Tuesday 13 April 2010

இனிமேல் எழுதுவதற்கு என்ன இருக்கிறது?

பசியால் துடிதுடிக்கும் பிள்ளை,  வறுமையின் கொடுமையை வரிகளில் வைத்த கொடுமை. இதுபோல் எத்தனை பிள்ளைகள் பசியால் துடிதுடித்து செத்து இருக்கும்? இன்னும் சாகும்?

ஊழல், லஞ்சம் என உழைப்பாளர்கள் வீணடிக்கப்பட்டு விட்டதை விடிய விடிய எழுதிய விரல்களில் வலி. இன்னும் ஊழல்களாலும் லஞ்சத்தினாலும் வலி குறையாத மானுடம்.

கற்பு, பெண்கள், குழந்தைகள், என ஐம்புலன்களின் அடக்கம் பற்றி அதி சிரத்தையுடன் எழுதப்பட்ட விசயங்கள். பாலியல் கொடுமையால் பாழடிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

மதம், கடவுள் என்றே நல்வழி சொல்வதாய் புராணங்கள், பல நூல்கள். அதே மதங்கள் உற்சாகப்படுத்தும் தீவிரவாதங்கள். எத்தனை மனிதர்கள் உயிர் இழந்து போனார்கள்? பிரிந்தும் போனார்கள்?

விளை நிலங்களுக்கு ஏற்பட்ட பரிதாபம் குறித்து எழுதப்பட்ட குரல்கள். அழுகுரல்களைத் தவிர ஏதும் மிச்சமில்லை.

படிப்பதன் குறித்த அவசியம்! ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வு. ஏமாறும் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை?

சாதி, இனம், மொழி வேற்றுமையில் ஒற்றுமை. வரி வரியாய் சொன்ன விசயங்கள். வேற்றுமை களைவதே ஒற்றுமை என வெறுப்பை வளர்க்கும் கூட்டங்கள்.  எதுவும் முடிவதாய் தெரியவில்லை.

இப்படி எத்தனை எத்தனையோ விசயங்கள் எழுதியும், சொல்லியும் எதுவும் மாறவில்லை. இனிமேல் எழுதுவதற்கு என்ன இருக்கிறது?

7 comments:

vasu balaji said...

ஆமாம். அதேதான். சின்ன மோசமான மாற்றங்களுடனே:(

தமிழ் உதயம் said...

இனி மேல் தான் எழுதுவதற்கு நிறைய உள்ளன.

குலவுசனப்பிரியன் said...

//கற்பு, பெண்கள், குழந்தைகள், என ஐம்புலன்களின் அடக்கம் பற்றி அதி சிரத்தையுடன் எழுதப்பட்ட விசயங்கள். பாலியல் கொடுமையால் பாழடிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? //
இயற்கைக்கு விரோதமாக ஒன்றை சொல்லிவிட்டு நல்ல பலனை எதிர்பார்க்க முடியுமா?

//மதம், கடவுள் என்றே நல்வழி சொல்வதாய் புராணங்கள், பல நூல்கள். அதே மதங்கள் உற்சாகப்படுத்தும் தீவிரவாதங்கள். எத்தனை மனிதர்கள் உயிர் இழந்து போனார்கள்? பிரிந்தும் போனார்கள்?//
குலத்துக்கு ஒரு நீதி சொல்லிவிட்டு பிரிந்து கிடக்கிறார்களே என்று கவலைப் பட்டு என்ன பயன்.

//படிப்பதன் குறித்த அவசியம்! ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வு. ஏமாறும் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை?// பேராசைப் பற்றி விழிப்புணர்வு பெறச்செய்யலாம்.

போட்டி பொறாமைகளுக்கு முக்கியத்துவம் தருவதை விட்டு, அன்பையும் அறிவையும் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். நிச்சயம் ஒருவருக்காவது பயன்படும். மனம் உடைய வேண்டாம்.

Chitra said...

ஆத்ம திருப்திக்காக கூட எழுதலாமே........

Radhakrishnan said...

@ வானம்பாடிகள் ஐயா, உண்மைதான், எழுதுவதை எவரும் நிறுத்த வேண்டியதில்லை.

@ தமிழ் உதயம் ஐயா, உண்மைதான், எழுதிக் கொண்டே இருப்பதன் மூலம் வரலாறு குறிக்கப்பட்டு விடுகின்றன.

@ குலவுசனப்பிரியன் ஐயா, நல்லதொரு விசயங்களை மிகவும் நம்பிக்கையுடன் எடுத்துக்காட்டி இருக்கிறீர்கள். ஒருபோதும் எழுதுவதை மொத்தமாக நிறுத்தும் எண்ணம் எழுவது இல்லைதான்.

@ சித்ரா, உண்மைதான், அவ்வாறு சொல்லி சொல்லித்தான் இதுவரை பல விசயங்கள் எழுதப்பட்டு கொண்டே இருக்கிறது.

அனைவருக்கும் மிக்க நன்றி.

Paleo God said...

யோசிக்கத்தெரிந்த உயிரினங்களுக்கு, சட்டியிலிருப்பதும், அகப்பையிலிருப்பதும் எப்போதும் போதாது.

:))

Radhakrishnan said...

:) அதைத் தாண்டி வெளியிலிருப்பதும் கூட போதாதுதான்.