Tuesday 21 January 2014

பதிப்பகங்களும் புத்தகங்களும்

இன்றைய காலகட்டத்தில் எழுதுவது என்பது எல்லோராலும் பொதுவெளியில் எழுதும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. கணினி மற்றும் தமிழ் அச்சு தெரிந்து இருந்தால் போதும், உள்ளக்கிடக்கை எல்லாம் ஊருக்கு வெளிச்சம் போட்டு காண்பித்து விடலாம்.

எனக்கு ஓரளவிற்கு தமிழில் மீது எப்போதும் ஆர்வம் உண்டு. சிறுவயதில் இருந்தே தமிழ் படிப்பதில் அலாதி பிரியம் இருந்தது. எழுத்தாளர்கள் புத்தகங்கள் அவ்வளவாக படிக்கவில்லையெனினும் தினமலர், வாரமலர், குடும்பமலர், குமுதம், ஆனந்தவிகடன், தமிழ் கோனார் உரை, திரைப்பட பாடல்கள், அசோகமித்திரனின் கதைகள்  என தமிழ் படித்தது உண்டு. கடை எனும் ஒரு நாவல் படித்த நினைவு இருக்கிறது. நான் கல்கத்தாவில் படித்தபோது நண்பர்கள் அங்கிருக்கும் தமிழ் சங்கத்தில் இருந்து நிறைய தமிழ் புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பார்கள். அதேபோல அங்கே உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இருந்து நிறைய ஆங்கில புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பார்கள் . நான் அதிகம் படித்தது கவியரசு கண்ணதாசனின் புத்தகங்கள் என சொல்லலாம் மற்றபடி பாடபுத்தகங்கள் மட்டுமே. இதனால் நான் நாவல் எழுத தொடங்கியபோது பாட புத்தகங்களில் உள்ள கருத்துகளை கையாண்டேன்.

பொன்னியின் செல்வன், யவன ராணி, கடல் புறா, மோகமுள்  என பெயர்கள் மட்டுமே எனக்கு நினைவில் இருக்கிறது. இந்த கதைகளை எல்லாம் நான் படித்தது இல்லை. சாண்டில்யன், தி.ஜானகிராமன், கல்கி என பல பெயர்கள் அவர்கள் மூலம் எனக்கு பரிச்சயம். என்னை மிகவும் பாதித்த மலையாள மொழி பெயர்ப்பு கதை உண்டு, இன்னமும் கதை கரு மனதில் நிழலாடுகிறது, ஆனால் தலைப்பு மறந்து போய்விட்டது.

இந்த இணையம் இல்லாது இருந்து இருந்தால் நான் நாவல், கதை எல்லாம் எழுதி இருப்பேனா என்பது கேள்விக்குறிதான். முத்தமிழ்மன்றம் போட்ட விதை நுனிப்புல் இரண்டு பாகங்களும். இப்படியே கவிதைகள், சிறுகதைகள் என முத்தமிழ்மன்றம் தந்த உற்சாகம் மடமடவென எழுத வைத்தது. இன்று எத்தனையோ கதைகள் எழுதியாகிவிட்டது. ஆனால் வெளியிட்டது மூன்றே நூல்கள்.

நாவல் வெளியிட நான் தொடர்பு கொண்ட பதிப்பகங்கள் எல்லாம் கைகளை விரித்தன. அதனால் முத்தமிழ்மன்ற பதிப்பகம் என சொந்த செலவில் புத்தகம் வெளியிட்டேன். அதற்கடுத்து வெளிவந்த கவிதை தொகுப்பு, கதை தொகுப்பு எல்லாம் சொந்த செலவுதான். பதிப்பாளர்களுக்கு ஒரு செலவும் இல்லை. ஆனால் இதுவரை சம்பந்தபட்ட பதிப்பாளார்கள் புத்தகங்கள் குறித்து ஒரு விஷயமும் தெரிவிக்கவில்லை. நானும் கேட்டுக்கொள்ளவில்லை. புத்தகம் அச்சிட்டு தந்தார்களே அதுவே எனக்கு பெருமிதமாக இருக்கிறது. அவர்களிடம் புத்தகங்களை இலவசமாக கொடுத்துவிடுங்கள், எவரேனும் என்ன விலைக்கு கேட்கிறார்களோ கொடுத்துவிடுங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது, ஒரே அறையை அலங்கரிக்கும் அந்த புத்தகங்கள் ஊரில் உள்ள ஒவ்வொரு அறையை அலங்கரிக்கட்டுமே. எழுதுவது எனது தொழில் அல்ல, இதன் மூலம் நான் சம்பாதிக்க இருப்பது என்று எதுவும் இல்லை. புத்தகத்திற்காக சிறு பணம் ஒதுக்கி அதை வெளியிடுவதுடன் எனது பணி முடிவடைகிறது.

இப்படி நான் எழுதி சொந்த காசு செலவு பண்ணியும் புத்தகம் வெளியிட பதிப்பகங்கள் கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது. ஒரு சிறந்த பதிப்பகம் கிடைக்க வேண்டுமெனில் கதை சிறப்பாக இருக்க வேண்டும், அதுவும் மக்கள் அறிமுக எழுத்தாளராக இருக்க வேண்டும் என்பது காலக்கொடுமை.

நுனிப்புல் பாகம் 2 வெளியிட வேண்டும். நண்பர் சொக்கன் இதை தனி நூலாகவே கொண்டு வரலாம் என்றார். தலைப்பு கூட நெகாதம் என்றே வைக்கலாம் என யோசிக்கிறேன். எவரேனும் இந்த நூலை, தனி  நூலாகாவோ (நெகாதம் தலைப்புடன்) , தொடர் நூலாகவோ (நுனிப்புல் தலைப்புடன்)  பதிப்பகம் ஒன்று அச்சிட்டு வெளியிட முன்வருமாயின் தொடர்பு கொள்ளுங்கள் என்பதை தவிர வேறு என்ன கேட்டுவிட முடியும். 

14 comments:

வவ்வால் said...

ரா.கி,

பாவம் சார் நீங்க,தமிழை காப்பாத்த கைக்காச எல்லாம் செலவு பண்ணிட்டு இருக்கீங்க அவ்வ்!


இப்படிலாம் ஆட்கள் இருப்பாங்கனு தெரிஞ்சிருந்தா,நானே ஒரு பதிப்பகம் ஆரம்பிச்சிருப்பேன் ,வடை போச்சே அவ்வ்!

ஐடியா கொடுக்க ,காசா பணமா, கொடுப்போம், மணிமேகலைப்பிரசூரம் மலிவாக புத்தகம் போட்டு தருதாம், சுமார் 10,000 கொடுத்தா,100 பக்கங்கள் உள்ள நூல் 1000 பிரதி அடிச்சு ,அதில் 700 பிரதி அவங்களுக்கு ,300 நமக்கு,விருப்பப்பட்டா விக்கலாம்,இல்லைனா பார்க்கிறவங்களுக்குஃப்ரியா கொடுக்கலாம்.

நோ ராயல்டி. நாம கொடுத்த காசுக்கு 300 பிரதி அவ்ளோதான்.

புத்தகம் போட்டே ஆகணும் என நினைப்பவர்கள் அதிகம் செலவில்லாமல் இவ்வழியை பின்ப்பற்றலாம்.

Radhakrishnan said...

ஹா ஹா, தமிழை காப்பாத்தாவா? பின்வரும் சந்ததிகள் எவரேனும் என் புத்தகம் வாசிக்கும் போது இப்படியுமா இருந்தார்கள் என நினைக்கனும் ;)

மணிமேகலை முதல் நாவலுக்கு எழுபது ஆயிரம் கேட்டு தலைப்பு மாற்றலாம் என சொன்னார்கள். என் அதிகபிரசங்கிதனத்தினால் வேண்டாம் என சொல்லிவிட்டு அதற்கு கூடுதலாகவே செலவு செய்தேன். நண்பர் ஒருவர் பாதி செலவு அவருடையது என்றார், நான் வேண்டவே வேண்டாம் என சொல்லி முத்தமிழ் மன்ற பெயர் வெளித்தெரிய செய்தேன்.

மணிமேகலை பிரசுரம் மீண்டும் போகலாமா என தெரியவில்லை. மொத்தம் நூற்றி இருபது பக்கங்கள் தான் இந்த நாவல். முதல் நாவல் முன்னூற்றி நாற்பத்து எட்டு பக்கங்கள். நிறைய நறுக்கி இருந்து இருக்கலாம் என தோன்றியது.

புத்தகம் போட்டே ஆகனும் என்பது நிலை தான், ஆனால் அதை கொஞ்சம் முறையாக செய்யலாம் என்றே நினைத்தேன். மணிமேகலை கேட்டுப் பார்க்கலாம், எப்படியும் முப்பது நாற்பது கேட்பார்கள். ஏனெனில் நான் வெளிநாட்டுவாசி ;)

மிக்க நன்றி நண்பரே.

திண்டுக்கல் தனபாலன் said...

முதலில் உங்களின் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்...

உங்களின் நிலைமை புரிகிறது... இதை ஒட்டிய ஒரு பகிர்வை எழுதிக் கொண்டுள்ளேன்... நாளை பகிர்கிறேன்... நேரம் கிடைப்பின் வாசிக்கவும்... உங்களுக்கும் உதவலாம்...

நன்றி...

Radhakrishnan said...

நிச்சயம் இணைப்பை தாருங்கள், வாசிக்கிறேன். மிக்க நன்றி.

Unknown said...

வர்ற புத்தகம் எல்லாம் இப்படித்தான் வருகிறதா ?எழுதி சம்பாதிப்பது இங்கே கனாதானா ?நண்பர் தனபாலனின் அனுபவத்தைக் காண ஆவல் !

Radhakrishnan said...

எழுத்தாளர்களுக்கு அப்படியில்லை, எழுத்து நிறைய பேருக்கு சோறு போடுவதோடு பேரும் புகழும் தருகிறது

திண்டுக்கல் தனபாலன் said...

மின் நூல் பற்றிய தகவல் - உங்களுக்கு உதவலாம் :- http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

வவ்வால் said...

ரா.கி,

மணிமேகலையின் கணக்கு சரிதான் போல,சுமார் 100 பக்கத்துக்கு(சரியா சொன்னால் 112பக்கம்,ஒவ்வொரு கூடுதல் 16 பக்கத்தும் தலா 600 ரூ) 10,000ரூ,எனவே 346 பக்கத்துக்கு 35,000 ரு ,அயல்நாட்டுவாசி என்பதால் இரு மடங்கு70,000ரூ :-))

ஆனாலும் தகிரியம் கூடத்தான் முதல் படைப்பையே கல்கி,சாண்டில்யன் ரேஞ்சில 350 பக்கத்தில முயற்சி செய்துள்ளீர்கள் :-))

இப்போ 120 பக்கம் தானே எப்படியும் 20-25ஆயிரத்துல (அயல்நாட்டுக்கு) முடிஞ்சிரும். பேசிப்பாருங்க. மத்த இடத்துல எல்லாம் கூடுதல் காசக்கொடுக்க வேண்டாம்.

# ஏற்கனவே புத்தகம் போட்ட யாரும் வெளியிடுவது எப்படினு பேசுவதேயில்லை, புத்தகமே போடாத நாமதான் ஒருப்பதிவ போடலாமானு பார்க்கிறேன் அவ்வ்!

Radhakrishnan said...

நன்றி :)))

Radhakrishnan said...

உபயோகமே

Radhakrishnan said...

எழுதுங்க வவ்வால் சார். :)

bharathiraja said...

என் கைவசம் ஒரு கதை உள்ளது. அதனை நாவலாக வெளியிட விருப்பம். மணிமேகலை பிரசுரம் உதவுமா என்பது தெரியவில்லை. ஆனால் முயற்சிக்கலாம் என தோன்றுகிறது.

Unknown said...

பதிப்பகங்களுக்கு கைப்பட எழுதி தருவீர்களா இல்லை கம்ப்யூட்டரில் டைப் செய்து தருவீர்களா?