Thursday 31 January 2013

தமிழக முதல்வர் மிகவும் பயப்படுகிறார்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விடும் என தமிழக முதல்வர் மிகவும் பயப்படுகிறார். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டே  ஒரு திரைப்படத்தை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அவர் அறிவித்ததை கண்டு பெரும்பாலான அமைப்புகள் மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டு இருக்கின்றன.

இனிமேல் சட்ட ஒழுங்குதனை  சீர்குலைய செய்வோம் என ஒவ்வொருவரும் அவரவருக்கு வேண்டியதை நிறைவேற்ற அரசுவிடம் மனு கொடுக்க ஆயத்தமாகிறார்கள் என அதிகாரபூர்வமான செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

திருடர்கள் அமைப்பு:  
உறுப்பினர்கள்: நான்கு கோடி 

எங்களை எந்த தொந்தரவும் செய்யாமல் திருட வழி வகுக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால்  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விடும் அபாயம் இருக்கிறது.

சாதி கட்சி:
உறுப்பினர்கள்: ஏழரை கோடி 

தமிழகத்தில் உள்ள அனைத்து சாதியினர்களும் இனிமேல் வன்னியர்கள் என்று அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்காத பட்சத்தில் எங்கள் உறுப்பினர் கணக்கு பொய்யாகும் சாத்தியம் உள்ளது, அதோடு மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு சாலைகளில் குவிக்கப்படும்.

அரசியல் கட்சி: 
உறுப்பினர்கள்: கணக்கு காட்டப்படவில்லை 

இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்தில் அரசு கவிழ வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுக ஆளும் கட்சி என போஸ்டர்கள் ஒட்டப்படுவதுடன் தனித்திராவிட நாடு அமைக்கப்படும்.

மொடாக்குடியர்கள் அமைப்பு:
உறுப்பினர்கள்: ரேஷன் கார்டு இல்லை. 

வீட்டுக்குழாயில் தண்ணீர் பதிலாக மதுபானம் வரவேண்டும்.

இன்னும் இன்னும் தொடரும்...

'அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்'


5 comments:

மட்டை ஊறுகாய் said...

ம்ம்ம்ம் கலக்குங்க..

Radhakrishnan said...

அது சரி. எனக்கு மனிதர்களின் உணர்வுகள் தான் மிக முக்கியம். நகைச்சுவை எனினும் ஏதாவது வரிகள் நீக்கப்படுவேண்டுமெனில் நான் நீக்கிவிட தயார். சரிதானே ஊறுகாய்.

புரட்சி தமிழன் said...

யார பார்த்து என்ன சொல்லறீங்க பயப்படுகிற ஆளா நம்ம முதல்வர். இந்த விஸ்வரூபம் பிரச்சினையில் விஸ்வரூபம் எடுக்கவேண்டிய பிரச்சினைகளை மறந்துபோக வச்சிருக்காங்களே அது தெறியலையா?

அரசியல் சோதனை சாலையில் முதல்வர் அவர்கள் செய்த சோதனை வெற்றி பெற்றுள்ளது.

எந்த இக்கட்டான சூழலிலும் உப்புக்கு உதவாத பிரச்சினைகளைக்கூட தூண்டி மக்களின் கவனத்தை திசை திருப்பமுடியும் என்பதற்கு இதைவிட ஒரு பெரிய சான்று தேவையில்லை.

KOMATHI JOBS said...

Power cut maranthu pochu DUm DUm DUm!
Kaveri pirachinai- Dum Dum Dum!
Koodngulam Dumdumdum!
Puthiya Thalaimai seyalagam Dum Dum DUm!

Arasiyal Kolaigal Maraikkap pattathu Dum DUmDum!

Radhakrishnan said...

ஆஹா புரட்சி தமிழன். சரிதான்.

ஆஹா கோமதி. உண்மைதான்.