Thursday, 24 January 2013

இவனுங்க தீவிரவாதிங்கதான்

விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்த  சில அமைப்புகள் முதலில் இதை, இஸ்லாமிய தீவிரவாதம்  தடை விதிக்க ஆர்ப்பாட்டம் நடத்தட்டும்.

விஸ்வரூபம் எனும் பெயரை அரபியே மொழி வடிவத்தில் அமைத்து இருக்கிறார் கமல். கமல் தெரிந்தே தான் எல்லாம் செய்து இருக்கிறார். கமல் குறி வைத்து இருப்பது ஒசாமா போன்ற வகையறாக்களை, சாதாரண முகம்மதுகளை அல்ல.

கமல்... எதற்கு அந்த அமைப்புகளுக்கு எல்லாம் படம் போட்டு காட்டுறீங்க? அவர்கள் என்ன தணிக்கை குழுவில் உறுப்பினர்களா? 

தமிழக அரசு தனது கோமாளித்தனத்தினை மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டு இருக்கிறது.படம் பார்த்து கலவரம் பண்ணும் அளவுக்கு மதி கெட்டு போனதா தமிழகம்? கலவரம் பண்ணுவதற்கு என அறிக்கை வேந்தர்கள் இருக்கிறார்களே! அவர்களை அல்லவா முடக்க வேண்டும்! இதெல்லாம் இருக்கட்டும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்து தமிழக அரசே! 

ஒரு சில முஸ்லீம்களின் நடவடிக்கையினால் மொத்த முஸ்லீம்களுக்கும் கெட்ட பெயர் என்பதை சராசரி முஸ்லீம்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் முஸ்லீம்கள் அல்லாதவர்களிடம் இது குறித்து கேட்டால் முஸ்லீம்கள் பற்றிய கண்ணோட்டம் வேறு மாதிரிதான் இருக்கிறது. 

சமீபத்தில் லண்டனில் உள்ள ஒரு இடத்தில் சில முஸ்லீம்கள் 'இது எங்க ஏரியா, இப்படி உடை உடுத்தாதே, இங்கே குடிக்காதே என போவோர் வருவோர்களிடம் வம்பு செய்து இருக்கின்றனர்'. இப்படி இவர்கள் நடந்து கொள்வதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லீம்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகிறார்கள். இதுதான் கமல் சொன்ன கலாச்சார தீவிரவாதம். நிறைய நபர்கள் இங்கிலாந்து அரசின் உதவித் தொகையின் மூலம் பிழைப்பு நடத்தி வருபவர்கள். 'உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யும் கோமாளிகள்' இருக்கும் வரை ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். 

சல்மான் ருஷ்டியை மிரட்டிய அதே கும்பல்களின் வழித் தோன்றல்கள் தான் இவர்கள் எல்லாம். படைப்பாளியை மதம் என்கிற எந்தவொரு மதம் பிடித்த பெயரில் மிரட்டும் எவரும் தீவிரவாதிதான். 

'நான் எழுதியதை நீங்கள்  தடை செய்ய துடித்தால் நீங்கள் மதிக்கும் மத நூல்களை எல்லாம் தடை செய்ய நான் எதற்கு துடிக்க கூடாது என ஒவ்வொரு படைப்பாளியும் உள்ள குமுறல்களுடன் தான் இருப்பான்' 

இப்பொழுதெல்லாம் எதற்கு எடுத்தாலும் கைது என முண்டாசு கட்ட ஆரம்பித்து விட்டார்கள். கருத்து சுதந்திரம் என்பதன் சுதந்திர அளவு எதுவென புரியவில்லை.

கமல், தான் ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி மற்றும் ஒரு வியாபாரி என்பதை நிரூபித்து கொண்டு இருக்கிறார். பீத்தினா ஊத்திக்கும் என்பது அவருக்கு தெரியாமலில்லை. ஆனால் திறமை இருக்குமிடத்தில் கர்வம் இருக்கத்தான் செய்யும். கர்வம்தனை வெளிக்காட்டாமல் பணிவுடன் பாசாங்கு போடுபவரைத்தான் எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது. தீவிரவாதிகளை விட மிதவாதிகளாக வேசம் போடுபவர்களைத்தான் உலகம் கொண்டாடி வருகிறது. 

வாளால் வெட்டுபவனை விட 
வார்த்தைகளால் வெட்டுபவன் 
மிக மிக கொடியவன்!

உலகம் இப்போது பழைய புதினத்தின் அடிப்படையில் புதிதாக வரலாறு எழுதிக் கொண்டு இருக்கிறது. 

விஸ்வரூபம் - திரைப்படம் வெளியாகும் முன்னரே ஒரு வெற்றி சித்திரம் தான். சிலருக்கு கண்களில் எரிச்சல் தந்து இருக்கிறது, சிலருக்கு கண்களில் குளிர்ச்சி தந்து இருக்கிறது. 

படத்தின் கதை இந்த வரிகளில் ஒளிந்து இருக்கிறது. கணவனின் பழைய வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!

எவர் என்று  நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய் 
விதை ஒன்று முளைக்கையில் 
வெளிப்படும் முழுரூபம் 

எவர் என்று  நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய் 
விதை ஒன்று முளைக்கையில் 
வெளிப்படும் புதுரூபம் 

எவர் என்று  நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய் 
விதை ஒன்று முளைக்கையில் 
வெளிப்படும் சுயரூபம் 

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா!


விஸ்வரூபம் 

அடுத்து எவராவது 'ஔரங்கசீப்' என்ற படம் எடுக்கட்டும்! 

10 comments:

Unknown said...

I liked very much. Thanks

அஹோரி said...

I support Kamal Hasan.

சார்வாகன் said...

Good post!.
I support kamalhasan!!

http://aatralarasau.blogspot.com/2013/01/blog-post_3377.html
Thank you

வேகநரி said...

பதிவுக்கு பாராட்டுகள்
//உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யும் கோமாளிகள் இருக்கும் வரை ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே இருக்கும்//
தனது கூடாரத்துக்குள் அரபு ஒட்டகத்திற்கு இடம் கொடுத்தால் அப்படி தான்.

ராஜ நடராஜன் said...

நான் எப்பொழுதும் பதிவின் கருத்தோடு எழுத்து நடையை ரசிப்பவன்.சொல்லும் முறை கருத்துக்கு அழகு சேர்க்கிறது.

ராஜ நடராஜன் said...

அவுரங்கசீப்பை கொஞ்சம் நோட்டம் விட்டேன்.வடமாநிலங்கள் போல் தமிழக முஸ்லீம்கள் அரேபிய வழி வந்தவர்கள் அல்ல.ஆனால் அரேபியர்களை கட்டிக்கொண்டு மாரடிக்கிறார்கள்.தீண்டாமையின் கொடுமைக்கு பயந்து மதவாத தீயில் போய் விழுந்து விட்டு அதிலும் சிலர் ஓவர் சென்சிடிவ் ரகமாக இயக்க ரீதியாக எச்சில் வழிய,கண்கள் பிதுங்க பேசுபவர்களாகவும் தமது தீவிரத்தன்மையை அப்பாவி முஸ்லீம்கள் மேலும் திணிக்கிறார்கள்.

Unknown said...

தமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை!

சிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள்
பரப்புங்கள் தமிழ் நாத்தம்.... தமிழில் மணம்
please go to visit http://tamilnaththam.blogspot.com/

Unknown said...

தமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை!

சிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள்
பரப்புங்கள் தமிழ் நாத்தம்.... தமிழில் மணம்
please go to visit http://tamilnaththam.blogspot.com/

Radhakrishnan said...

அனைவருக்கும் நன்றி.

எனக்குத் தெரிந்த, பழகிய 'முஸ்லீம்' நண்பர்கள் அனைவருமே மிகவும் சிறந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என நினைக்கும்போது நெகிழ்வாகவே இருக்கிறது.

அவரவர் கொள்கையில் மிகவும் பிடித்தமானவர்களாக இருந்து கொண்டு, பிறருக்கு இடையூறு விளைவிக்காமல் இருந்தால் அதில் தவறு ஏதும் இல்லை.

எந்த உயிரினமும் தன்னை பிற உயிர் சீண்டினால் பதிலுக்கு தன்னை காத்து கொள்ள போராட முயற்சிக்கும், அல்லது தப்பித்து கொள்ள வழி பார்க்கும்.

மதங்கள் வாழ்க்கை நெறிக்காக கொண்டு வரப்பட்டவை, ஆனால் அவைகளை, வாழ்க்கையை நெறிக்க பயன்படுத்துவது நமது பலவீனம்.

வாழ்க மனிதம்.

Unknown said...

எமது அனுபவமும் அஃதே!