Thursday 29 April 2010

எழுதுவதை நிறுத்திப் போராட்டம்

அன்பு நிறைந்த தமிழ் எழுத்தாளர்களே, பாசம் மிக்க தமிழ் பதிவர்களே, மன்னிக்கவும் பதிவர் எழுத்தாளர்களே, உங்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒரு புதிய அமைப்பு ஒன்றை தொடங்கி இருக்கிறேன். அந்த அமைப்பின் பெயர் என்னவெனில் ' தமிழ் தொண்டு அமைப்பு ' ஆகும்.

இந்த தமிழ் தொண்டு அமைப்பிற்கு நான் தலைவர். இந்த 'தமிழ் தொண்டு அமைப்பு' தனில் உறுப்பினராக சேருபவர்கள் விண்ணப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன், இல்லை இல்லை,  கட்டாயப்படுத்துகிறேன்.  மேலும் எவர் எவர் துணைத் தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், துணை பொருளாளர், கணக்காளர், என பல பதிவுகளுக்கு, மன்னிக்கவும், பதவிகளுக்கு தங்கள் பெயரை தாங்களே பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் பெயரை எவரேனும் பரிந்துரை செய்யவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் என்னவெனில் நமது கோரிக்கைகளை நாமே முனைந்து செயல்பட்டு நிறைவேற்றும் வரை தமிழில் எழுதாமல் இருப்பது ஆகும். இந்த அமைப்பில் இணைபவர்கள், அதாவது சேர்ந்துவிட்டீர்கள்,  இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த முக்கிய நோக்கத்தை எவரேனும் மறந்து செயல்பட்டால் அவர்களை கடுமையாக இந்த அமைப்பு தண்டிக்கும் என்பதை கடுமையாகவே சொல்லிக் கொள்கிறேன். மேலும் இந்த அமைப்பில் நீங்கள் இணையாவிட்டால் உங்களை எழுத்தாளர்கள் என்றோ, பதிவர்கள் என்றோ ஒருபோதும் நீங்களோ எவரோ அழைத்துக் கொள்ளக்கூடாது. இதற்கு முழுமையாக தடை விதிக்கப்படும். அதையும் மீறி நீங்கள் எழுதினால் உங்கள் கணினிகள், கைகள் உடைக்கப்படும் என்பதை சற்று சீற்றத்துடன் சொல்லிக்கொள்கிறேன்.

வருகிற மே மாதம் முதல் தினமான சனிக்கிழமை அன்று நமது போராட்டம் தொடங்குகிறது என்பதை அறிவுறுத்துகிறேன். நீங்கள் அனைவரும் இந்த அமைப்பில் உறுப்பினர்கள் ஆகிவிட்டீர்கள் எனும் உணர்வு இப்போதே உங்களுக்கு வர வேண்டும். தமிழில் எழுதுவதை நிறுத்த நீங்கள் இப்போதே உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். மொழி பெயர்ப்பாளர்கள் என்று கூறிக்கொண்டு ஏதேனும் தமிழில் எழுதினால் கூட தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். உலகம் முழுவதும் உள்ள இந்த தமிழ்  எழுத்தாளர்கள், பதிவர் எழுத்தாளர்கள் இந்த அமைப்பின் கொள்கைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என கடுமையாகவே எச்சரிக்கப்படுகிறார்கள்.

இந்த அமைப்பின் கோரிக்கைகள் என்னவெனில்

௧. உலகம் முழுவதும் அனைவரும் தமிழ் அறிந்திருக்க வேண்டும். எழுத படிக்க கட்டாயம் தெரிய வேண்டும்.

 ௨. அனைவரும் தமிழ் எண்களை உபயோகித்து பழக வேண்டும், இனிமேல் வேறு எண்களை மறந்தும் உபயோகிக்கக் கூடாது.

௩. ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி, ஸ்பானிஷ் இது போன்ற மொழிகள் யாவும்  தமிழ் மொழிக்கு அடிமை என அந்தந்த மொழிகள் தங்களை தாங்களே அறிவித்துக் கொள்ள வேண்டும். மேலும் தமிழ் மொழி புழக்கத்தால் அனைத்து பிற மொழிகள் அழிந்து போய்விட வேண்டும்.

௪. மிகவும் முக்கியமாக அனைவரும் தங்களது பெயர்களை தமிழில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு முன் மாதிரியாக என் பெயரை நான் மாற்றி அமைத்துக் கொண்டுவிட்டேன்.

௫. தமிழ் வார்த்தைகள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பிற மொழி வார்த்தைகள் பேசக் கூடாது.

௫. உலகில் உள்ள அனைவரும் தமிழர்கள் எனும் எண்ணம் அனைவரின் மனதில் வேரூன்ற வேண்டும்

இப்படிப்பட்ட பல கோரிக்கைகளை, மற்ற கோரிக்கைகள் பின்னர் வெளியிடப்படும்,  நிறைவேற்றும் வரை அனைவரும் இனிமேல் தமிழில் எழுதாமல் இருக்க வேண்டும் என ஆணையிடுகிறேன். தமிழில்தானே எழுதாமல் இருக்கலாம், ஆங்கிலத்திலோ பிற மொழியிலோ எழுதுவேன் என எவரேனும் கள்ளத்தனமாக முயன்றால் அதைப் பார்த்துக் கொண்டு இந்த அமைப்பு புளியங்காய் பறித்துக் கொண்டிருக்காது என்பதை அவசியத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதை எதை எழுத வேண்டுமோ அதை அதை இந்த இரண்டு நாட்களுக்குள் முடித்துக் கொள்ளுங்கள். மே மாதம் முதல் தேதி இனிமேல் எழுத்தாளர்கள் தினமாக கொண்டாடப்படும். இப்படிப்பட்ட காலவரையற்ற எழுதுவதை நிறுத்தி நடத்தப்படும்  போராட்டம் மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டுமென வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

-------------------------------------------------------------------------------------------------------------
ராசு : ஏன்டா, நம்ம அண்ணனுக்கு மொக்கைன்னா என்னான்னு தெரியாதுன்னு சொல்லிட்டு இருந்தாரு.

வாசு : தெளிவாப் பேசிட்டு போயிருக்காரு, மொக்கை, சக்கைன்னுட்டு . வாடா நாம களத்தில இறங்குவோம்

ராசு : ?????

-------------------------------------------------------------------------------------------------------------

                                              தமிழ் தொண்டு அமைப்பு

நிறுவனர் மற்றும் தலைவர் :  ராதாகிருட்டிணன்
துணைத் தலைவர் : தாமோதர் சந்துரு
செயலாளர் : ஷங்கர்
துணை செயலாளர் : சுந்தரா
பொருளாளர் : சித்ரா
துணைப் பொருளாளர்: ஹேமா
பொறுப்பாளர்கள் : கதிர் (தமிழ் மொழி மட்டும்) ஜெஸ்வந்தி (பிற மொழிகள்) சங்கவி (கலைகள் மற்றும் கலாச்சாரம்) பா.ராஜாராம் (எழுத்தாளர்கள் நலம் பேணுதல்)
எழுத்தாளர்களின் தொடர்பாளர்: ரமேஷ் (தமிழ் உதயம்)
ஒருங்கிணைப்பாளர் : தீபா (கபீஷ்)
செய்தித் தொடர்பாளர்: தர்ஷினி (தோழி)
பட்டய கணக்காளர்:                                          
வழக்கு அறிஞர் :        
வங்கித் தொடர்பாளர் :                        
வங்கி : ஸ்டேட்ஸ் பேங்க் ஆப் இந்தியா
பதிப்பகம் : நயினார் பதிப்பகம் (அனுமதி பெற வேண்டும்)

---------------------------------------------------------------------------------------------------

22 comments:

Chitra said...

மொக்கை பதிவை, சும்மா போட்டுட்டீங்க. சும்மா நான் வந்து, சும்மா அந்த சங்கத்தில் சேர்ந்தால், எந்த பதவியை, சும்மா கொடுப்பீங்க? பொருளாளர் பதவி, சும்மா எனக்குதான்.....

Radhakrishnan said...

நீங்க இந்த அமைப்பில் எப்பவோ உறுப்பினராகிட்டீங்க. பொருளாளர் பதவி உங்களுக்குத்தான். நீங்களே உங்கள் பெயரை பரிந்துரை செய்தமைக்கு மிக்க நன்றி. இது ஒரு போதும் இல்லை சும்மா. தமிழ் தொண்டு அமைப்பு விரைந்து செயலாற்றும்.

Unknown said...

இந்த அமைப்பில் ஜனாதிபதி பதவி இருக்குதுங்களா?
அப்படி இருந்தா அது நம்மளுக்குத்தானுங்கோ. மறந்தறாதீங்க பிரதர்.

Unknown said...

மீறி எழுதினா கணிணிய ஒடப்பேன் கைய ஒடைப்பேன்னு பயமா இருக்குதுங்கண்ணா

ஈரோடு கதிர் said...

"தமிழ் தொண்டு அமைப்பு"

தமிழ்த் தொண்டு... த் வருமா? வராதா?

Paleo God said...

சுறா பார்த்துட்டீங்களா?? :)

சுந்தரா said...

கடவுளே,தமிழுக்கு இப்பிடி ஒரு சோதனையா?!!

Radhakrishnan said...

ஹா ஹா! ஜனாதிபதி பதவியெல்லாம் இல்லை, நீங்கதான் துணைத்தலைவர். நாம பயப்பட்டா எப்படி, மத்தவங்கதான் நம்மளைப் பார்த்துப் பயப்படனும் தாமோதர் சந்துரு அவர்களே.

தமிழ்த் தொண்டு அமைப்பு தான் சரி. ஆனால் அதிகப்படியாக மெய்யெழுத்துகள் சேர்த்துக் கொள்ளக்கூடாது என ஒரு திட்டம் கொண்டு வரப்படும். நீங்கதான் தமிழ் எழுத்துகள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என கவனித்துக் கொள்ளப் போகிறீர்கள். நன்றி கதிர்.

இப்படியெல்லாமா ஒரு அமைப்பின் தலைவரை கேள்வி கேட்பது. இந்த அமைப்பின் நோக்கம் சுறா படத்துக்கான விமர்சனங்களை தடுப்பது என நீங்கள் நினைத்தால் அது தவறு. ஏனெனில் இனிமேல் எந்த படமும் வெளியாகாது, காரணம் எவரும் தமிழில் எழுதமாட்டார்கள், பின்னர் எப்படி கதை திரைக்கதை எல்லாம் எழுதுவது. பல கோணங்களில் சிந்திக்கும் நீங்கள் இந்த அமைப்பின் செயலாளர். நன்றி ஷங்கர்.

Radhakrishnan said...

தமிழுக்கு சோதனை அல்ல சகோதரி, பிற மொழிக்காரர்களுக்கு வந்த சோதனை இது. கடவுள் இனிமேல் தமிழ் மொழி மட்டுமே அறிந்தவராக இருப்பார். நீங்கள் தான் இந்த அமைப்பின் துணை செயலாளர். நன்றி சகோதரி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

What happened? We got enough time untill 1st of May.

Radhakrishnan said...

இப்படி ஆங்கிலத்தில் மேலும் எழுதினால் உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடைசி நேரத்தில் சொன்னால், அவசரப்பட வேண்டி இருக்கும் என்பதால் இரண்டு தினங்கள் முன்னரே அறிவிப்பு வெளியாகிவிட்டது. எவரும் ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் எழுதாத வண்ணம் பார்த்துக்கொள்வது தங்கள் பொறுப்பாகிறது. எனவே பொறுப்பாளர் பதவி தங்களுக்கு அளிக்கப்படுகிறது. நன்றி சகோதரி.

ஹேமா said...

என்னமோ ஏதோன்னு வந்தா....!

Radhakrishnan said...

கவலையே படாதீர்கள் ஹேமா. இந்த போராட்டம் நிச்சயம் நடந்தே தீரும். மே 1ம் தேதி முதல் இந்திய நேரப்படி 5.01 அதிகாலையிலிருந்து எவரும் எழுதக் கூடாது. அப்படி மீறி எழுதினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தங்களுக்கு துணைப் பொருளாளர் பதவி தரப்படுகிறது. நன்றி ஹேமா.

தமிழ் உதயம் said...

என்னமோ ஏதோன்னு வந்தா....!

Radhakrishnan said...

அட, கவலைப்படாதீர்கள் ஐயா, போராட்டத்தை வெகு சிறப்பாக நடத்தலாம். தங்களுக்கு வெகுவிரைவில் புதிய பதவி வழங்கப்படும். ஐந்தே பதிவுகள் மன்னிக்கவும், பதவிகள் இன்னமும் மீதம் இருக்கின்றன. நன்றி ஐயா.

கபீஷ் said...

எனக்கு கோ-ஆர்டினேட்டர் பதவி பார்சேல் :-)

Radhakrishnan said...

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது கபீஷ். தங்களின் பிறந்ததினத்தில் தான் இந்த அமைப்பும் பிறந்து இருக்கிறது. நிச்சயம் தங்களுக்கு பதவி உண்டு. மிக்க நன்றி. மீண்டும் பிறந்ததின வாழ்த்துகள்.

தோழி said...

'தமிழ் தொண்டு அமைப்பு' வாழ்க..!
தலைவர் ராதாகிருட்டிணன் வாழ்க..!
துணைத் தலைவர் தாமோதர் சந்துரு வாழ்க..!
செயலாளர் ஷங்கர் வாழ்க..!
துணை செயலாளர் சுந்தரா வாழ்க..!
பொருளாளர் சித்ரா வாழ்க..!
துணைப் பொருளாளர் ஹேமா வாழ்க..!
பொறுப்பாளர்கள் கதிர் (தமிழ் மொழி மட்டும்) வாழ்க..! ஜெஸ்வந்தி (பிற மொழிகள்) வாழ்க..!
எழுத்தாளர்களின் தொடர்பாளர் ரமேஷ் (தமிழ் உதயம்)வாழ்க..!
ஒருங்கிணைப்பாளர் தீபா (கபீஷ்)வாழ்க..!

என்னக்கு பதவியெல்லாம் வேணாங்க அடிமட்ட தொண்டரா இருந்து கோஷம் போடுறேன் பழகிப்போச்சு... :))

Radhakrishnan said...

இப்படி கோஷம் போடுபவர்கள் தான் செய்தித் தொடர்பாளாராக இருப்பதற்கு தகுதியானவர்கள். எனவே தாங்கள் செய்தித் தொடர்பாளர் ஆகிவிட்டீர்கள். இனி இருக்கும் பதவிகளுக்கு பதவி சம்பந்தபட்ட படிப்பு படித்தவர்கள் மட்டுமே பதவி ஏற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க நன்றி தோழி.

sathishsangkavi.blogspot.com said...

அண்ணே இந்த அமைப்புக்கு போட்டியா இன்னும் நாலு அமைப்பு வந்துகிட்டே இருக்கு....

என்ன எல்லாம் மொக்கை அமைப்புதான்....

பா.ராஜாராம் said...

:-))

Radhakrishnan said...

இது நிச்சயமாக மொக்கை அமைப்பு இல்லை. :) இந்த இடுகையின் நோக்கமே நகைச்சுவையாய் ஒன்றைத் தொடங்கி எப்படி ஒரு திறம்படைத்த அமைப்பாக மாற்றுவது என்பதற்கான ஒரு வழிமுறைதான். நீங்கள் நமது கலாச்சாரம், மருத்துவ முறைகளை மதித்து போற்றுவதால் உங்களை கலைகள், கலாச்சார பொறுப்பாளராக நியமிக்கிறேன். மிக்க நன்றி சங்கவி.

ஒன்றை எப்படித் தொடங்குவது என நினைக்கும்போதே உங்களுக்கு ஓராயிரம் யோசனைகளை தந்தார்கள் என அனைத்து மக்களின் பார்வையில் ஒரு அற்புத கவிதை படைத்தவரும், பா. ரா என்றாலே கவிதை தனித்துவம் கொண்டவரும், மனிதரின் மனங்களை படித்தவரும், 'மக்கா' என அனைவரிடமும் அன்புடன் பழகுவதாலும் தங்களுக்கு எழுத்தாளர்கள் நலம் பேணும் பொறுப்பாளர் பதவியை தங்களுக்கு அளிக்கிறேன். மிக்க நன்றி பா. ரா.