Sunday 1 May 2011

கூட்டி கழித்தல்

கூட்டி கழித்தல் 
மனிதர்களின் அற்புத விளையாட்டு 

தேவையெனில் கூட்டுவதும்
தேவையற்றதெனில் கழித்தலும்
பரம்பரையாய் வந்த விளையாட்டு 

லாப கணக்குதனில் கூட்டுதலும்
நஷ்ட கணக்குதனில் கழித்தலும்
கால கணக்குகளின் விளையாட்டு 

கூட்டுதலிலும் கழித்தலிலும் 
மனம் வைத்தே பெருக்குவதில்
சிறுத்து போன மனித விளையாட்டு! 


5 comments:

Unknown said...

nice

Unknown said...

மனக்கணக்கு....

Yaathoramani.blogspot.com said...

கணக்கச்சிதமான வார்த்தைகள் கொண்டு
வகுத்து வைத்தவனின்
நுட்பம் புரியாது
பெருக்க மறுத்து
கூட்டியும் கழித்தும்
விடைவராது தவிக்கும்
விந்தை மனிதர் குறித்த
உங்கள் கவிதை அருமை
தொடர வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

வாழ்க்கை கணக்கு வழக்கு நிரம்பியது.

Radhakrishnan said...

மிக்க நன்றி சிநேகிதி, கலாநேசன், ரமணி மற்றும் தமிழ் உதயம் ஐயா.