Tuesday 3 August 2010

எனது பதிவுகளை தாராளமாக திருடுங்கள்

பதிவுகள் திருட்டு போவது பற்றி எனக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை என நினைக்க வேண்டாம். ஒருவர் மிகவும் சிரமப்பட்டு ஒரு விசயத்தை பற்றி எழுதியதை கொஞ்சம் கூட கவலை இல்லாமல் பல இணையதளங்களில் குறைந்தபட்சம் நன்றி என்று கூட சொல்லாமல் தாங்கள் எழுதியதை போல பதிவிட்டு இருப்பதை பார்த்து இருக்கிறேன். நன்றி என சொல்லி எழுதுங்கள் என அறிவுறுத்தப்பட்ட பின்னரும் அதை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாதவர்களை பற்றி எண்ணும்போது வியப்பாகத்தான் இருக்கிறது. நாங்கள் திருடவில்லை, நல்ல விஷயங்களை பகிர்கிறோம் என மிகவும் எளிதாக சொல்லிச் செல்கிறார்கள்.

எழுதியவர்களுக்குத்தான் எழுத்தின் வலியும், வலிமையும் புரியும். இது குறித்து மறுபதிப்பு என ஒரு சிறுகதை எழுதினேன். மேலும் இது போன்று எவரோ எழுதிய புத்தகங்களை தலைப்பை மாற்றி தனது பெயரில் போட்டுக்கொள்வது போல ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை காட்சி அமைத்து இருப்பார்கள். பிறர் எழுத்தை தனது எழுத்து என சொல்ல மனதில் தைரியம் அதிகமாகத்தான் வேண்டும். இந்த எழுத்து திருடர்கள் பற்றி என்ன சொல்வது?

தெரியாமல் தவறு செய்தவர்கள் திருந்திவிடுவார்கள். தெரிந்தே தவறு செய்பவர்கள்? ஜாக்கி சேகர் எழுதிய பதிவை பார்த்தபோது அவரின் வலி புரிய முடிகிறது. சி.பி. செந்தில்குமார் அவர்களின் செயல்பாடு, அவர் பதிவுலகில் தற்போது இருப்பதால் இது குறித்து விளக்கப்பதிவு தர முடிகிறது. இதுவே பதிவுலகிற்கு அப்பாற்பட்டவராக இருந்தால்???

உங்கள் எழுத்து திருட்டு போகாமல் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் அதற்கான முயற்சியில் இறங்குங்கள் பதிவர்களே. எவரும் நகல் எடுக்க முடியாதபடி வைத்திட வழி இருக்கிறது. பார்க்க சசிகுமார் அவர்களின் நமது பதிவுகளை பிறர் எடுக்காமல் முற்றிலும் தடுக்க. திருடுபவர்களுக்கு நாம் ஏன் வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்? ஆர்வ கோளாறில் நன்றி என பெயர் குறிப்பிடாமல் பலர் எழுதிவிடுவதுண்டு. இது தவறு என தெரியாமல் பலர் தவறி விடுவதும் உண்டு.

ஒரு எழுத்து பிரசுரமாகிறது எனில் அதற்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டது, எழுத்துக்கு அங்கீகாரம் எனில் எழுதியவருக்கும் அங்கீகாரம்தான். அடுத்தவர் பெயர் போட்டாலும் உண்மை என்றும் மறைந்து விடாது. பிறர் நமது எழுத்தை சுட்டும்போது 'அட' என எண்ணம் வரத்தான் செய்யும். அதுவே வேறொரு பெயரில் இருந்தால்!!!

எனது பதிவுகள் எல்லாம் திருடப்படும் என எனக்கு எந்தவித பயமும் இல்லை. அப்படி பயம் இருந்தால் இப்படி பிறர் திருடுவதற்கு ஏதுவாக அனைத்தையும் வெட்ட வெளியில் போட்டு இருக்கமாட்டேன். வீட்டை பூட்டி வைப்பது போல இந்த வலைப்பூவுக்கும் ஒரு பூட்டு போட்டு வைத்திருப்பேன். நான் அனுமதிப்பவர்கள் மட்டுமே வந்து செல்லுமாறு வைத்திருந்திருப்பேன். எவர் பெயரோ, நல்ல விசயங்கள் நாலு பேருக்கு சேரட்டும் என்றே இந்த விசயத்தில் இருக்கிறேன். நான் திருடினேன் என பிறர், எனது எழுத்தையே குறை கூறாமல் இருந்தால் அது போதும்.

இப்பொழுது கூட நான் எழுதிய கவிதையில் இருக்கும் படங்கள் எல்லாம் எனது நண்பர் ஒருவர் ஒரு தளத்தில் பதிந்த படங்கள்தான். அவர் பதிந்த படங்களுக்கு நான் எழுதிய கவிதைகளை அப்படியே இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன், அதை அந்த தளத்திலும் சொல்லி இருக்கிறேன். இருப்பினும் அந்த படங்கள் எல்லாம் நான் திருடியது என்றாகிவிடாது. அது போலவே பதிவர்கள் போடும் படங்கள் எல்லாம் அவர்களே கஷ்டப்பட்டு எடுத்ததா? எவரோ எடுத்த படங்களை தங்கள் பதிவுகளில் போடும்போது நன்றி சொல்லி இருக்கிறார்களா? சினிமா விமர்சனம் எழுதும் பதிவர்கள் எவராவது சொந்தமாக படங்களை போட்டு இருக்கிறார்களா? தாங்கள் செய்யும் தவறுகளை ஒருபோதும் நினைத்து பார்க்காத பதிவர்கள் தங்கள் பதிவுகளுக்கு மட்டும் கவசம் போட முனைவது ஏன்?

தலைவலியும், பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும். ஏனோ முன்னோர்கள் பல விசயங்களை தெளிவாகவே சொல்லி சென்றுவிட்டார்கள்.

என்னுடைய வேண்டுகோள் எல்லாம் வேறு எவருடைய பதிவையாவது திருடி எனது பெயர் போட்டு விடாதீர்கள் என்பதுதான். ;)

10 comments:

நசரேயன் said...

உங்க பதிவு எல்லாம் வேண்டாம், பணப்பை கொடுங்க

http://rkguru.blogspot.com/ said...

பதிவு எழுத்து திருடுபோகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையே....copy and paste பண்ணமுடியாத program செய்யலாம்....அப்படி இல்லை என்றால் ஒன்னும் செய்ய முடியாது..என் என்றால் பார்த்து படித்து எழுதினாலும் அது அவங்க பதிவாய் இடவும் முடியும்........இது ஒரு திருட்டு vcd போல தான்......எப்படினா cd வந்துடும்...

கோவி.கண்ணன் said...

//உங்க பதிவு எல்லாம் வேண்டாம், பணப்பை கொடுங்க//

ஆமாம் ஆமாம்

Paleo God said...

//என்னுடைய வேண்டுகோள் எல்லாம் வேறு எவருடைய பதிவையாவது திருடி எனது பெயர் போட்டு விடாதீர்கள் என்பதுதான். ;)//

நான் ’விவகாரமான’ பின்னூட்டத்திற்கு மட்டும் உங்கள் பெயர் யூஸ் பண்ணலாம்னு இருக்கேன்!! :))

Radhakrishnan said...

ஆஹா, பணப்பை மட்டும் தானே, தந்துவிட்டால் போச்சு. :) நன்றி நசரேயரே.

சுஜ்மலா மற்றும் சசிகுமார் எழுதி இருக்கிறார்கள். தேடி பிடித்து நேரம் இருக்கும்போது இணைத்து விடுகிறேன். நன்றி குரு.

ஆஹா, கோவியாரே. நன்றி.

ஹா ஹா, ஷங்கர். அதெப்படி இப்படி. ;) எனது பெயரில் எத்தனையோ நபர் உண்டு, அதனால் அதற்கெல்லாம் கலங்கமாட்டேன். நன்றி.

Unknown said...

//நான் ’விவகாரமான’ பின்னூட்டத்திற்கு மட்டும் உங்கள் பெயர் யூஸ் பண்ணலாம்னு இருக்கேன்!! :))//

இப்படி ஒரு வழி இருக்கா..
அண்ணே உங்க பெயரை அனுமதி இன்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்கிறேன்...

அபி அப்பா said...

\\/உங்க பதிவு எல்லாம் வேண்டாம், பணப்பை கொடுங்க//

ஆமாம் ஆமாம்\\

ஆமாம் ஆமாம் ஆமாம்.

அடுத்து

\\கே.ஆர்.பி.செந்தில் said...

//நான் ’விவகாரமான’ பின்னூட்டத்திற்கு மட்டும் உங்கள் பெயர் யூஸ் பண்ணலாம்னு இருக்கேன்!! :))//

இப்படி ஒரு வழி இருக்கா..
அண்ணே உங்க பெயரை அனுமதி இன்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்கிறேன்...
\\

இதுக்கும் ஒரு ரிப்பீட்டு!!

Radhakrishnan said...

நன்றி கே.ஆர்.பி செந்தில் மற்றும் அபி அப்பா அவர்களே.

எனக்குனு மட்டும் இந்த பெயர் சொந்தமில்லை. :) என் பெயரே நமது இந்திய திருநாட்டின் முன்னாள் ஜனாதிபதியான மேதகு.ராதாகிருஷ்ணன் அவர்களைப் பார்த்து காப்பி அடித்ததுதான்.

LDN Internal Team said...

திடுட்டு பதிவுகளால் பிரபலமானது யாராவது உண்டா? கெட்ட பெயரைதானே சம்பாதிக்கிறார்கள், ஆனாலும் பதிவு திருடர்கள் ஒன்றை புரிந்துகொள்ளட்டும், சொத்தில் பங்கு கேட்பதை போல பதிவுகளில் உரிமையெடுக்க பதிவர்கள் ஒன்றும் அவர்கள் தந்தையல்ல.

Radhakrishnan said...

சமீபத்தில் எனது பதிவு ஒன்று வேறு ஒரு தளத்தில் இருந்தது, அதைப் பற்றி எழுத இருக்கிறேன்.