Wednesday 5 October 2011

தடைகற்கள்

பாதையில் பல கற்கள்
போதையில் விழுந்தவனை போல
தடுமாறி கிடக்கின்றன
தள்ளி வைப்பார் எவருமில்லை

கற்களால் குத்துபட்டோ வெட்டுபட்டோ
கடந்து சென்றவர்கள் மிச்சம்
கற்களை கடத்தி வைத்தவர்கள்
கொஞ்சம் கூட மிச்சமில்லை

தடைகற்கள்தனை பிறர் தாண்டிய விதம்
தாண்டுவோரை மலைக்க வைப்பதில்லை
வெட்டுபட்டும் குத்துபட்டும்
கடந்து கொண்டே இருக்கிறார்கள்

தடைகற்கள் அகற்றுவதாய்
சாமியும், சாமி துதிபாடும் பூசாரியும்
தலைவரும், தலைவர் துதிபாடும் தொண்டரும்
மனிதர்களில் குறைச்சல் இல்லை

தடைகற்கள்தனை பொடிப்பொடியாய்
உடைத்துப் போட்டாலும்
தடைகற்கள் தடைகற்களாய்
உடை உடுத்தி கொள்தல் அபாயமோ!

4 comments:

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
நன்றி.

Radhakrishnan said...

நன்றி ஐயா.

G.M Balasubramaniam said...

தடைக்கற்களை தாண்டுவதும் ஒரு அனுபவமே. அனுபவங்கள் வாழ்வுக்கு மெருகூட்டும். அவற்றை அகற்ற சாமி பூசாரி தலைவன் தொண்டன் என்று அணுகுபவர் வீழ்ந்து விடுவதே பெரும்பாலும் நிகழும்.

Radhakrishnan said...

வணக்கம் ஐயா. மிக்க நன்றி.