீரியஸா எடுத்துகிட்டு எனக்கும் வஹி வந்துருச்சுன்னு தூதர் ஆக்கிராதிங்க ப்ளீஸ்)

சார்வாகன் said...

@நண்பர் சிராஜ்
ஆசிக்கின் கருத்தை இங்கு புரிந்து(?) கூறி இருக்கிறீர்கள் என எடுத்துக் கொள்கிறேன்.

முதலில் ஒரு விடயத்தை தெளிவு படுத்தி விடலாம்.

1.பரிணாம்ம் உண்மை என்றால் இஸ்லாம் என்பது முற்று முழுதாக தவறாகி விடும் என்பதை ஏற்கிறீர்களா?பரிணமத்தையும் ஏற்று இஸ்லாமையும் பின்பற்றும் பிற முஸ்லிம்களும் நாத்திகர்களே என்பதும் ஒத்துக் கொள்கிறீர்களா?

இதற்கு ஆம் அல்லது இல்லை என்பதை கூறினால் உங்களின் பரிணாம்ம் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயார்!!!!!!!!!!.
******************
இது வேறு
நீங்களும் சான்று கொண்டு வாருங்கள்!!!!!!!!!!

துல்கர்னைன் என்பது யார்?துல்கர்னைன் கட்டிய சுவரை சான்றாக வைத்து இருக்கிறேன் என்று அல்லாஹ் முகமதுவின் மூலமாக் குரானில் கூறுகிறார்.ஆக வே அதனை கண்டு பிடிக்கும் வரை இஸ்லாம் உண்மையாக முடியாது!!!!!!!!!
குரான் வசனம் அப்ப்டி கூறவில்லை வேறு மாதிரி என்று [பொய்] கூறினால் விவாதிக்க தயார்!!!!!

வருண் said...

***புதிய கோணங்கி ! said...

ஆராயும் நோக்கம் எதுவும் இல்லாத அரை குறை பதிவு
31 January 2012 07:10 ****

வந்துட்டாரு சான்றிதழை அள்ளி வழங்க, பெரிய பருப்பு ஒண்ணு!!! இங்கே எதுதான் முழுமைபெற்ற பதிவு உம் பின்னூட்டத்தைத் தவிர??

சும்மா தேவையில்லாமல் மத்ச்சண்டை போடுவதற்கு இது எவ்லோவோ பரவாயில்லை!

திடீர்னு ஒரு ஐடி ல வந்து பெரிய மேதாவி மாரி பேசுவானுக!

பதிவு உம்முடைய வருகைதருவதற்கு தகுதி இல்லைனா எங்கேயாவது உம் தகுத்திக்கேற்ப போயி கிழிகிழினு கிழிக்க வேண்டியதுதானே? நான் பெரிய பருப்புனு இங்கே வந்து எதுக்கு??

வருண் said...

ஆமா மதத்தையும், கலாச்சாரத்தையும் கவனமாக ஆராஞ்சி என்னத்தைப்பா கிழிச்சுட்ட கோணங்கி??? ஒரு பதிவைப்போடேன். நீ என்னத்தைத்தான் கிழிச்சுட்டனு நான் வந்து பார்க்கிறேன்!

வருண் said...

V R: You could remove my responses if you find them causing trouble. in your blog I HATE this kind of attitude with anybody! Nobody asked these idiots to come and offer a certificate in responses. Why cant they politely give -ve mark to the "post" as they find it "not up to the marK" and get the hell out of here??

வேகநரி said...

இதுவரை 10 ஓட்டுக்கள். இஸ்லாமிய மதவாதிகளின் அனுகிரகம் தங்களுக்கு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள்!

Radhakrishnan said...

//வால்பையன் said...
தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என சொல்லும் ஒருவரை காட்டுங்கள் பார்க்க ஆவலாய் இருக்கிறது!//

//எனக்கென்னவோ மகாபாரத போக்கர் நியாபகம் வருது!//

பாரதிதாசன் கவிதை நினைவுக்கு வந்தது, அது போல் ஊரில் நிறைய பேர் இருக்கிறார்கள் என நினைத்துவிட்டேன். அப்படி ஒரு ஆளை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் தான். மகாபாரத போக்கர் பற்றி இனி தேடி அறிந்திட வேண்டும். நன்றி அருண்.

Radhakrishnan said...

ஆஹா சார்வாகன், நிறைய விசயங்கள் கற்று கொள்ளலாம் போல் இருக்கிறதே.

தாங்கள் எழுதியதை படித்ததும் சிரிப்பு வந்தது. அதுவும் குறிப்பாக சான்றிதழ் வாக்கியம். ஒருவேளை என்னை திட்டி எழுதி இருந்தால் என் மனம் திக் என்று இருந்து இருக்குமோ?. புரிந்து கொள்ள முடிகிறது வருண். அவரவர் அறிந்ததை எழுதிவிடுகிறார்கள். நீங்கள் எழுதியதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். நன்றி.

பத்து ஓட்டுகள் மட்டுமா, இதுவரை நான் எழுதிய பதிவுகளில் இந்த பதிவில் தான் அதிக பின்னூட்டங்கள் கூட. ஒரே ஒரு பதிவு எழுதி அவர்களது எதிர்ப்புகளை கூட என்னால் சம்பாதித்து விட முடியும் என்றே தோன்றுகிறது, அதனால் இனிமேல் சற்று கவனத்துடன் நடந்து கொள்கிறேன்.

கோவி.கண்ணன் said...

அண்ணன் சுவனப்பிரியன் தான் ஒட்டு மொத்தமாக நடுநிலை சான்றிதழ் வைத்திருக்கிறார். அவரோட மதத்தை விமர்சனம் செய்தால் நடுநிலை தவறிய பதிவு, புகழ்ந்தால் நடுநிலையான பதிவு.

நடுநிலை என்பது ஒரு உயிர்பொருள் (வஸ்து) ஆக இருந்தால் அது நாண்டு கொள்ளும்.

கோவி.கண்ணன் said...

//முஸ்லீம்கள் சகிப்புத்தன்மை அற்றவர்கள் எனும் ஒரு பொதுவான எண்ணம் நிலவுகிறது. எதற்கு ஐயா சகித்து கொண்டு போக வேண்டும்? எதை சகித்து கொண்டு போக வேண்டும்? திருக்குர்ஆன் பற்றி உங்களால் சகித்து கொண்டிருக்க இயலாத நிலையில் அவர்கள் எதற்கு அதற்கான எதிர்ப்பை சகித்து கொண்டிருக்க வேண்டும்?//

அதைத்தான் எம் போன்றோவர்கள் சொல்லுகிறார்கள், மத்த மதங்களைப் போன்று தான் அதுவும், தனிச்சிறப்பு என்று எதுவும் கிடையாது, இவர்களாகத்தான் எங்கள் மதம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது என்று சொல்லுகிறார்கள், அப்பாற்பட்டதில் சகிப்புத்தன்மை பற்றி சொல்லி இருந்தால் சகித்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கலாமா ?

நேற்றைய முந்தைய பதிவில் விவிலியம் பற்றி விமர்சனம் செய்திருந்தேன் கிறித்துவர்கள் யாரும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வரவில்லை, அதற்காக அவர்கள் மதத்தை விமர்சனம் செய்வதை அவர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள் என்றோ, அவர்களுக்கு சூடு சுரணை இல்லை என்றோ கருதிவிட முடியாது, எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல என்ற புரிந்துணர்வு அவர்களிடம் உண்டு, காலத்திற்கு (என்னைப் பற்றி இல்லை) ஒவ்வாதது களையப் படவேண்டும் என்று அனைத்து மதங்களிலும் புரிந்துணர்வாக இருக்கும் போது 'வணக்கம்' சொல்வது கூட இறை வணக்கத்திற்கு ஒப்பாகும் என்று இவர்கள் தான் பின்னோக்கி பயணிக்கிறார்கள். அது எப்படி தொழுவது அல்லது கும்பிடுவது வணக்கம் சொல்வதற்கு ஒப்பாகும் என்று நான் அறியேன்.

*****

இந்தப் பதிவில் நான் புரிந்து கொண்டது அவர்களும் பிறரைப் போன்று ஒரு சராசரியே என்பது தான், நீங்கள் அதை பாசிட்டீவாகச் சொல்லி இருக்கிறீர்கள் மற்றவர்கள் விமர்சனமாகச் சொல்லுவார்கள்.

வருண் said...

***நேற்றைய முந்தைய பதிவில் விவிலியம் பற்றி விமர்சனம் செய்திருந்தேன் கிறித்துவர்கள் யாரும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வரவில்லை, அதற்காக அவர்கள் மதத்தை விமர்சனம் செய்வதை அவர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள் என்றோ, அவர்களுக்கு சூடு சுரணை இல்லை என்றோ கருதிவிட முடியாது***

சரி, தன் வெறுப்பை, தன்க்கு பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாக சொல்றவங்க (விவாதத்தில்தான்) ரொம்பக் கெட்டவங்களா? மனதிலேயே நம் பதிவைப் பார்த்து நம்மை வெறுத்துக்கொண்டு சிரித்துப் பேசுறவங்க நல்லவங்களா? என் பார்வையில் இன்றைய நிலையில் இஸ்லாமியப் பதிவர்கள் பிடிக்கலைங்கிறதை ஒளிவு மறைவு இல்லாமல் காட்டிப்புடுறாங்க. இதை ஒரு நல்ல குணமாகக்கூட நம்ம பார்க்கலாம்! அமுக்குனி மதவெறியர்கள்தான் நமக்கு எப்போவும் நல்லவங்களா தோனுவாங்க! ஆனால் பதிவுலகம் புரிந்த பின்னர் இதையெல்லாம் எளிதாக எடுத்துக்க வாய்ப்பிருக்கு. பல முதிர்ச்சியடைந்த இஸ்லாமிப்பதிவர்கள் இதையெல்லாம் கண்டுக்கிறதில்லை. புதியவர்கள்தான் இதுபோல உனர்ச்சிவசப்படுறாங்கனு சொல்லலாம்!

farook said...

thequickfox said...

// இதுவரை 10 ஓட்டுக்கள். இஸ்லாமிய மதவாதிகளின் அனுகிரகம் தங்களுக்கு கிடைத்துள்ளது.//குள்ள நரி உளை விட்டிருச்சு.

ஷர்புதீன் said...

ராதாகிருஷ்ணன் அவர்களே,

மதம் குறித்து வாதாட நிறைய அசாத்திய தைரியம் வேண்டும். அது உங்களுக்கு இன்னும் கூட வரலைனா எப்படி,?

வாங்க நிறைய பேசுவோம். நேரம் இருக்கிறதல்லவா...... அது போதும்!!

ஷர்புதீன் said...

இதில் இறுதியாய் என்ன (வெல்லாம் ) வரும் என்பதில் எனக்கு கருத்து பேதமே கிடையாது, காரணம் சிறிய விசயங்களில் கூட ஈகோ உள்ள நாம் , நமது அடிப்படை நம்பிக்கையை உடைக்கும் ஒரு விஷயத்தை யார்தான் உடனே ஏற்றுகொள்வார்கள்! அப்படி ஏற்றுகொண்டால் கூட தங்களுக்கு அதில் எது ஈசியாக பின்பற்ற முடியுமோ , அதனை உடனேயும், அப்படி பின்பற்ற முடியாததை " மனிதர்கள் பலகீனமானவர்கள்" என்றும் பதிலிட்டு தப்பித்துகொள்வார்கள்.

தினமும் சேவிங் செய்து கொள்பவர்கள், அப்படி செய்தால்தான் ஸ்மார்ட்டாக இருக்கும் என்று வாதிடுவார்கள்., அவர்களில் எத்தனை தங்களது தொப்பையை எந்த அளவிற்கு குறைக்க முயற்சிக்கிறார்கள்.

பற்களை ஒழுங்காக பராமரிப்பதை பற்றி மிக முக்கியமாக எல்லா பேட்டிகளிலும் பேசும் நடிகர் மாதவன் உடம்பை எப்படி வளர விட்டிருக்கிறார் ( வேட்டை )பார்த்தீர்களா?

வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் மிக அக்கறை காட்டும் ஒருவர் , அதே அளவிலா மற்ற விசயங்களில் சுத்தம் பேனுகிறார்?

இது போன்ற நிறைய உதாரணங்களை பார்த்தபின் நான் முடிவு செய்தது இப்படிதான்.
" ஒவ்வரு மனித செயல்களிலும், சூழல், வளர்ப்பு, கல்வி, பேங்க் பாலன்ஸ், அப்போதைய மனநிலை, மதம், சமூக கட்டமைப்பு, பருவம், வருங்கால கனவு... மற்றும் இன்னும் பல - இவையெல்லாம் சேர்ந்தேதான் தீர்மானிக்கிறது. தீர்மானித்துவிட்டு திரும்பவும் எல்லாவற்றையும் படிக்க காரணம் - எனது தீர்மானம் தப்பாகவும் இருக்கலாம், அதனை யாரேனும் கன்னத்தில் அறைவது போல் பதில் தரலாம் - திருத்திகொள்ளலாம் என்பதால்தான், ஆனால் குறிப்பிட்ட மத பிடிப்பு கொண்டுவிட்டால் , திருத்திக்கொள்ள முடியாது,.. காரணம் உங்களது இடுக்கையின் தலைப்பில் இருக்கிறது!

( மதம் சார்ந்த இடுகை எழுதும்போது இது குறித்து விரிவாக எழுதலாம் என்று வைத்திருந்த விஷயம் இது, அதனை வெளிபடுத்த இது சரியான நேரம் என்று நினைத்ததால் ......... .....டேன்.

Radhakrishnan said...

நன்றி கோவியாரே. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என காக்கையின் நிறத்தை குறைத்து மதிப்பிட்டதோடு, எது சிறியதாக இருந்தாலும் அதனதனில் அது பெரிது என பொது தத்துவத்தை கொண்டுவந்த மனித குலம்தனில் வந்தவர்கள் தான் நாம் அனைவரும். அதைப்போலவே அவரவர் மதம் அவரவருக்கு பெரிதாக தென்படுவதில் தவறு இல்லை.

நதி மூலம், ரிசி மூலம் பார்க்க கூடாது என்பார்கள். தற்பெருமை, தற்புகழ்ச்சி என தானே பெரிது என நினைத்து செல்பவர்கள் காலத்தின் முன்னாள் மிக மிக சாதாரணம் எனும் உண்மையை மறந்துவிடுகிறார்கள். எங்கே முகம்மது நபி? எங்கே இயேசு கிறிஸ்து? எங்கே கண்ணபிரான்? இவர்கள் எல்லாம் மடிந்து போன மானிடர்கள் என்பதை எவர் மனமேனும் சிந்திக்கும் எனில் அங்கே உண்மை புலப்படும். இவர்கள் உயிர்த்து எழுந்தார்கள் என்றால் எனது சீரங்கத்து பாட்டியின் கதைதான் நினைவுக்கு வருகிறது, அதோடு வேறு சில கதைகளும். பொதுவாக அதீத விசுவாசம் உடையவர்கள் சிந்திக்க மறுப்பார்கள் என்பதுதான் காலம் கண்டு கொண்ட செய்தி. விசுவாசம்தனில் தான் அடிமைத்தனம் தழைத்து ஓங்கியது. மேலும் தனக்கென ஒரு வட்டம் போட்டு சுற்ற பழகியவர்கள் எப்போதும் வட்டத்திற்குள் சென்றோ,வட்டத்திற்குள் வெளியோ சென்று பார்க்க விரும்புவதில்லை. காரணம் பயம்.

எதற்கு மதங்களில் உள்ள விசயங்களை விமர்சிக்க வேண்டும்? உலகம் தட்டை என சொன்னது தவறு என குழந்தைகளிடம் சொல்லி வளர்ப்பதைவிட உலகம் உருண்டை என்பதை சொல்லி வளர்ப்பதுதான் சிறந்தது என்றே கருதுகிறேன்.

திருக்குரானோ, பைபிளோ வேறு எந்த மத நூல்களோ, எழுதப்பட்ட விசயங்கள் தவறு என தெரிந்தால் அதை விமர்சிப்பதை விட எது சரியோ அது குறித்து எழுதுவது மிகவும் சிறப்பான ஒன்றாகவே இருக்கும் என கருதுகிறேன்.

மத நூல்களை பற்றி கடுமையான விமர்சனங்கள் என்னால் மட்டுமல்ல பலரால் எழுத முடியும் என்கிற நிலை தான் உண்மையிலேயே மத நூல்களின் நிலை என்பதை தாங்கள் அறிவீர்கள். அசுத்தம் அசுத்தம் என சொல்வதை விட ஒரு இடத்தை சுத்தப்படுத்தி வைப்பதுதான் சிறந்தது.

Radhakrishnan said...

உண்மைதான் வருண். நன்றி. சரியோ, தவறோ தனது மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்துபவர்கள், தாங்கள் உள்பட, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கோபக்காரர் போலவும், பிரச்சினைகள் உண்டு பண்ண கூடியவர்களாகவும் தென்படுவார்கள். பொதுவாக உண்மையை எவராலும் செரித்து கொள்ள இயலாது. ஒருவரின் தவறை பக்குவமாக சொல்லி திருத்துவது எளிதானது, அதே வேளையில் அந்த தவறை அவதூறு செய்தால் தவறு செய்தவர் பொறுத்து கொள்ள மாட்டார். இப்பொழுது அவதூறு செய்தவர் தவறு இழைத்த நிலைக்கு தள்ளப்படுகிறார் எனும் நிலைதான் மதங்களில் உள்ள விசயங்களை விமர்சிப்பது என எடுத்துக் கொள்ளலாம்.

Radhakrishnan said...

நன்றி ஷர்புதீன். நான் மனிதர்களை வெகுவாக மதிக்கிறேன். மதங்களை முன் வைத்தோ, இறைவனை முன் வைத்தோ எவரையும் ஒரு போதும் நிந்திக்க நான் நினைப்பது இல்லை. மத விமர்சனம் செய்வதால் மத நூல்கள் ஒழிந்து விடுமா? மதங்களும், இறைவனும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதன் நோக்கமே மதங்களில் உள்ள நல்ல விசயங்களை மட்டுமே பார்க்க வேண்டும் எனும் கருத்தில் சொன்னதுதான்.

மனித மனத்திற்கு எது தவறோ அதுதான் பெரிதாக தென்படும். அற்புதமான உலகில் நல்லவைகள் பெரிதளவு பேசப்படுவதில்லை. அதன் காரணமாகவே தீயவைகள் பெருகிவிடுகின்றன என சொல்லலாம்.

மதங்கள் பற்றி வாதாட அசாத்திய தைரியம் அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். மதங்களில் உள்ள நல்ல விசயங்களை மட்டுமே உலகத்தில் பரப்பினால் போதும். நான் திருக்குரானோ, பைபிளோ இன்னமும் படித்து முடிக்கவில்லை. படித்து முடித்ததும் இருக்கிறது வான வேடிக்கைகள்.

Radhakrishnan said...

//ஒவ்வரு மனித செயல்களிலும், சூழல், வளர்ப்பு, கல்வி, பேங்க் பாலன்ஸ், அப்போதைய மனநிலை, மதம், சமூக கட்டமைப்பு, பருவம், வருங்கால கனவு... மற்றும் இன்னும் பல - இவையெல்லாம் சேர்ந்தேதான் தீர்மானிக்கிறது. தீர்மானித்துவிட்டு திரும்பவும் எல்லாவற்றையும் படிக்க காரணம் - எனது தீர்மானம் தப்பாகவும் இருக்கலாம், அதனை யாரேனும் கன்னத்தில் அறைவது போல் பதில் தரலாம் - திருத்திகொள்ளலாம் என்பதால்தான், ஆனால் குறிப்பிட்ட மத பிடிப்பு கொண்டுவிட்டால் , திருத்திக்கொள்ள முடியாது,.. காரணம் உங்களது இடுக்கையின் தலைப்பில் இருக்கிறது//

மிகவும் நேர்த்தியாகவே சொல்லிவிட்டீர்கள் ஷர்புதீன். மிக்க நன்றி.

Anonymous said...

காபிர் V.Radhakrishnan அவர்களே

//உலகம் தட்டை என சொன்னது தவறு என குழந்தைகளிடம் சொல்லி வளர்ப்பதைவிட உலகம் உருண்டை என்பதை சொல்லி வளர்ப்பதுதான் சிறந்தது என்றே கருதுகிறேன். //

நீங்கள் உலகம் உருண்டை என்று சொன்னால், அது உலகம் தட்டை என்று கருதும் மூமின்களின் மத நம்பிக்கையை கேவலப்படுத்துகிறதே. அதனை சிந்தித்து பார்த்தீர்களா? இப்படி மூமின்களின் மத நம்பிக்கைகளை கேவலப்படுத்திவிட்டு எப்படி மதநல்லிணக்கத்தை கொண்டுவர முடியும்?
இதனால்தான் அல்குரான் மூமின்களுக்கு ஆணையிடுகிறது.
8:39. முஃமின்களே! காபிர்கள் முற்றிலும் நீங்கி, மதம் அல்லாஹ்வுக்கே என்று ஆகும்வரையில் காபிர்களுடன் போர் புரியுங்கள்;

Radhakrishnan said...

இது போன்ற வசனங்களை எல்லாம் குரானில் இருந்து இமாம்களும், முமீன்களும் கலந்து பேசி நீக்கிவிடுவதில் ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் இருக்கிறதா?

காஃபிர் என்றால் தீய எண்ணங்கள் என பொருள் கொள்ளலாமா?தீய எண்ணங்களை அகற்ற போராடுங்கள் என சொல்ல எத்தனித்து இருக்கலாமோ?

நன்றி இப்னு சாகிர்.

Anonymous said...

காஃபிர் ராதாகிருஷ்ணன்.

உங்களோட கேள்வியை படித்து தூக்கி வாரிபோட்டுவிட்டது.

ஜிஹாத் பற்றி இதே மாதிரி ஒரு தக்கியா இருக்கிறது. ஆனால் காபிரை அப்படி எதுவும் பண்ணமுடியாது. பிஜேவிடம்தான் கேட்க வேண்டும்

நல்லவேளை நீங்கள் காபிராக போய்விட்டீர்கள். இதுவே மூமினாக இருந்தால், அழகான முறையில் அங்கஹீனம் பண்ணலாம் என்று கடையநல்லூர் ஜமாத்தார்கள் வந்திருப்பார்கள்.

வேகநரி said...

//நேற்றைய முந்தைய பதிவில் விவிலியம் பற்றி விமர்சனம் செய்திருந்தேன் கிறித்துவர்கள் யாரும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வரவில்லை//
கோவி.கண்ணன்@
கிறித்துவர்களும் காஃபிர்கள் தான். அதனால் தான் அவங்க அப்படி. நல்லிணக்கம் புரிந்துணர்வு சகிப்புதன்மை ஏதுவும் அற்ற பெரும்பாலான இஸ்லாமியப் தமிழ் பதிவர்கள்( ஷர்புதீன் போன்ற இஸ்லாமிய பதிவர்களை தவிர)காபிர்களுடன் ஒப்பிட்டு சராசரியே என்று சொல்ல முடியாது.
//அவர்களும் பிறரைப் போன்று ஒரு சராசரியே என்பது தான் நீங்கள் அதை பாசிட்டீவாகச் சொல்லி இருக்கிறீர்கள்//
இவர் அப்படி சொன்னாரா?அப்போ மதவாதிகள் ஏமாந்திட்டாங்களா! அல்லது இவர் எல்லோரையும் சேர்த்து ஏமாற்றுகிறாரா!

Radhakrishnan said...

என்னங்க இப்னு சாகிர் அப்படி சொல்லிட்டீங்க. குரான் இருபது வருடங்களாக தொகுத்து எழுதப்பட்டது அப்படின்னு தானே சொல்றாங்க. முகம்மது நபிகள் படிப்பறிவு இல்லாதவர் அப்படின்னு சொல்றாங்க. அதனால எழுதுறவன் ஏட்டை கிழிச்சி இருந்தா என்ன பண்றது. இதை அடிப்படையா வைச்சி வேத நூல் அப்படின்னு ஒரு கதையை எழுதி இருந்தேன். மக்களுக்கு நேரடியா சொன்னாலும் புரியாது, இலைமறை காயாக சொன்னாலும் புரியாது. நான் காஃபிர் இல்லை, நான் முமீன் தான். இனிமேல் என்னை முமீன் முஸ்தபா என்று தாராளமாக அழைக்கலாம்.

கடையநல்லூர் ஜமாத்தார்களா, பயம் காட்டுறீங்க.

Radhakrishnan said...

அடடா, நான் எதற்கு ஏமாற்ற போகிறேன், அவர்களாகவே ஏமாந்தால் தான் உண்டு. சொல்லாதன சொல்லும் சொல் தெரியும் தானே நண்பரே. ;)

farook said...

ஐயா ராதாகிருஷ்ணன் அவர்களே, இந்த இப்னு சாகிர் என்பவன் முஸ்லீம் பெயரில் வந்த குள்ள நரி இவனை போன்றவரிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது உங்களை கொழப்பத்தில் ஆழ்திவிடுவன்.

வருண் said...

***farook said...

ஐயா ராதாகிருஷ்ணன் அவர்களே, இந்த இப்னு சாகிர் என்பவன் முஸ்லீம் பெயரில் வந்த குள்ள நரி இவனை போன்றவரிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது உங்களை கொழப்பத்தில் ஆழ்திவிடுவன்.***

VR!

It is indeed true. You need to be careful with him as he will confuse you and make you say something by "misdirecting' you! :-)

Anonymous said...

மதமல்ல மார்க்க சகோ farook
காபிர் வருண்,

ஒரு காமெடி பீஸை குள்ளநரி என்றெல்லாம் திட்டுவது தேவையா?

ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு இஸ்லாத்தை காபிர்களிடம் பரப்பி வருகிறேன்.
காபிர்கள் மனம் மகிழ பத்வாக்கள் பத்து. மாதிரியெல்லாம் எழுதி காபிர்களும் நமது பத்வாக்களை கண்டு பயப்படக்கூடாது என்று உழைத்து வருகிறேன்
என்னைப் போய் குள்ளநரி என்றெல்லாம் சொல்கிறீர்களே?

வேகநரி said...

Ibnu Shakir@
சகோ farook என்று அவர் உங்களை திட்டினாலும் பொங்கிவழியும் உங்கள் அன்பை வருண் மீது காட்ட உங்களுக்கு மனதுவருதில்லை.

Radhakrishnan said...

நாம் நம்மை அனுமதிக்காதவரை எவரும் நம்மை குழப்பத்தில் ஆழ்த்த இயலாது. என்னை பொறுத்தவரை குர்ஆனில் உள்ள நல்ல கருத்துகள் மட்டுமே எனக்கு போதும்.

ஹா ஹா வருண். என்னது நீங்களும் சேர்ந்து பயமுறுத்துறீங்க. அப்படியெல்லாம் பாதை மாறி செல்ல மாட்டேன். எனக்கு தெரிந்தது எல்லாம் மதங்கள் எல்லாம் மனிதர்களை ஒழுங்குபடுத்த தோற்றுவிக்கப்பட்டவை என்றுதான் கருதுகிறேன். இரண்டு அணி இருந்தால் ஒரு அணி சரியில்லை என சொல்லி அந்த அணியை சரிபடுத்துங்கள் என மற்ற அணிக்கு சொல்வது போல் மதங்கள் சித்தரிக்கப்பட்டதுதான் பிரச்சினைகளுக்கு காரணம்.

தந்திரமிக்கவர்கள் மட்டுமே இவ்வுலகில் வாழ இயலும் என்பதை சொல்கிறார்கள் இப்னு சாகிர், பத்வா என்றால் என்ன என்பதை விரைவில் தெரிந்து கொள்கிறேன்.

அட இது வேறயா. அதெல்லாம் வருண் மீது அன்பு இருக்கத்தான் செய்யும்.

Anonymous said...

காபிர் ராதாகிருஷ்ணன்,
சரியா சொன்னீங்க.. காபிர் வருண் மேலயும் அன்பு உண்டு. ஆனா கடையநல்லூர் ஜமாத்துக்கு தெரியாம அன்பு. காபிர் கறிக்கடையில கூட மூமின்கள் எதுவும் வாங்கக்கூடாதுன்னு சட்டம் போட்டிருக்காங்க. அதனால் காபிர் வருண் மேல அன்பை காட்டமுடியாது. ஆனா அன்பு இல்லைன்னு அர்த்தமில்லை.

Radhakrishnan said...

நான் குரான் படிச்சிட்டு வரேன். இதோட இரண்டு அத்தியாயம் படிச்சிட்டேன். புது புது வார்த்தை எல்லாம் இருக்கு. எனக்கு ரொம்ப சந்தேகம் வர ஆரம்பிச்சிருச்சி. அல்லாவுக்கு மேல இறைவன் இருக்காரா? எதுக்குனா ரெண்டு அத்தியாயம் படிக்கிறப்பவே அல்லா, இறைவன் இரண்டுமே குழப்பம் வந்திருச்சி. மனசை தேத்திகிட்டு இறைவன் சொன்னதாகவே இருக்கட்டும்னு படிச்சிட்டு இருக்கேன். இப்போ ஜெனிசிஸ், குரான் ஒரே நேரத்தில மறுபடியும் முதல்ல இருந்து படிச்சி நோட்ஸ் எழுதி வசனம் நம்பர் எல்லாம் போட்டு 'வான வேடிக்கைகள்' அப்படிங்கிற தலைப்புல ஒரு நாலைஞ்சு மாசம் அப்புறம் எழுதுறேன்.

ஷர்புதீன் said...

@ radhakrishnan

//என்னை பொறுத்தவரை குர்ஆனில் உள்ள நல்ல கருத்துகள் மட்டுமே எனக்கு போதும். //

கிளிஞ்சுது ,,,,, அப்ப மற்ற கருத்துக்கள் எல்லாம் தப்பா? ( இத நான் கேட்கிறதே ஒரு பெரிய தப்பு)

Radhakrishnan said...

தப்பாகவும் இருக்கலாம், சரியாகவும் இருக்கலாம். பார்ப்பவரின் பார்வையை பொறுத்து அது அமைகிறது ஷர்புதீன்.

Radhakrishnan said...

//VANJOOR said...
அன்பிற்குரிய திரு. ராதாகிருஷ்ணன் அவர்களே

தாங்களுடைய பெருந்தன்மையை பளிச்சிட்டுவிட்டீர்கள்.

தாங்கள் இந்த பதிவை ஒட்டி யாரிடமும் மன்னிப்பு கேட்க எந்த சூழ்நிலையும் இல்லை என்பது எனது அபிப்பிராயம்.

இஸ்லாமியர், மூஸ்லீம்கள் பற்றி காழ்ப்புணர்வுடன் பதிவிட்டு கருத்திட்டு என்ன சாதித்திருக்கிறார்கள்? சாதிக்கப்போகிறார்கள்?

அவர்களின் உள்ளமே அவர்களை சுடட்டும்.

இஸ்லாமிய பதிவர்கள் தாங்களுடைய மார்க்கத்தை பற்றி எந்தெந்தவாறு எழுதுகிறார்களோ அதெல்லாம் யார் யாருக்கோ பொறாமை , ஆற்றாமை தீயை உருவாக்கிவிட்டால் அதற்கு யார் என்ன செய்ய முடியும்.

இப்படி காழ்ப்புணர்வுகளுடன் புழம்பி அங்கலாய்ப்பவர்கள் அவர்களுடைய மார்க்கத்தை , கொள்கைகளை இஸ்லாத்தை முஸ்லீகளை உரசாதவாறு எழுதலாமே? , கருத்திடலாமே? என்ன தடை?

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?

திட்டவட்டமாக "எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இல்லை."

முஸ்லீகளுக்கு எந்த சாயத்தையும் யாரும் எப்படியும் பூசட்டும்.

அல்குரான்

“ 109:1. (நபியே!) நீர் சொல்வீராக: நிராகரிப்போர்களே !

109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.

109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.

109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.

109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். “//

தெளிவுபடுத்திய பின்னூட்டத்தை இன்றே கண்ணுற்றேன். நன்றி ஐயா.