Wednesday 15 September 2010

கருணாஸ் நடித்ததால் எந்திரன் படம் தோல்வி?

பல விசயங்கள் புரிந்து கொள்ள முடியாத வாழ்க்கையில் மனிதர்களின் நம்பிக்கைகள் புரிய முடியாத விசயங்களுக்கு பதிலாக அமைந்து விடுவது காலம் காலமாக நடந்து கொண்டு வருவதுதான். இந்த மனிதர்களின் நம்பிக்கைகள் எல்லாம் மிகவும் சரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவரின் அனுபவத்தின், நம்பிக்கையின் காரணமாக விசயத்தின் முழு உண்மையை எவரும் ஆராய முற்படுவதில்லை. இதன் காரணமாக இது நடந்தது என மிகவும் சர்வ சாதாரணமாக சொல்லிவிடுவது வழக்கம்.

அதீத திறமையுடைவர்களை  கூட அதிர்ஷ்டத்தினாலும், கடவுள் கிருபையினாலும் மட்டுமே வெற்றி பெற்றார்கள் எனும் எண்ணும் வழக்கம் இருக்கிறது. இதற்கு வாழ்வில் நடக்கும் காரண காரியங்கள் ஆதாரம்.

'இது என்னால் மட்டுமே சாத்தியமில்லை' எனும் எண்ணம் உடையவரை மற்ற காரணிகளுக்கு மதிப்பு தந்து தன்னடக்கத்துடன் இருப்பதாகத்தான் எடுத்து கொள்ளவேண்டும்.

சகுனம் பார்க்கும் சங்கடம் நம்மில் அதிகம் உண்டு. ராசி பார்க்கும் பாசம் நம்மிடம் மிக மிக அதிகம் உண்டு. இதன் காரணமாகவே பலர் தன்னம்பிக்கையை தொலைத்து விடுகிறார்கள்.

அறிமுகமே இல்லாத ஒருவர் 'பாபா படத்தில் தலைவருடன் சேர்ந்து கருணாஸ் நடித்ததால்தான் பாபா படம் தோல்வி அடைந்தது, அதே நிலைமை எந்திரன் படத்துக்கு வந்து விடுமோ என அச்சப்படுகிறேன்' என்றார்.

'எந்த ஒரு படமும் மக்கள் பார்க்க மறுத்தால்தான் வியாபார ரீதியாக தோல்வி அடையும், எனவே இது போன்ற குருட்டுத்தனமான எண்ணங்களை கைவிடுங்கள்' என சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தேன்.

ஏன் மனிதர்கள் மட்டும் இப்படி இருக்கிறார்கள்?

9 comments:

ramalingam said...

பத்த வெச்சிட்டியே பரட்டை.

தமிழ் உதயம் said...

ramalingam said...

பத்த வெச்சிட்டியே பரட்டை.///

repeat sir

Chitra said...

அறிமுகமே இல்லாத ஒருவர் 'பாபா படத்தில் தலைவருடன் சேர்ந்து கருணாஸ் நடித்ததால்தான் பாபா படம் தோல்வி அடைந்தது, அதே நிலைமை எந்திரன் படத்துக்கு வந்து விடுமோ என அச்சப்படுகிறேன்' என்றார்.


.....இப்படியுமா ஒரு எண்ணம்!!!

Unknown said...

இந்த மூடநம்பிக்கை பலித்தால் மிகவும் மகிழ்வேன்.

settaikkaran said...

மனீஷா கோய்ராலா எந்திரன் படத்தில் நடிக்கவில்லை என்பதால் வெற்றி பெறும் என்று என்னிடமும் ஒரு மூடநம்பிக்கைக்க்காரர் சொன்னார். இது எப்படி இருக்கு? :-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஒரு வேளை ரஜினி எந்திரனில் நடித்ததால படம் ஊத்திக்குமோ...
இல்ல ஐஸ்வர்யா ராய் நடிச்சதினால படத்துக்கு சங்கா..(ராவணன் கூட ப்ளாபுதானே..)
அப்ப்டியில்லனா ஷங்கர் இயக்குனதினால படம் படுதுக்குமோ..(பாய்ஸ் படுத்துகிச்சே)

இதில எது நடந்தாலும் நமக்கு கவலையில்ல... படம் வந்தா பாத்திருவோம்..எப்படியாவது மூணு மணி நேரம் பொழுது போனா சரி தான்..

Muruganandan M.K. said...

இத்தகைய மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடாமல்தானே எமது சமூகம் சறுக்கி வீழ்ந்து கொண்டேயிருக்கிறது

Gayathri said...

eppadiyum namakku endhiran odinaalum odaavittalum endha ubhayogamum illa apram yen indha tension??

Radhakrishnan said...

அனைவருக்கும் நன்றி. ;) காயத்ரி.