Thursday 19 May 2011

எப்படி காதலிப்பது

வாழ்க்கையில் காதல் மிகவும் சுவராஸ்யமானது. ஆனால் எப்படி காதலிப்பது? 

வாழ்க்கையில் காதல் ஒருமுறைதான் வருமாம். ஆனால் எவரை காதலிப்பது? 

திரைப்படங்களில் காட்டப்படும் காதல் காட்சிகள் பல மிகைப்படுத்தப்பட்டவை என சொன்னாலும், உண்மையான வாழ்க்கையில் காதல் மிகைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. 

'நீ இல்லையினா நா செத்து போயிருவேன்' வெறும் பேச்சுக்காக பேசப்பட்ட வசனங்கள் இல்லை இவை. பலர் இறந்து போயிருக்கிறார்கள். 

'மனசுக்கு பிடிச்சவரை காதலிச்சம், ஆனால் கல்யாணம் பண்ண முடியலையே' எனும் ஏக்கத்தில் பலர் வாழ்வதாகத்தான் சொல்கிறார்கள். 

காதல் வெகு அதிகமாகவே கொச்சைப்படுத்தப்படுவதும் உண்மைதான். 

அப்படி என்னதான் காதல்?! 

காதல் புரிய முடியாதது என்கிறார்கள் புரிந்து கொண்டவர்கள் போல! 

காதலின் சுவையை அறியாதவரை காதல் இனித்து கொண்டிருக்கும் என்கிறார்கள் பலர். 

காதலிக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் காதலிப்பதில்தான் ஒரு அலாதிப் ப்ரியம் இருக்கிறது. 

எப்படி காதலிப்பது? எவரை காதலிப்பது? 

காதல் சொல்லிக்கொண்டு வருவதில்லை. காதல் இவரை காதலி என கை காட்டுவதும் இல்லை. 

காதல் மனதில் தோன்றும் ஒரு உணர்வு. இந்த காதல் ஒரு விதமான நோய் என சொல்லி வைத்தார்கள். 

நோய் தீர்ந்துவிட்டால் காதல் இல்லாது போய்விடும் போல. 

இந்த காதல் பற்றிய பல காவியங்கள் மாபெரும் வெற்றி பெற்று இருக்கின்றன. காதலித்து வாழ்தலில் இருக்கும் சுகம் எதிலும் இல்லை என ரகசியமாகவே காதல் புரிந்து கொண்டிருக்கிறார்கள். கள்ளக்காதல். 

எது எப்படியெனினும் எப்படி காதலிப்பது? எவரை காதலிப்பது? 

காதல் புரிந்து கொண்டே பலரும் கேட்டு கொள்ளும் கேள்விதான் இது. 

காதல் ஒருபோதும் எவருக்குமே ஒழுங்காக வந்தது இல்லை. எவருமே முறையாக காதலித்ததும் இல்லை. 

8 comments:

ரிஷபன் said...

காதல் ஒருபோதும் எவருக்குமே ஒழுங்காக வந்தது இல்லை. எவருமே முறையாக காதலித்ததும் இல்லை.

ரத்தினச் சுருக்கமாய் சொல்லி விட்டீர்கள்

Chitra said...

எவருமே முறையாக காதலித்ததும் இல்லை.


..... It is not science. It is a mind over matter. :-)

Unknown said...

காதல் ஆலோசனைக்கோ விவாதத்திற்கோ உரிய பொருளன்று. சம்மந்தப்பட்ட இருவர் மட்டுமே அதன் உண்மைநிலை உணர முடியும்.

Radhakrishnan said...

மிக்க நன்றி ரிஷபன்.

Radhakrishnan said...

அதுவும் சரிதான், ஆனால் காதலை 'கெமிஸ்ட்ரி' என்றே சொல்கிறார்கள். மிக்க நன்றி சித்ரா.

Radhakrishnan said...

உண்மை நிலை எதுவென்பதுதான் மிகவும் கேள்விக்குறியது. சரிதான். மிக்க நன்றி கலாநேசன்.

G.M Balasubramaniam said...

காதல் பற்றி பலருக்குப் பலப்பல அபிப்பிராயங்கள். காதல் ஒரு கானல் நீர். கதலைப் பற்றிய என் கோணம் பதிவாகி இருக்கிறது. படித்துப் பாருங்களேன். YOU HAVE PROMISES TO KEEP.! I REMIND YOU SIR.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா. விரைவில் தொடர்வோம்.