Monday 2 January 2012

என் பதிவு திருடு போச்சே!

உங்க பதிவு ஒன்னு திருடு போச்சு, கவனிச்சீங்களா?

எப்பவோ சொல்லிட்டேனே, என் பதிவுகளை தாராளமாக திருடுங்கள் அப்படினுட்டு, அது சரி இந்த திருட்டை எங்க போய் எப்படி கவனிக்கிறது?

இந்த பதிவு நீங்க எழுதினதா அல்லது நீங்க திருடி எழுதினதா? 

எந்த பதிவு?


ஆமாம், நான் எழுதினதுதான். 

எப்படி நம்புறது, இதை கருப்புரோஜாக்கள் ராஜேஷ், தான் எழுதினது போல அவரோட வலைப்பூவில் எழுதி வெளியிட்டு தேன்கூடு அப்படிங்கிற ஒரு திரட்டியில இணைச்சி இருக்காரு, யுடான்ஸ் ல இணைச்சி இருக்கார். 

நான் எழுதின தேதி நவம்பர் 3, 2011. அவர் வெளியிட்ட தேதி நவம்பர் 18, 2011. தலைப்பை கூட மாத்தாம அப்படியே வெளியிட்டு இருக்கார். அழகான ஒரு படம் போட்டு இருக்கார். அந்த படம் தான்  வித்தியாசம். 

உங்களுக்கு கோவம் வரலையா?
எதுக்கு கோவம் வரனும்? அவருக்கு பிடிச்ச பதிவுகளை சேகரிச்சிட்டு வரார். என்னமோ போங்க, அடுத்தவங்க எழுதினதை தன்னோடது போல காட்டுறது அவருக்கு ஒரு சந்தோசம். இதுமாதிரி ரொம்ப பேரு பிடிச்ச பதிவுகளை தங்களோட பதிவு போல காப்பி பண்ணி பேஸ்ட் பண்றது ரொம்பவே சகஜம் தானே. சினிமா செய்திகள், செய்திகள் அப்படின்னு விசயங்களை பிற தளங்களில் இருந்து பகிர்ந்து கொள்வது தவறில்லைதான், ஆனா ஒரு நன்றி அப்படின்னு போட்டுட்டா குறைஞ்சிறவா போறாங்க. இப்படித்தான் கிராம வளர்ச்சி அப்படின்னு ஒரு சிறுகதை எழுதி தட்ஸ்தமிழ் இணையத்துக்கு அனுப்பினேன், அவங்க அந்த கதையை வெளியிட்டாங்க. அட பரவாயில்லையே அப்படின்னு நினைச்சு தேடுனப்ப ரெண்டு மூணு இணையத்தில வெளியிட்டு இருந்தாங்க, என்னோட பெயரோட. பரவாயில்லையேன்னு நினைச்சிகிட்டேன். அந்த கதை இந்த வலைதளத்தில இல்லை, அதை வேகமா இணைச்சிருறேன். 

உங்களை மாதிரி இருக்கறவங்க இப்படி பதிவுகளை திருடி வெளியிடுறவங்களை  ஊக்குவிக்கிறீங்கதானே! அவங்களுக்கு பிடிச்சி இருந்தா ஒரு இணைப்பு தந்தா போதாதா, அல்லது நன்றி சொல்லி போட்டா ஆகாதா! அவருக்கு மின்னஞ்சல் அனுப்பலையா?

நிச்சயமா நான் அவங்களை ஆதரிக்கவில்லை. எனக்கு என்னமோ இப்படி எழுதி என்னத்தை பெரிசா சாதிச்சி பேரு வாங்க போறோம், பொழுது போக்கு, ஆத்ம திருப்தி அப்படி இப்படின்னு எதோ தமிழ் தெரியும் அப்படிங்கிறதுக்காக எழுதிட்டு வரோம், அப்படிங்கிற நினைப்பு மட்டும் தான். இஷ்டபட்டா அவங்க பதிவா போட்டுட்டு போகட்டும், என்ன பண்றது. தப்பு அப்படின்னு தெரிஞ்சே செய்றவங்களுக்கு என்ன தண்டனை தந்தா திருந்துவாங்க? சொல்லுங்க. எதுக்கு மின்னஞ்சல்? பிறர் பொருள் கள்வர்களுடன் என்ன பழக்கம் வேண்டி இருக்கிறது? 

உங்க வீட்டை என்னோட வீடு அப்படின்னு ஒருத்தர் சொன்னா, உங்க பொருளை என்னோட பொருள் அப்படின்னு மத்தவங்க சொன்னா சண்டைக்கு போக மாட்டீங்களா?. 

ஹூம், எது எதுக்கோ முடிச்சி போடறீங்க. நிச்சயம் சண்டைக்கு போகமாட்டேன், காவல் துறையில புகார் கொடுத்துட்டு என் வேலைய நான் பாத்துட்டு இருப்பேன். இப்போ நான் எழுதினதை எல்லாம் எடுத்து ஒரு புத்தகமா போட்டு அது மூலம் ஒருத்தர் லாபம் அடைஞ்சா எனக்கு எந்த வருத்தமும் வரப்போறதில்லை. என்னோட பெயர் இல்லாம போனாலும். 

பாரதியார், திருவள்ளுவர், கம்பர் இவங்க எல்லாம் புகழ், பெயர் வேணுமின்னு எழுதின மாதிரி எனக்கு தெரியலை. இந்த எழுத்து மூலம் நான் ஒருபோதும் புகழோ பெயரோ தேடிக்கிற போறதில்லை.  நினைச்சதை எழுதுவேன், புத்தகம் வெளியிடுவேன், அது குழந்தைகால கனவு. எல்லாருக்கும் தங்களோட கனவுகளை நனவாக்குற வாய்ப்பு கிடைக்கிறது இல்லை, அதனால புத்தகமா வெளியிட ஆசைப்படறவங்க எழுத்தை புத்தகமா வெளியிடற எண்ணம் எல்லாம் இருக்கு, காலம் கனியட்டும். 

நீங்க இனிமே எதைப்பத்தி எழுதப்போறீங்க? புது வருட புதிய கொள்கைகள்?

என்னது நீங்க திருந்திடீங்களா அப்படின்னு யாரும் என்னை கேட்ககூடாது. அப்படியேதான் இருக்கும் என் எழுத்து. மீண்டும் உறுதி அளிக்கிறேன், என் பதிவுகளை தாராளமாக திருடுங்கள், தயவு செய்து பிறர் பதிவுகளை திருடி எனது பெயர் பொறித்துவிடாதீர்கள், அது போதும். 

13 comments:

Yaathoramani.blogspot.com said...

எல்லோரும் காப்பி பேஸ்ட் செய்பவர்களை
அணுகுகிறவிதமும் நீங்கள் அணுகுகிறவிதமும்
வித்தியாசமானதாக முதிர்ச்சியுடன் கூடியதாக உள்ளது
நீங்கள் சொல்லிச் சென்றவிதமும் மிக மிக அருமை
நிச்சயம் இந்தப் பதிவைப் படிக்கிற காப்பி பேஸ்ட்
பதிவர்கள் மனம் வருந்துவார்கள்.திருந்துவார்கள்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

ப.கந்தசாமி said...

உங்கள் கொள்கைதான் என்னுடையதுவும்.வாழ்க, வளர்க. காப்பி, பேஸ்ட் பதிவர்கள். எப்படியோ நம் கருத்துக்கள் பலரை சென்றடைந்தால் நல்லதுதானே. அதுதானே நம் விருப்பமும்.

Unknown said...

////சொல்லுங்க. எதுக்கு மின்னஞ்சல்? பிறர் பொருள் கள்வர்களுடன் என்ன பழக்கம் வேண்டி இருக்கிறது? ////

ஹா..ஹா..ஹா.. உண்மைதான்... தீயாரோடு இனங்குதலும் தீதே!

மகேந்திரன் said...

என் தோளில் ஏறி
யார் வேணும்னாலும் பயணம் செய்யட்டும்..
அடுத்தவரின் தோளுக்கு என் கைகளை இணைத்துவிடாதீர்கள்...

உங்களின் கொள்கை சிறப்பானது நண்பரே.

Philosophy Prabhakaran said...

இனிமே நல்ல பதிவு எழுதாதீங்க... யாரும் திருட மாட்டாங்க...

சம்பத்குமார் said...

வணக்கம் நண்பரே

அந்த புண்ணியவான் எனது பதிவினையும் கூட திருடி புத்தாண்டு தினத்தில் தனது பதிவாக வெளியிட்டு நல்ல காமெடியுடன் புத்தாண்டை தொடங்கிவத்திருக்கிறார்

அவரை பற்றிய சிறு அறிமுகம் கொடுத்துள்ளேன்.நேரமிருக்கும் போது கண்டன பதிவை வாசிக்க அன்புடன் வேண்டுகிறேன்
காப்பி பேஸ்ட் மன்னன்

இதில் உச்சகட்ட காமெடி என்னவென்றால் கட்ந்த ஆகஸ்ட்டில் ஆரம்பித்த அவரது வலைப்பதிவு 430 பதிவுகளை தாண்டி நீண்டுகொண்டிருக்கிறது

சம்பத்குமார் said...

எனினும் தாங்கள் அவரை அணுகிய விதத்தினை மனமார பாராட்டுகிறேன்

நானும் இது போல் மாறிக்கொள்கின்றேன்

நன்றியுடன்
சம்பத்குமார்

Shakthiprabha (Prabha Sridhar) said...

வருத்தமா இருக்கு :(

குறைந்த பட்சம் "படித்ததில் பிடித்தது என்று நன்றி சுட்டியிட்டு" பிறகு வெளியிடலாம்.

:(

:(

Shakthiprabha (Prabha Sridhar) said...

இதையெல்லாம் தடுக்கும் மென்பொருட்கள் இல்லையா?

'copygator' என்றெல்லாம் இருக்கிறதே...அதுவெல்லாம் ஆங்கிலப் பதிவை மட்டுமே தடுக்க கண்காணிக்க வல்லதா?

இராஜராஜேஸ்வரி said...

இனிமையான மன நிலைக்கு பாராட்டுக்கள்..

Radhakrishnan said...

மிக்க நன்றி ரமணி ஐயா. அவர்கள் நிச்சயம் மாற வேண்டும் என்பதே எனது அவா.

மிக்க நன்றி ஐயா, நல்ல கொள்கை.

மிக்க நன்றி தமிழ் விரும்பி ஐயா.

மிக்க நன்றி மகேந்திரன்.

மிக்க நன்றி பிரபாகரன், பதிவே எழுதாமல் இருந்தால் கூட திருட மாட்டார்கள் :)

மிக்க நன்றி சம்பத்குமார், உங்கள் பதிவின் மூலமே இந்த விசயங்கள் மேலும் அறிந்தேன்.

மிக்க நன்றி சகோதரி, என்ன செய்வது சகோதரி, காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது, இப்போது தொழில்நுட்பம் மூலம் வித்தியாசமாக நடக்கிறது, நீங்கள் குறிப்பிட்டது போல மென்பொருட்கள் உள்ளதா என தெரியவில்லை, தேடிப்பார்த்து விடலாம். ஆனால் வெட்டி ஒட்டுதல் தடுக்க வழி உண்டு.

நன்றி ராஜேஸ்வரி சகோதரி.

சசிகலா said...

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு இல்லையா ?

, உங்க பொருளை என்னோட பொருள் அப்படின்னு மத்தவங்க சொன்னா சண்டைக்கு போக மாட்டீங்களா?.
சண்டைக்கு போய் வம்புல மாட்டிகிட்டதுல நானும் ஒருத்தி .....
பகிர்வுக்கு நன்றி .

Radhakrishnan said...

நன்றி சசிகலா. உண்மைதான், இருப்பினும் வீண் சண்டைகள், வீண் விவாதங்கள் தேவையில்லாத ஒன்றுதான்.