Tuesday 4 January 2011

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)

1. 


கதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் தமிழில் எழுதிக் கொண்டிருந்தபோது மருத்துவம் சம்பந்தமாக எழுத இயலுமா என என்னை நோக்கிக் கேட்டபோது இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என ஓரிரு வருடம் முன்னர் சொல்லி இருந்தேன். 'கதை விடுவது மிகவும் எளிது' என நினைத்துக் கொண்டு மருத்துவம் சம்பந்தமாக எழுதுவது பற்றி சிறு முயற்சி கூட எடுத்ததில்லை.

கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக ஆங்கில மொழியிலேயே பயின்று வந்ததின் காரணமாக பல ஆங்கில சொற்களை தமிழ்படுத்துவதில் இருக்கும் சிரமம் ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை எனும் தொடரை எழுதும்போது அறிந்தேன். ஒரு விசயத்தை வெளியில் சொல்ல வேண்டுமெனில் இருக்கும் சிரமத்தைப் பொருட்படுத்தாது எழுதுவது மிகவும் அத்தியாவசியமாகும். அதன் பொருட்டே ஆஸ்த்மா பற்றிய ஆராய்ச்சித் தொடரை எழுத முயற்சி எடுத்து இருக்கிறேன்.

தமிழில் எழுதுவதின் மூலம் விசயங்களைத் தவறாகச் சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமுடன் இருக்க முயற்சி செய்கிறேன்.

சுவாசம் நன்றாக இருந்தால்தான் இந்த பூமியில் சுகவாசம் செய்ய இயலும். அந்த சுவாசத்தில், சுவாசக் குழலில், சுவாசப் பைகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அது எதனால் ஏற்படுகிறது, என்னென்ன ஆராய்ச்சிகள் உலகில் செய்து வருகிறார்கள், என்னென்ன மருந்துகள் நடைமுறையில் இருக்கின்றன என்பது குறித்து விரிவாக, விளக்கமாக விரைவில் தொடர்வோம்.


13 comments:

pichaikaaran said...

தொடருங்கள்

suneel krishnan said...

தொடங்குக்கள் :) தங்களுக்கு புத்தாண்டு நல வாழ்த்துக்கள்

சேக்காளி said...

//கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக ஆங்கில மொழியிலேயே பயின்று வந்ததின் காரணமாக பல ஆங்கில சொற்களை தமிழ்படுத்துவதில் இருக்கும் சிரமம் ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை எனும் தொடரை எழுதும்போது அறிந்தேன்//.
இருந்தும் தமிழில் எழுத முன் வந்திருப்பதற்கு நன்றி.

Anand Kumar said...

thank you for writing about ashthma in tamil.
k.anand

ஹுஸைனம்மா said...

waiting...

Radhakrishnan said...

மிக்க நன்றி பார்வையாளன்

மிக்க நன்றி டாக்டர்

மிக்க நன்றி சேக்காளி

மிக்க நன்றி அபரஞ்சி

மிக்க நன்றி ஹூசைனம்மா

விரைவில் தொடங்குகிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

GOOD POST

அன்புடன் நான் said...

பயனுள்ள பதிவுக்காக.... காத்திருக்கிறோம். தொடருங்க.

Unknown said...

ஏன் இப்போதெல்லாம் பதிவுலகம் பக்கம் வருவதேயில்லை..
அதிகம் வேலையா?

Unknown said...

ஆஸ்துமா பற்றிய உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம்..

சிவகுமாரன் said...

பயனுள்ள தொடர். தொடருங்கள்

Radhakrishnan said...

மிக்க நன்றி சி.பி. செந்தில்குமார்.

மிக்க நன்றி கருணாகரசு

மிக்க நன்றி பாரத் பாரதி, கொஞ்சம் அதிகம் வேலை தான், வலைப்பூவில் கவனம் செலுத்த இயலவில்லை. விரைவில் சரியாகிவிடும்.

மிக்க நன்றி சிவகுமாரன்.

Anisha Yunus said...

நல்ல பதிவு, தொடரை வெகு சீக்கிரமே எதிர் பார்க்கிறேன்ண்ணா, நன்றி. :))