Friday 16 October 2009

கடவுள் = ஏழேழு உலகம் = ஒன்றுமில்லை

உலகம் எப்படி உருவாகி இருக்கும்?

பலருக்கும் தெரிந்திருக்கும், புரிந்திருக்கும்.

ஞானிகள் சொல்லி வைத்தது உண்மையென நம்பிடச் சொல்லும் அறிவியல்.

சூன்யத்திலிருந்துதான் எல்லாமேத் தொடக்கம்.

அந்த சூன்யம் எதில் தொடக்கம்?

சூன்யம், சூன்யத்தில் இருந்துதான் தொடக்கம்.

பெரு வெடிப்புக் கொள்கை தான் மிகச் சரியான கொள்கை என அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதே. பிறகு ஏன் தேவையில்லாமல் மற்றொரு சிந்தனை உலகம் எப்படி உருவாகி இருக்குமென!

ஒரு உலகம் என்றுதானே எல்லோரும் நினைத்து இருப்பார்கள். அதுதானே மிகவும் சரியாகக் கருதப்படுகிறது. இல்லையில்லை, பல உலகம் என சொல்லி வைத்திருக்கும் வேதங்கள் சொன்னதுதான் சரியெனச் சொல்லும் அறிவியலாளர்களும் உண்டு.

பெரு வெடிப்புக் கொள்கை பல விசயங்களை ஒழுங்காக விளக்குவதில்லை, அந்த ஒழுங்காக விளக்கப்படாத விசயங்களை விளக்கி இந்த உலகம் எப்படித் தோன்றியிருக்கும் என எந்த எதிர் கேள்விகளுக்கும் வாய்ப்பில்லாமல் செய்ய வேண்டும் என வரையறுக்கப்பட்டதுதான் பழுக்கம் கொள்கை.

ஆனாலும் இந்த பழுக்கம் கொள்கையை நிரூபிக்கக் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் பழுக்கம் கொள்கைக்கு மட்டும் தான் என எடுத்துக் கொள்ள முடியாது எனச் சொன்னதும் இந்த பழுக்கம் கொள்கையை உருவாக்கிய அறிவியலாளர்களான கூத், லிண்டே, ஸ்டெயின்ஹார்ட், மற்றும் ஆல்ப்ரெஹ்ட் மனதில் புழுக்கம் கொண்டனர்.

(தொடரும்)

8 comments:

கலகலப்ரியா said...

ஆஹா.. சீக்கிரம் மீதியையும் எழுதுங்க.. v. interesting..

யாரோ ஒருவர் said...

சூன்யத்திலிருந்துதான் எல்லாமேத் தொடக்கம்.

vasu balaji said...

ரொம்ப இண்ட்ரஸ்டிங் சார். உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்.

கிருஷ்ண மூர்த்தி S said...

தலைப்பில் இருக்கும் சமன் பாட்டில் உடன்பாடு இல்லையே!

ஈரேழு உலகங்கள் என்பன வெவ்வேறு தளங்கள் என்று அர்த்தப் படுத்திக் கொண்டு பாருங்கள், நீங்கள் சொல்லும் சமன்பாடு சரியா, இல்லையா என்று!

உண்டு அல்லது இல்லை என்பதே நீங்கள் என்ன தளத்தில் இருந்து, எதைப் புரிந்துகொண்டீர்கள், எப்படிப் புரிந்துகொண்டீர்கள் என்பதைப் பொறுத்தது. கொஞ்சம் யோசித்துப்பார்த்துவிட்டு, எனக்குப் பதில் சொல்லுங்கள்!

babusam said...

கடவுள் -> ஒன்றுமில்லை -> ஏழேழு உலகம் = 7வெவ்வேறு தளங்கள்
இப்படி அர்த்தப் படுத்திக் கொண்டு பாருங்கள் விளங்கும்

Radhakrishnan said...

அனைவருக்கும் மிக்க நன்றி.

ஒன்றுமில்லை என்பதில் இருந்து உலகங்கள் எழுந்தது. எழுந்த உலகங்களில் கடவுள் காணப்பட்டது எனப் பொருள்படுத்திப் பார்த்தால் எல்லாம் சமமாகத் தெரியும் என நினைக்கிறேன் கிருஷ்ணமூர்த்தி ஐயா.

மிக்க நன்றி பாபுசாம் ஐயா.

சுந்தரா said...

பழுக்கம் அறியவும் புழுக்கம் புரியவும் ஆவல்.

தொடருங்க ரங்கன்.

Radhakrishnan said...

மிகவும் நன்றி சகோதரி, எழுத நினைத்தும் எழுதிட இயலாத வண்ணம் நேரத்தை அமைத்துக் கொள்வதால் தாமதம் ஏற்படுகிறது.