Thursday 15 March 2012

குரான் பேசுமா அறிவியல்

ஒரு நூலினை நாம் எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு வித எண்ணம் இருக்கும். ஆனால் ஒரு நூல் பலரால் போற்றப்பட்டு, பலரால் நம்பப்பட்டு வரும் பட்சத்தில் அந்த நூலில் கூறப்படும் கருத்துகளை மறுத்து பேசுவது என்பது நம்பிக்கையாளர்களின் மனம் நோக செய்வதாகும்.

எத்தனையோ அறிவியல் வல்லுனர்கள், முனிவர்கள் எழுதிய நூல்கள் இருந்தாலும், அதிக மக்களால் அறியப்பட்ட நூல் என்றால் பகவத் கீதை, குரான், பைபிள் என்றே சொல்லலாம். இவை மதங்களின் அடிப்படையில் எழுதப்பட்டு இருந்தாலும், வாழ்க்கை முறைகளை சொல்வதாகவே கருதப்பட்டு இருக்கின்றன. அறிவியல் வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில் குரான், பைபிள் போன்ற நூல்கள் தங்களது வலிமையை இழக்கத் தொடங்கின என்றாலும் இன்னமும் இந்த நூல்கள் பலராலும் பின்பற்றப்பட்டு போற்றப்பட்டு வருகின்றன. தாய் வழித் தோன்றல்கள், தந்தை வழித் தோன்றல்கள் போல இந்த நூல்கள் இறைவழித் தோன்றல்கள் என்றே கருதப்பட்டு வருவது இந்த நூல்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

தத்தம் இறைவனை நம்புபவர்கள் இந்த நூல்களை ஒருபோதும் எதிர்த்து பேச முற்படமாட்டார்கள். ஆனால் வெவ்வேறு வழிப்பாதை கொண்டவர்கள் ஒரு கொள்கையின் மீது அவதூறு பேசி தமது கொள்கையே சிறந்தது என தமது வழிப்பாதை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது என்றே பெருமை பட்டு கொள்வார்கள். இதில் பகவத் கீதையை நாம் சற்று தள்ளி வைத்துவிடலாம். இதற்கு காரணம் அந்த நூல் அறிவியல் பேசுகிறது என இதுவரை எவரும் சொன்னதில்லை, பகவத் கீதை யோக நிலைகளை பறைசாற்றும் ஒரு இலக்கியம். அதற்கடுத்து பைபிள், இதுவும் அறிவியல் பேசுவதாக எவரும் சொல்வதில்லை. ஆனால் அவ்வப்போது உலகம் அழிவதாக சொல்வதாக சொல்வார்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி குரான் அறிவியல் பேசுவதாக பல அறிவியல் அறிஞர்கள் முதற்கொண்டு படித்து தெளிந்த பலர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

குரான் அறிவியல் பேசித்தான் அது இறைவன் சொன்னதாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என நினைக்கும் அளவுக்கு குரானின் நிலை சென்று கொண்டிருப்பது வருத்தத்திற்கு உரியது. குரான் அறிவியல் பேச வேண்டிய நிர்பந்தம் தான் என்ன? அது அறிவியல் நூலா, வாழ்வியல் நூலா? என்று இதுவரை அறிந்தது இல்லை.

முகம்மது நபிகள் படிக்காதவர், அவருக்கு இத்தனை ஞானம் எப்படி வந்திருக்கும், எனவே குரான் இறைவன் சொன்னதுதான் என்று ஒரு வாதம் வேறு. படிக்காதவர்களை இப்படி எல்லாம் இழிவு படுத்தி இருக்க வேண்டாம். அதே படிக்காத நபிகள் தான் நபிகள் வாக்கு என சொல்லி இருப்பதாகவும் இருக்கிறது. படிக்காத ஒருவர் எப்படி அப்படியெல்லாம் அழகிய வாக்குகள் சொல்லமுடிந்தது என எவரேனும் நினைப்பாரில்லை. குரானும், நபிகள் வாக்கும் பிரித்தே கையாளப்பட்டு இருக்கிறது என்பதுதான் வரலாறு. மேலும் படிப்பறிவு என்பது எதை வைத்து சொல்வது என்பதையும் எவரும் அறிந்தாரில்லை. குரான் எழுதப்பட்டதாக சொல்லப்படும் காலகட்டங்களில் அரேபிய நாடுகள் அறிவியலில் செழித்தோங்கி இருந்தன. அதன் விளைவாக கூட சில வசனங்கள் குர்ஆனில் வைக்கப்பட்டு இருக்கலாம், எனினும் குரானின் நோக்கம் அறிவியல் பேசுவதா?

எனது நண்பர் ஒருவர் சொன்னார், குரான் மட்டுமே அறிவியலுக்கு நெருக்கமாக பேசுகிறது என. நான் அவரிடம் கேட்டேன். நீங்கள் குரான் முழுவதும் படித்து விட்டீர்களா என! இல்லை என்றார். ஒரு நூலை அணுகும் முன்னர் வெளிப்படையான மனம் இல்லை என்றால் அந்த நூலில் நாம் தேடுவது இருக்கிறதா என்றுதான் கண்கள் போகும். அப்படி ஒன்று இருந்துவிட்டால் சாதகம் எனில் சாதகமும், பாதகம் எனில் பாதகமும் என நமக்கு வசதிக்கு ஏற்ப நாம் எழுதுவோம்.

ஆனால் மனதை நிர்மூலமாக்குதல் என முன்னோர்கள் சொல்லி வைத்து இருக்கிறார்கள். அதாவது குரான் ஒரு நூல் மட்டுமே. இப்போது முகம்மது நபிகள் ஒரு இறைத்தூதர், அந்த நூல் முகம்மது நபிகளுக்கு இறைவன் சொன்னது என்பதெல்லாம் இரண்டாம் நிலை. இந்த இரண்டாம் நிலை எல்லாம் நாம் அறிந்து கொண்டு அந்த நூலினை அணுகும்போது நமது மனநிலை, ஒன்று இறைவன் மீது நம்பிக்கை உள்ளவராக இருந்தால் நேசத்தோடும், இரண்டாவது இறைவன் மீது நம்பிக்கையற்றவர்களாக இருந்தால் வெறுப்போடும் அணுகத் தோன்றும். இது மனித இயல்பு. எந்த ஒரு முதல் புத்தகமும், எழுதுபவருக்காக வாங்கப்படுவதில்லை. ஆனால் அதற்குப்பினர் அந்த நபரால் எழுதப்படும் புத்தகங்கள் அவருக்காகவே வாங்கப்படும் நிலை ஏற்படுகிறது. ஆனால் அந்த நிலை எல்லாம் குரானுக்கு இல்லை. குரான் நம்பிக்கைகளின் வெளிப்பாடு.

எனக்கு ஒரு நண்பர் அரபு வசனங்கள் கூடிய தமிழ் வசனங்கள் கொண்ட குரான் தந்தார். முதலில் படிக்கும்போது எதற்கு இறைவன் இப்படி நபிகளிடம் சொன்னார், இதை எல்லாம் இறைவன் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்றே தோணியது. எப்போது மனதை நிர்மூலமாக்குகிறேனோ அப்போது குரான் வாசிக்கிறேன் என நண்பரிடம் சொன்னேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே உங்களால் மனதை இனிமேல் நிர்மூலம் ஆக்க முடியாது. இதை செய்ய வேண்டும் எனும் அணுகுதல் இருக்கும்போது அதை செய்து விட்டோமா என சரி பார்க்க தோன்றும், எனவே மனதை நிர்மூலமாக்குதல் அவசியம் இல்லை. இறைவன் தந்ததாகவே படியுங்கள் என்றார். அந்த மன நிலை இப்போது இருக்கிறது என்றே கருதுகிறேன். அறிவியல் மூலம் மேலும் பல விசயங்கள் அறிந்து கொள்ளவே விருப்பம் உண்டு, அதுபோலவே இந்த குரானும்.

குரான் - இறைவன் தந்தது.


ஆமாம், குரானை எழுத சொன்னவரே இறைவன் சொன்னதாய் சொன்னது. 

21 comments:

கோவி.கண்ணன் said...

உங்கள் முந்தைய பதிவுக்குக் கிடைத்த மகுட வாக்குகள் இதற்குக் கிடைக்காது, ஏனினெல் நீங்கள் (அவர்களுக்கு) பிடித்தமாதிரி எழுதவில்லை.

அறிவியல் அறிஞர்கள் முட்டாள்கள் வேதப் புத்தகத்தில் புட்டு புட்டு வைத்து என்றோ சொல்லியதை கண்டுபிடிக்க இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார்களே என்று அவர்கள் அலுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதற்காக சிரிக்காமல் கேட்டுக்கொள்ளலாம்

கோவி.கண்ணன் said...

//அறிவியல் அறிஞர்கள் முட்டாள்கள் வேதப் புத்தகத்தில்... //

அறிவியல் அறிஞர்கள் அனைவரும் முட்டாள்கள், வேதப் புத்தகத்தில்...

அனைவரும் மற்றும் கமா விடுபட்டுவிட்டது.

Radhakrishnan said...

கோவியாரே, நிறையவே எழுத வேண்டி இருக்கிறது. அப்படி எழுதி என்ன சொல்லப் போகிறோம் என்றே அமைதியாக இருந்துவிடுவது உண்டு.

மகுட வாக்குகள் எல்லாம் எனக்கு எட்டாத விசயம். கற்றறிந்த பெருந்தகைகள் எல்லாம் இந்த சபைகளில் இருக்க சிற்றறிவு கொண்ட நான் எம்மாத்திரம்.

நல்ல அறிவியல் விசயங்களை சிந்தித்து எழுதுவது என்பது 'இருக்கின்ற கொள்கைக்கே' உட்பட்டு இருக்க வேண்டும் என்பதை எல்லாம் நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை, அப்படி இருக்க இந்த இறைநூல்கள் மற்றும் எப்படி விதிவிலக்காக முடியும்.

எனக்கும் இறைவன் தான் இப்படி எழுத சொல்கிறான் என்றால் எதற்கு நம்ப மறுக்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. ஒருவேளை நான் படிப்பறிவில்லாத முட்டாள் இல்லை என்பதாலோ அல்லது படித்த முட்டாள் என்பதாலோ என தெரியவில்லை.

G.M Balasubramaniam said...

நான் குரான் படித்ததில்லை. படிக்கும் வாய்ப்பு கிடைக்க வில்லை என்பதே சரி
எதையும் படிக்கும் முன் இது இப்படித்தான் இருக்கும் என்று அணுகாமல் திறந்த மனதோடு படிப்பதே சிறந்தது. எல்லாப் பாதைகளும் நல் வழி காட்டுபவையே . உங்கள் அணுகுமுறை தெளிவாயிருக்கிறது.

//எனது நண்பர் ஒருவர் சொன்னார், குரான் மட்டுமே அறிவியலுக்கு நெருக்கமாக பேசுகிறது என. நான் அவரிடம் கேட்டேன். நீங்கள் குரான் முழுவதும் படித்து விட்டீர்களா என! இல்லை என்றார். ஒரு நூலை அணுகும் முன்னர் வெளிப்படையான மனம் இல்லை என்றால் அந்த நூலில் நாம் தேடுவது இருக்கிறதா என்றுதான் கண்கள் போகும். அப்படி ஒன்று இருந்துவிட்டால் சாதகம் எனில் சாதகமும், பாதகம் எனில் பாதகமும் என நமக்கு வசதிக்கு ஏற்ப நாம் எழுதுவோம்.//

Radhakrishnan said...

//நான் குரான் படித்ததில்லை. படிக்கும் வாய்ப்பு கிடைக்க வில்லை என்பதே சரி
எதையும் படிக்கும் முன் இது இப்படித்தான் இருக்கும் என்று அணுகாமல் திறந்த மனதோடு படிப்பதே சிறந்தது. எல்லாப் பாதைகளும் நல் வழி காட்டுபவையே . உங்கள் அணுகுமுறை தெளிவாயிருக்கிறது.//

வாய்ப்பு கிடைப்பின் நேரம் இருக்கும்போது வாசித்து பாருங்கள் ஐயா. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

UNMAIKAL said...

*நட்சத்திரம்* : 19ஆம் நூற்றாண்டும், பகவத் கீதையும் !- பதிவர்: கோவி.கண்ணன்.


பகவத்கீதை - இதில் மனு என்ற அரக்கன் மறைவாக பதுங்கி இருந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிறப்பை வைத்து இழிவுபடுத்தவும்,

பிறப்பின் அடிப்படையில் 'தகுதிகள்' பற்றி பேசவும் கண்விழித்துக் காத்துக் கொண்டிருக்கிறான்.

இதற்குமேலும் தமிழக இந்துக்கள் கீதையை போற்ற ஆரம்பித்தால் அதில் மறைந்துள்ள வர்ண சூட்சமத்தை சூரணமாக்கி தின்று அந்த தெம்பில் வெளியே வந்து பயமின்றி நடனமே ஆடுவான்.

புனித நூல் என்பதால் சில கருத்துக்களில் உடன்பாடு (சமரசம், காம்ரமைஸ்) செய்து கொள்ளலாம் என்று நினைத்து அலட்சியமாக இருந்தால்

மனுவென்ற அரக்கன் கீதையின் (கிருஷ்ணனின்) ஆதரவு நிழலில் படுத்துக்கிடக்கும் ஆதிசேசன் போன்றவன்.

எந்த நேரத்திலும் அவன் விஷம் கக்கினால் மீண்டும் நாமெல்லாம் சூத்திரர்கள் ஆக்கப்படுவோம் என்ற ஆபத்து நிறையவே இருக்கிறது.

சூத்திரன் - இதன் பொருள் வேசி மகனா ? இழிபிறவியா ? மனுவில் உள்ள குறிப்புப் படி அப்படித்தான் பொருளாம் !!!

எதைக் கொண்டுவந்தாய் எதை இழப்பதற்கு ?

பகவத் கீதையை கொண்டுவந்தால் அதன் பிறகு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை!!!

இன்று உன்னுடையதாக இருப்பது (அதாவது நீ மீட்டுக் கொண்டது ?) நாளை வேறு ஒருவருடையது ஆகும் ! :))

அதன்பிறகு பெறுவதற்கென்று எதாவது கிடைத்தால் தானே இழப்பைப் பற்றி பேச முடியும் ? :(

பதிவர்: கோவி.கண்ணன்.


SOURCE:
*நட்சத்திரம்* : 19ஆம் நூற்றாண்டும், பகவத் கீதையும் ! -- பதிவர்: கோவி.கண்ணன்.


.

Robin said...

//குரான் அறிவியல் பேசித்தான் அது இறைவன் சொன்னதாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என நினைக்கும் அளவுக்கு குரானின் நிலை சென்று கொண்டிருப்பது வருத்தத்திற்கு உரியது// :)

UNMAIKAL said...

Specially to Robin

உலகம் உருண்டை என்னும் அறிவுபூர்வமான-ஆக்க ரீதியான கலிலியோவின் ஆராய்ச்சி உண்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டால் ஏசுநாதரும், கிறித்தவ மதமும், பைபிள் என்னும் விவிலியமும் அடிபட்டு ஆட்டங்கண்டு செத்தொழிந்து மறையுமே என்று எண்ணிய கிறித்தவ மத வெறியர்கள் தங்கள் மதக் கருத்துக் கோட்பாட்டைக் காக்கும் பொருட்டு அறிவியல் ஆய்வறிஞன் கலிலியோவை அடித்தே கொன்றார்கள் என்பதை எவரே மறுக்க இயலும்?

பைபிளில் மாபெரும் தவறா?. இப்டிலாமா பைபிள் சொல்லுது?
பூமிக்கு அஸ்திவாரமாம்?,
பூமிக்கு தூண்களாம் ?
பூமிக்கு நான்கு மூலைகளாம்?.
சூரியன் தான் நகருகுறது. பூமியல்லவாம்!!


விஞ்ஞான அறிவிற்கு புறம்பான பைபிள் கூற்றுகள்.!!!

கல்வி அறிவு பெற்ற கிறிஸ்துவ மிஷனரிகளை வெட்கி தலை குனிய செய்யும் புனித‌ பைபிளின் ஸ்லோக‌ங்களில் சில‌.

பூமிக்கு அஸ்திவாரம்? பூமிக்கு தூண்கள் உண்டு? பூமியை அஸ்திவாரங்களின் மேல் கர்த்தர் அசையாமல் நிலை நிறுத்தி அமைத்திருக்கிறார். பூமி சுழலுவதில்லை.

பைபிள். சங்கீதம் . 104 அதிகாரம் ஸ்லோக‌ம் 5
BIBLE: PSALMS. CHAPTER 104.VERSE. 5
__________________________________
SOURCE LINK: பைபிளில் மாபெரும் தவறா?. இப்டிலாமா பைபிள் சொல்லுது?

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே!

நல்ல பதிவு.மதம் சாரா தன்னைத்தான் அறிய முயலும் சுயநலமற்றவர்களை எல்லோரும் மதிப்பர். மதம்,புத்தகம் பின்பற்றுபவர்களிலும் அதில் உள்ள கால்த்திற்கு ஏற்ற நல்ல கருத்துகளை பின்பற்றுபவர்களை யாரும் விமர்சிக்க மாட்டார்கள்.

மதத்தில் அறிவியல் உள்ளது என்பது ஒரு மதப் பிரச்சார உத்தி என்ற வகையில் மறுத்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.

பெரும்பாலும் நன்கு உறுதிப்படுத்தப்பட்ட அறிவியல் கருத்துகளை ,மொழி பெயர்ப்பில் சிறிது மாற்றி ஏற்கெனவே இல்லாத பொருளை கொடுக்கும் வகையில் விள்க்குவதுதான் மத புத்தகத்தில் அறிவியல் என எளிதில் அறியலாம்இதனை ஊக்குவிக்கும் ,பயிற்றுவிக்கும் அமைப்புகள் உண்டு/.மௌரிஸ் புகைல் என்னும் ஃப்ரான்ஸ் நாட்டு மருத்துவர் சவுதியில் பணியாற்றிய போது எழுதிய குரான்,பைபிள் ,அறிவியல்[1976 C.E] என்னும் புத்தக்த்தில் இருந்துதான் இப்பிரச்சாரம் தொடங்குகிறது. கால அளவில்.கண்டுபிடிப்பிற்கு முந்தைய மொழிபெயர்ப்பில் இந்த விள்க்கம் இருக்காது என்னும் இது சிரிக்க மட்டும் உதவும் விடயம்.

தொழில் போட்டியில் பல பிரச்சாரகர்கள் இல்லாத பொருள் எல்லாம் கூறி அவர்கள் சார்ந்த மத்த்திற்கும் கெட்ட பெயரையே ஏற்படுத்துகிறார்கள்.பிறகு பிரச்சாரகர்கள் எதைக் கூறினாலும் சந்தேகத்தோடே பார்ர்க்க வேண்டி இருக்கும்.

அறிவியல் சொல்வதை புத்தகம் சொல்வதால் நிரூபிக்கப்படும் என்பது எதிரான வினைகளை மட்டுமே உருவாக்கும்.மத சார்பற்ற நடுநிலையாளர்கள் பலரும் ஏன் இப்போது சிறுபானமை மதங்களையும் முன்பு இலாதது போல் விமர்சிக்கிறார்கள் என்றால் இது போன்ற பிரச்சாரங்கள்தான்.இதில் நாம் பல விடயங்கள் கூற இயலும் என்றாலும் இம்மாதிரி பிரச்சாரங்களை எதிர் மிக சுலபமாக கொள்வது எப்படி என்ற நம் பழைய பதிவு சில‌.
மதத்தில் அறிவியல என்ற பரப்புரையை எதிர்கொள்வது எப்படி?.

http://saarvaakan.blogspot.com/2011/03/blog-post_29.html
மதத்தில் அறிவியல் எப்படி யார் கொண்டு வருகிறார்கள்?.

http://saarvaakan.blogspot.com/2011/06/blog-post_08.html
http://en.wikipedia.org/wiki/Maurice_Bucaille

நன்றி

வேகநரி said...

உள்ளதை பேச புறப்பட்டுவிட்டிர்கள். இனியெல்லாம் வாக்குகள் உங்களுக்கு கிடைக்காது.
குரான் பெயரால் எதை சொன்னாலும் நம்பும் படியாகவே அவர்களில் பெரும்பான்மையோர் சிறுவயதில்லிருந்தே முழு மூளை வாஷ் செய்யபட்டு வளர்க்கபட்டவர்கள். தங்களை மாதிரியே மற்றவர்களையும் எதிர்பார்க்கிறார்கள்.

UNMAIKAL said...

to thequickfox

ஆமாம். ஆமாம்.

பரமசிவன் தலையில் மேலே சந்திரன் இருக்கிறது என்றும்

சிவன் தலை ஜடையிலிருந்து கங்கை நதி கொட்டிக்கொண்டிருக்கிறதும்

என்று நம்பும்படியாகவே சிறுவயதில்லிருந்தே முழு மூளை வாஷ் செய்யபட்டு வளர்க்கபட்டவர்கள்.

தங்களை மாதிரியே மற்றவர்களையும் எதிர்பார்க்கிறார்கள். ஆமாம். ஆமாம்.

Radhakrishnan said...

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

சார்வாகன் said...

வண்க்கம் நண்பரே,

இந்த உண்மைகள் என்பவர் இப்படி பிற மதங்களை இழிவாக விமர்சிப்பதை அனுமதிக்கும் சில பதிவர்கள் ஒன்றுமில்லாத விடயங்களுக்கே ஊரைக் கூட்டி மன்னிப்பு கேள் என்று ஆர்பாட்டம் செய்வதும் அறிவது நலம்.

திருவாளர் உண்மையின் கருத்தை மற்றவர்கள் அறிய அனுமதித்த‌மைக்கு பாராட்டுகள்!!!!!!!!!.

மத புத்தகத்தில் கண்டுபிடிப்புக்கு முன் அதே [ஒரே] பொருளில் அனைத்து மொழி பெயர்ப்புகளிலும் 1400 வருடமாக் சரி போனால் போகிறது 1000 வருடமாக இருக்கிறது என ஒன்றைக் காட்டினால் அவர்கள் கூறுவது சரி என அனைவருமே ஒத்துக் கொள்ளலாம்.என் எனில் ஒரு புத்தக்த்தின் மொழி பெயர்ப்பு காலம் செல்ல செல்ல வித்தியாசப்படும் என்பதை அறிந்ததால் கூறுகிறேன்.

இது போல் காட்டினால் கூட போதும்!!!!!!!
**************
இது ஒரு அளவிற்கேனும் சரியானது.

பிரபஞ்சம் மிக மிக பழமையானது[ட்ரில்லியன் ஆண்டுகள்] ,மிகப் பெரியது என இந்து மத வேதங்கள் ஐயந்திரிபர கூறுவதைப் போல்.பல் யுகங்கள் என்ற கண்க்கீடு அறிவியலுக்கு முந்தையது.
************

சரி இதில் அந்த வேதம் போல் இது என்றே முடிவு வரும்.ஆகவே எதிர்கால கண்டு பிடிப்பு 10 தீர்க்க தரிசனமாக் உரையுங்கள்.1400 வருடம் முன்பு இப்போதைய் கண்டுபிடிப்பு தெரியும் என்றால் ஏன் இப்போதைய் அறிவியலின் சிக்கல்களை தீர்க்க உதவக் கூடாது?


மத அறிவியலாளர்கள் யாராவது வாருங்கள்!!!!!!!!!!!!.

நன்றி

கோவி.கண்ணன் said...

இன்றைய தேதியில் மதங்கள் யாருடைய நம்பிக்கையும் பெருவதில்லை, அதனால் வியாபார தந்திரமாக மதவாதிகளால் அறிவியல் குதிரைகளின் வாலில் ஒட்டவைக்கப்பட்டு விடப்படுகிறது, ஆனால் அது குதிரை லத்தியுடன் கீழே விழுந்து அகற்றப்படுகிறது.

Radhakrishnan said...

சார்வாகன் said... //இந்த உண்மைகள் என்பவர் இப்படி பிற மதங்களை இழிவாக விமர்சிப்பதை அனுமதிக்கும் சில பதிவர்கள் ஒன்றுமில்லாத விடயங்களுக்கே ஊரைக் கூட்டி மன்னிப்பு கேள் என்று ஆர்பாட்டம் செய்வதும் அறிவது நலம்.

திருவாளர் உண்மையின் கருத்தை மற்றவர்கள் அறிய அனுமதித்த‌மைக்கு பாராட்டுகள்!!!!!!!!!.//

வணக்கம் நண்பரே. விரைவில் நீங்கள் கொடுத்த மதத்தில் அறிவியல் என்ற பரப்புரை இணைப்பை படிக்கின்றேன். மதம் சார்ந்த பல விசயங்களை, பரிணாம கோட்பாடுகள் குறித்து நிறையவே எழுதி வருகிறீர்கள் என அறிகிறேன்.

உண்மைகள் என்பவர் அவர் படித்த விசயங்களை அதற்கு தொடர்புடைய இணைப்பு கொடுத்து இங்கே பகிர்ந்து கொண்டு இருக்கிறார். இதை நான் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்.

தகாத வார்த்தைகள் மட்டுமே நான் இங்கே அனுமதிப்பது குறித்து நிறைய யோசிக்க வேண்டும். மற்றபடி கருத்துகள் கருத்துகள் தான்.

மதத்தில் அறிவியல் உள்ளது என்பது பற்றி சொல்வதில் எந்த தவறும் இல்லை, என்னால் கூட இந்து மத சார்ந்த புராணங்களில் இருந்து, குரானில் இருந்து அறிவியல் பற்றி கோடிட்டு காட்ட முடியும். நமது வசதிக்கேற்ப எழுதுவது என்ன கடினமா என்ன! ஆனால் அறிவியல் பேசுவதால் தான் ஒரு மத நூல் இறைவனால் அருளப்பட்டது என்பது முற்றிலும் கடைந்தெடுத்த பொய்.

நான் முகம்மது நபி அவர்களை நம்புகிறேனா, இல்லையா என்பது பொருத்தே அந்த நூல் இறைவனால் அருளப்பட்டதா, இல்லையா என்கிற நிலைதான் குரான் நூலுக்கு இருக்கிறது. ஏனெனில் குரான் எல்லாம் முகம்மது நபி அவர்கள் இறைவன் தனக்கு அருளியதாக சொன்னதுதான். இதை எவரும் மறுக்க இயலாது.

நபியே நீர் இப்படி சொல்லும், நபியே நீர் அப்படி சொல்லும் என்று இறைவன் தம்மிடம் சொன்னதாகவே அவர் சில பல வசனங்களில் சொல்லி இருக்கிறார் என்பதை எவரும் மறுத்து பேச இயலாது.

எவரையேனும் இத்தனை வசனங்களையும் எழுதி கொண்டு வந்து காட்ட சொல்லும் என இறைவன் சொல்வதாக சொல்கிறார் ஓரிடத்தில். இதற்காகவே வசனங்கள் உட்கார்ந்து எழுத எவரேனும் முற்பட்டார்களா என தெரியவில்லை. ஆனால் இப்படி வசனங்கள் எழுதிட எனக்கு அளவு கடந்த ஆசை உண்டு. இந்த குரான் வசனங்கள் குறித்து எப்படி வந்தது என பிறரிடம் அவர் சொல்லி இருந்தாலும் முகம்மது நபிகளுக்கு மட்டுமே முழு உண்மை தெரியும் என்பது மட்டும் தான் நான் அறிந்த உண்மை. எனவே முகம்மது நபிகளை பொருத்தவரை இது இறைவன் அவருக்கு அருளியது என்றே கருதப்படும் நிலை இருந்து வருகிறது. இதை நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம்.

//1400 வருடம் முன்பு இப்போதைய் கண்டுபிடிப்பு தெரியும் என்றால் ஏன் இப்போதைய் அறிவியலின் சிக்கல்களை தீர்க்க உதவக் கூடாது?//

நாம் இருக்கின்ற ஒன்றை வைத்துதான் குறிப்புகள் செய்வோம். அதுபோலவே இன்று அறிவியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள் இந்த குரானில் ஆங்காங்கே சொல்லப்பட்டு உள்ளதாக குறிப்பு சொல்வது தன்னைத்தானே தட்டி கொடுத்து பெருமைபட்டு கொள்வதாகும். இது குறித்து நிறையவே எழுத விருப்பம். பார்க்கலாம். அறிவியல் சிக்கல்களை தீர்த்து வைக்க குரான் ஒன்றும் தீர்க்க தரிசன அறிவியல் அல்ல என்பதை தாங்கள் அறிவீர்கள்.

மொழிபெயர்ப்பு குறித்து நீங்கள் குறிப்பிடுவது மிகவும் சரி. இதன் காரணமாகவே புரிந்து கொள்ளுதல் என வரும்போது சில வசனங்கள் அர்த்தப்படும் விதம் மாறுகின்றன.

காஃபிர் என்றால் வேற்று மதக்காரர்கள் என பொருள் கொள்வதை விட 'தீய எண்ணங்கள்' என பொருள் கொண்டால் என்ன என்றே நான் சிந்தித்தது உண்டு. முமீன்கள் என்றால் நல்ல எண்ணங்கள் என சிந்திக்கலாம்.

குரான் - அவரவர் கைகளில் உள்ளது.

Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...
இன்றைய தேதியில் மதங்கள் யாருடைய நம்பிக்கையும் பெருவதில்லை, அதனால் வியாபார தந்திரமாக மதவாதிகளால் அறிவியல் குதிரைகளின் வாலில் ஒட்டவைக்கப்பட்டு விடப்படுகிறது, ஆனால் அது குதிரை லத்தியுடன் கீழே விழுந்து அகற்றப்படுகிறது.//

அடடா கோவியாரே! மதங்கள் வலிமை இழப்பது என இருந்தாலும் ஏதோ ஒரு கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்றே கருதுகிறேன். இஸ்லாம் அடைந்து வரும் வளர்ச்சியை எவரும் தவறாக கணித்து கொள்ள முடியாது. மனிதாபிமானம் தான் மதம் சொல்லும் கருத்து என்றுதான் இன்றைய தேதியில் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மதம் குறித்த சிந்தனை ஆங்காங்கே விதைக்கப்பட்டு வருவது தவறில்லை.

ஆனால் நீங்கள் சொல்வது போல அறிவியல் பற்றி மதம் சொல்கிறது என்றெல்லாம் சொல்வது சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

அப்பாதுரை said...

'எல்லாமே முன்னால் சொல்லப்பட்டிருக்கிறது' எனும் வாதம் கண்மூடித்தனம் என்பது புரியும் வரையில் 'புனித' புத்தகங்களில் புதுப்புது அர்த்தங்கள் கண்டுபிடித்துக் கொண்டிருப்போம்.

வேகநரி said...

//எல்லாமே முன்னால் சொல்லப்பட்டிருக்கிறது
எனும் வாதம் கண்மூடித்தனம் என்பது புரியும் வரையில் புனித புத்தகங்களில் புதுப்புது அர்த்தங்கள் கண்டுபிடித்துக் கொண்டிருப்போம்.//

திரு.அப்பாதுரை சுப்பராக உண்மையை சொன்னீங்க.நன்றி

Hussain Muthalif said...

சகோதரா "முகம்மது நபிகள் படிக்காதவர், அவருக்கு இத்தனை ஞானம் எப்படி வந்திருக்கும், எனவே குரான் இறைவன் சொன்னதுதான் என்று ஒரு வாதம் வேறு. படிக்காதவர்களை இப்படி எல்லாம் இழிவு படுத்தி இருக்க வேண்டாம். அதே படிக்காத நபிகள் தான் நபிகள் வாக்கு என சொல்லி இருப்பதாகவும் இருக்கிறது. படிக்காத ஒருவர் எப்படி அப்படியெல்லாம் அழகிய வாக்குகள் சொல்லமுடிந்தது என எவரேனும் நினைப்பாரில்லை" உங்கள் கேள்விக்கு திருக்குரான் 29:48 - ல் "உம் வலக்கையால் அதை எழுத்துபவராக இருக்கவில்லை" என்று பதில் கூறுகிறது.
படிக்காதவர் என்றால் அறிவில்லாதவர் என்று பொருளில்லை. மேலும் பைபிளில் உள்ளது போல் கலப்பு குரானில் வரக்கூடாது என்றே ஹதீஸை ( நபி மொழியை) தனியாக தொகுத்துள்ளனர்.
சகோ. Robin//குரான் அறிவியல் பேசித்தான் அது இறைவன் சொன்னதாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என நினைக்கும் அளவுக்கு குரானின் நிலை சென்று கொண்டிருப்பது வருத்தத்திற்கு உரியது// :)
இது அறிவியல் யுகம், அதனால் அறிவியல் பற்றி பேசவேண்டியுள்ளது. வரப்போவது மனிதயுரிமை யுகம். அப்போதும் குரான் கொடுக்கும் மனிதயுரிமை பற்றி நிறைய reference கொடுக்கமுடியும்.
எந்த காலகட்டத்திலும் பொருந்தும் என்பதுதான் முக்கியம்.
திறந்தமனசுடன் குரானை படியுங்க எல்லாம் வல்ல இறைவன் நேர் வழி காட்டுவான்.

Yaathoramani.blogspot.com said...

எப்போதும் கடைசியாக செய்யப்படுகிற எதுவும்
முன்னர் செய்யப்பட்டவைகளில் உள்ள குறைகளைக் கலைந்து
குற்றங்குறைந்தவைகளாகவே காணப்படும்
என்வே எதையும் ஒப்பீடு செய்கையில்
காலத்தையும் முக்கிய அளவு கோலாகக் கொள்ளவேண்டும்
அந்த வகையில் மூன்று புனித நூல்களையும்
ஒப்பிட்டுப் பார்த்தல் கூட சரியற்றது என்பது என் கருத்து

S M S said...

மனிதனை படைத்தவன், அவன் எப்படி வாழ வேண்டும் என கூறும் முழுமையான அறிவுரையே குர்ஆன். தற்போதைய வழக்கில் வழிமுறை ஏடு (catalogue) என சொல்லலாம் . மனிதன் சந்திக்கும் அனைத்து விஷயங்களுக்கும் தீர்வை சொல்ல வேண்டுமல்லவா? அதில் ஒரு பகுதி தான் அறிவியல்.

தற்போதைய வியத்தகு அறிவியல் கண்டு பிடிப்புகளை, 1400 வருடங்களுக்கு முன்னாள் கூறியிருப்பதால், அப்போதிருந்த சிறந்த அறிவு படைத்தவர் கூட இதனை கூறி இருக்க முடியாது. மாறாக எக்காலத்தையும் அறிந்த படைத்தவனால் மட்டுமே கூறி இருக்க முடியும் என்பதுதான்.

நபி எழுத படிக்க தெரியாதவர் தானே அன்றி, அறிவற்றவர் என யாரும் கூறுவதில்லை.

(படித்த அனைவரும் அறிவோடு இருப்பது இல்லை என்பதும் நிதர்சனம்.)