Thursday 26 January 2012

நண்பனால் தடுமாறிய தமிழ்வெளி

ஹிட்ஸ் ஹிட்ஸ் ஹிட்ஸ்! 

பதிவு எழுத வந்திருப்பவர்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்களா என்பது பற்றிய விவாதம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். 

பதிவு எழுத வந்திருப்பவர்கள் தரமிக்க பதிவுகளை எழுதுகிறார்களா என்பது பற்றிய கலந்துரையாடல் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். 

எந்த பதிவர் எப்படி தலைப்பு வைத்து எழுதி எப்படி ஹிட்ஸ் அள்ளி குவிக்கிறார் என்பதுதான் இன்றைய விவாதம் எல்லாம். ஹிட்ஸ் வைத்து வீடா கட்டப் போகிறோம் என அறைகூவல் விடுத்தாலும் ஹிட்ஸ் என்பது ஒரு அங்கீகாரத்தின் அடையாளம். 

எழுத்துகள் அத்தனை எளிதாக எவரையும் வசீகரிப்பதில்லை. எந்த ஒரு எழுத்தாளரும் அனைத்து சமூகத்தையும் தன்னருகே ஒருங்கே நிறுத்தியது இல்லை இதுவரை. பிரிவினைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. நான் இவரது ரசிகன் என ஒருவர் சொல்லும்போதே மற்றவர்களை ரசிக்கும் தன்மை குறைந்தவராகவே தென்படுகிறார். 

எழுதுவது அவரவர் உரிமை. எப்படி எழுதுவது, எதை எழுதுவது என்பதை எழுதுபவரே தீர்மானிக்கிறார். 

இப்பொழுதெல்லாம் ஒரு சட்டம் இருக்கிறது. இதை மறுமொழி இடுபவர்க்கு என வெப்துனியா தனது மறுமொழி இணைப்புக்கு முன்னர் எழுதி இருக்கிறது. 

//விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.//

இதே விசயத்தை பதிவு எழுதுபவர்கள் மீதும் ஒருவர் தொடங்கலாம் என்பது அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்று. 

இணையத்தில் நல்ல விசயங்களை மட்டுமே வாசிக்க நினைப்பவர்கள் கையில் தான் மவுஸ் உள்ளது. இவர்கள் அவ்வாறு செய்யாமல் சர்ச்சைக்குரிய விசயங்களைப் பற்றி பேசி பொழுதை வீணடிக்கிறார்கள் என்கிறார் இணையதளத்தை அதிகமாக உபயோகிக்கும் ஒருவர். 

மேலும் இணையதளத்திற்கும், மொபைல் போன்களுக்கும் அடிமையாகிவிட்டு இதற்கெல்லாம் அடிமையாகி விடாதீர்கள் என பிறருக்கு அதே அடிமைத்தனத்தில் இருந்து கொண்டே எச்சரிக்கை விடுப்பது குடிகாரன் பிறரை குடிக்காதே என அறிவுரை சொல்வது போன்றதுதான். அவரவருக்கு தெரியும் எது செய்ய வேண்டும், எது செய்ய கூடாது என. எந்த போதையும் கண்களை மறைக்கும். 

இந்த ஹிட்ஸ் பற்றி என்ன சொல்வது?

எந்திரனை மிஞ்சிய நண்பன் எனும் பதிவுக்கு தமிழ்வெளி மூலம் வந்த வாசகர்கள் என ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேலே காட்டியது. அதைவிட கூகுள் பக்கம் பார்வைகள் ஒரே நாளில் நான்காயிரம் அருகில் என காட்டியது. இதுவரை எந்த ஒரு பதிவுக்கும் இப்படி ஒரு நிலை வந்தது இல்லை. இத்தனைக்கும் எந்திரனை மிஞ்சிய நண்பன் எனும் பதிவு எனது கணக்கில் ஒரு கமர்சியல் பதிவு. அவ்வப்போது ஒரு கமர்சியல் பதிவு எழுதுவது வாடிக்கை.



இப்படி எந்த பதிவு எத்தனை பேரால் வாசிக்கப்பட்டது என்பது பெரிய விசயமாக பேசப்பட்டாலும் அதில் எத்தனை பேர் பயன் அடைந்தார்கள் என பார்த்தால் சைபர். சைபர் என்றால் இருவேறு அர்த்தங்களும் உண்டு. 

ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடித்து இருக்கிறது. பிடித்த விசயத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். தனக்கு அதாவது தனக்கு தவறென தெரிந்தால் எதிர்த்து பதிவு போடுகிறார்கள். இவர்களது கருத்து பரிமாற்றங்கள் தனிமனித தாக்குதல் வரை சென்று அச்சத்தை விளைவிக்கிறது. 

ஹிட்ஸ் குவிக்க நினைப்பவர்கள் எழுத வேண்டிய விசயங்கள் 

சினிமா சம்பந்தமான கிசுகிசுக்கள், பரபரப்பு செய்திகள். 

பாலியல் சம்பந்தமான போக்கிரித்தனமான பதிவுகள். 

பதிவர்கள் சம்பந்தமான உள்குத்து வெளிகுத்து கும்மாங்குத்து பதிவுகள். 

ஆனால் இதை எல்லாம் தாண்டி பல வாழ்வியல், அறிவியல் விசயங்களை மட்டுமே அற்புதமாக எழுதும் பதிவர்கள் இந்த பதிவுலகில் நிறையவே உண்டு. அவர்களை இனம் கண்டு கொள்வதில் எந்த சிரமமும் எவருக்கும் இல்லை. அவரவர் கையில் மவுசும், கீபோர்டும் உள்ளது. 

14 comments:

Astrologer sathishkumar Erode said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க..ஹிட்ஸ் அடிப்பது ஈஸி...நல்ல பதிவு எழுதுவதே கஷ்டம்!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சரியா சொன்னீர்கள் .

Yaathoramani.blogspot.com said...

ஓட்டுக் கேட்டுப் போனால
மக்களுக்கு நல்லதைச் சொல்லமுடியாது
அவர்களுக்கு பிடித்தாற்போல பேசவேண்டியிருக்கும்
என்பதற்காகவே
பெரியாரும் ராஜாஜியும் தேர்தலில் நிற்பதைத் தவிர்த்தார்கள்
பதிவுல்கிலும் ஓட்டுக்கெனவும்
கிட்சுக்கெனவும் பதிவெழுதத் துவங்கினால்
பதிவின் தரம் குறையத்தான் செய்யும்
அருமையான பதிவு.பகிர்வுக்கு நன்றி
த.ம 2

Radhakrishnan said...

நன்றி சதீஷ்குமார்.

நன்றி நண்பரே.

நன்றி ரமணி ஐயா. பதிவின் தரம் குறித்து எவர் தீர்மானிப்பது என்பது வேறுபடத்தானே செய்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

ஆனால் இதை எல்லாம் தாண்டி பல வாழ்வியல், அறிவியல் விசயங்களை மட்டுமே அற்புதமாக எழுதும் பதிவர்கள் இந்த பதிவுலகில் நிறையவே உண்டு. அவர்களை இனம் கண்டு கொள்வதில் எந்த சிரமமும் எவருக்கும் இல்லை. அவரவர் கையில் மவுசும், கீபோர்டும் உள்ளது.

ஆம்.. அருமையான பகிர்வு..

kannan said...

ஆனால் இதை எல்லாம் தாண்டி பல வாழ்வியல், அறிவியல் விசயங்களை மட்டுமே அற்புதமாக எழுதும் பதிவர்கள் இந்த பதிவுலகில் நிறையவே உண்டு......? அவர்களின் பத்வுகளை அடையாள படுத்துங்கள்........எல்லோருடைய விலாசமும் எல்லோருக்கும் தெரியாது அல்லவா...

Robin said...

//எல்லோருடைய விலாசமும் எல்லோருக்கும் தெரியாது அல்லவா..// உண்மை. நல்ல பதிவுகள் எழுதுபவர்கள் மற்ற பதிவுகளுக்கு சென்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்வது இல்லை. இதனால் இவர்களைப் பற்றி தெரியாமலே போய் விடுகிறது.

குழலி / Kuzhali said...

//நல்ல நேரம் சதீஷ்குமார் said...
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க..ஹிட்ஸ் அடிப்பது ஈஸி...நல்ல பதிவு எழுதுவதே கஷ்டம்!!!
26 January 2012 10:33//
சதீஷ் அண்ணே :-)))))) தமிழ்வெளியில் எப்பவும் செக்க ஹிட்ஸ் அடிக்கிறவராச்சே சதீஷ் அண்ணன், அவருக்கு தெரியாதா என்ன பதிவு வைக்கனும், என்ன தலைப்பு வைக்கனும்னு :-)

Radhakrishnan said...

மிக்க நன்றி சகோதரி.

மிக்க நன்றி கண்ணன். நல்ல பணிதான், செய்வோம்.

மிக்க நன்றி ராபின். பின்னூட்டம் எழுதுவதன் மூலம் சில தர்மசங்கடங்கள் இருப்பதாக சிலர் கருதக்கூடும்.

மிக்க நன்றி குழலி. தமிழ்வெளி திரட்டியானது தானியங்கியாக வெகு சிறப்பாகவே செயல்படுகிறது, மேலும் நல்ல நல்ல பதிவுகள் பரிந்துரையிலும் காணப்படுகிறது. இதுகுறித்து பதிவில் எழுதாமல் விட்டுவிட்டேன்.

ADMIN said...

நல்லதொரு கருத்தடங்கிய பதிவு.. பகிர்வுக்கு நன்றி..!!

Radhakrishnan said...

நன்றி தங்கம் பழனி

Shakthiprabha (Prabha Sridhar) said...

//ஹிட்ஸ் குவிக்க நினைப்பவர்கள் எழுத வேண்டிய விசயங்கள்


சினிமா சம்பந்தமான கிசுகிசுக்கள், பரபரப்பு செய்திகள்.


பாலியல் சம்பந்தமான போக்கிரித்தனமான பதிவுகள்.


பதிவர்கள் சம்பந்தமான உள்குத்து வெளிகுத்து கும்மாங்குத்து பதிவுகள்.


ஆனால் இதை எல்லாம் தாண்டி பல வாழ்வியல், அறிவியல் விசயங்களை மட்டுமே அற்புதமாக எழுதும் பதிவர்கள் இந்த பதிவுலகில் நிறையவே உண்டு. அவர்களை இனம் கண்டு கொள்வதில் எந்த சிரமமும் எவருக்கும் இல்லை. அவரவர் கையில் மவுசும், கீபோர்டும் உள்ளது.
//

மகுடம்.. உண்மை எப்பொழுதும் அழகு :)

Radhakrishnan said...

இதெல்லாம் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்து பழகி கொண்டவர்களுக்கே மிகவும் சாத்தியம் சகோதரி.

Amudhavan said...

குழு மனப்பான்மை இங்கேயும் மிக அதிகமாக உள்ளது. புதிய ஊடகம் ஏற்படும்போது பல புதுமைகளும் புரட்சிகளும் தாமாகவே ஏற்படும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் இங்கே வெறும் தொழில்நுட்பப்புரட்சியும் தொழில்நுட்ப புதுமைகளும்தாம் அரங்கேறியுள்ளனவே தவிர கருத்துப்புரட்சி சிந்தனைப் புரட்சி என்பதெல்லாம் சுத்தமாக இல்லையென்பதுதான் நிதர்சனம். குழு மனப்பான்மையும் ஓட்டுக்களால் முதலிடம் வகிப்பதும்தான் இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. பார்ப்போம் நிஜ மாறுதல்கள் வர இன்னமும் எத்தனைக் காலம் ஆகிறதென்று.