Saturday 29 May 2010

விளக்குதனில் ஏற்றுங்கள் ஒளி


சனீஷ்வர பகவானுக்கு 
எள் விளக்காய் நான்
எள்ளோடு
என்னில் எண்ணை நிரப்புங்கள்

கார்த்திகை மாதம்
கார்த்திகை தீபமாய்
கவனமாய் என்னை
வீடெல்லாம் நிரப்புங்கள்

என்னை செய்தவருக்கு
வயிறு நிறைந்திட வழி  சொல்லுங்கள்
இன்னும் விற்கபடாமல் இருக்கிறேன்
என்னை வாங்கிச் செல்லுங்கள்!

6 comments:

தமிழ் உதயம் said...

உண்மையான கவிதை. நாம் பல நேரங்களில், தேவைப் படாவிட்டாலும் - பிறருக்கு உபகாரமாய் இருக்கட்டுமே, இருக்குமே என்பதற்காக சில பொருட்களை வாங்குகிறோம்.

vasu balaji said...

நல்லாருக்கு. விளக்குக்கு ஒளியில்லை:)

அ.முத்து பிரகாஷ் said...

மனம் கனக்கிறது தோழர் ராதா !

cheena (சீனா) said...

அன்பின் வெ.இரா

ஆதங்கம் நிறைந்த அருமையான கவிதை. ஆனால் இன்றும் பல கோவில்களில் நெய் தீபங்கள் மண் சிட்டிகளில் ஏற்றத்தான் செய்கின்றனர். இருப்பினும் செய்பவனுக்கு ஆதாயம் இல்லை என்பதுதான் உண்மை நிலை. ம்ம்ம்ம்

படமும் அருமை. ஒளி ஏற்றா சிட்டிகள் - வாழ்வினில் ஒளி இல்லாத் தொழிலாளி. அருமை அருமை

நல்வாழ்த்துகள் வெ.இரா
நட்புடன் சீனா

சுந்தரா said...

கவிதையும் அதற்கேற்ற படமும் மிகமிக அருமை ரங்கன்.

Radhakrishnan said...

மிக்க நன்றி தமிழ் உதயம் ஐயா, மிக்க நன்றி வானம்பாடிகள் ஐயா, மிக்க நன்றி தோழர் நியோ, மிக்க நன்றி சீனா ஐயா, மிகச் சரி. நன்றி சகோதரி. 2006ல் நமது மன்றத்தில் எழுதிய கவிதை சகோதரி.