Wednesday 31 October 2012

அல்வா கிண்டும்

நடிகையாகும் முன்னரே
நன்மங்கை
அட்டகாசமாய் கிண்டுவார் அல்வா
அல்வாவின் ருசியை
ஆர்ப்பரித்து பேசி செல்வர்

பாதம் அல்வா பாங்குடனே
பிஸ்தா அல்வா பிசகாமல்
கேரட் அல்வா கவனத்துடன்
இனிப்பை அளவுக்கு
சற்று தூக்கலாய்
கிண்டிய அல்வாவுக்கு
கிறங்கித்தான் போவோர் பலர்

நடிகையான பின்னரும்
நன்றாகவே கிண்டுவார் அல்வா
அல்வாவின் பக்குவம்
அவருக்கு மட்டுமே தெரிந்தது போல்
தினமும் கிண்டித்தான் வைப்பார்

அல்வாவை எவருக்கும் 
அவராக சென்று தந்ததில்லை 


அரசியலுக்கு வந்த பின்னர்
அல்வாவின் தேவை
அளவுக்கும் அதிமாகிப் போனது
ஆட்கள் எல்லாம்
வைத்துக் கொள்வதில்லை
அவரேதான் எசமானி
சாமானியனும் மறுக்காமல்
அல்வாவின் பெருமை பேசுவர்

அளவுக்கு அதிகமான அல்வா
கிண்டியவருக்கு ஒருபோதும்
தந்ததில்லை பிரச்சினை
தானாக சென்று
உண்டு களித்து இருந்தோர்க்கு
உள்ளதே எக்கணமும் பிரச்சினை

அல்வாவை எவருக்கும்
அவராக சென்று தந்ததில்லை
சொல்வாக்கு இல்லாது போனாலும்
செல்வாக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை
கிண்டித்தான் மட்டுமே வைக்கிறார் அல்வா


4 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

நீங்களும் நல்லாத்தான் கிண்டிருக்கீங்க.

G.M Balasubramaniam said...


அவருக்கே அல்வா கொடுப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதும் மறுக்கவோ மறக்கவோ முடியாது அல்(ல)வா.?

Radhakrishnan said...

மிக்க நன்றி தின பதிவு.

மிக்க நன்றி ரஹீம்

மிக்க நன்றி ஐயா. ரசித்தேன். ஆனால் அவர் அல்வா பிறரிடம் வாங்குவதும் இல்லை. கொடுப்பதும் இல்லை.

அவர் கிண்டித்தான் வைக்கிறார் அல்வா.
நெருப்பு என தெரிந்தே
அதில் விழும் விட்டில்
பூச்சிகளாய் இன்னமும் இருக்கின்றனர்.

Unknown said...


Yesterday, while I was at work, my cousin stole my iphone and tested to see if it can survive a 30 foot drop, just so she can be a youtube sensation. My iPad is now broken and she has 83 views. I know this is totally off topic but I had to share it with someone! www.gmail.com login